FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on May 14, 2017, 12:09:17 AM

Title: கோடையில் கொஞ்சிடவே
Post by: சக்திராகவா on May 14, 2017, 12:09:17 AM
விரிந்த சிறகோடு
விட்டத்தில் தொங்கியும்
பறக்க முடியாத
விஞ்ஞான படைப்பு

இரும்பு கம்பியின் இடையில் சிக்கிய
காந்தவிசையதன்
செப்போடு சேரும் காதல் ஆசையோ
சுற்றவிட்டு வேடிக்க பார்ப்பது

வெளிவரும் காற்றோடும்
வெகுநேர உறவில்லை
வேறென்ன நிரந்தரம்
இந்த விளையாட்டு தினம்! தினம்!

கோடையில் கொஞ்சிடவே

மீண்டும் மீண்டும் மின்விசறி...

சக்திராகவா
Title: Re: கோடையில் கொஞ்சிடவே
Post by: SunRisE on May 14, 2017, 12:42:46 AM
சகோதரா

வீசும் காற்றுக்கு
ஒப்பனை மின் விசிறி
இயற்கையின் காற்றுக்கு
ஈடு இணை இல்லை

நல்ல வரிகளில்
சுருக்கமான கவிதை

வாழ்த்துக்கள்
Title: Re: கோடையில் கொஞ்சிடவே
Post by: SarithaN on May 18, 2017, 09:28:15 PM
வணக்கம் சக்தி சகோதரா

நடப்பு காலத்தின்
அத்தியாவசியம்
மின் விசிறியின்
உபயோகம்

காலத்தே அதன் மேன்மை
பகர்ந்தீர்கள் வாழ்த்துக்கள் சகோதரா