FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 13, 2017, 09:06:10 PM

Title: என் குழந்தையும் குறையுடையது
Post by: SarithaN on May 13, 2017, 09:06:10 PM
என் குழந்தையும் குறையுடையதுதான்


என் குழந்தையும்
குறையுடையதுதான்
என்னைபோலவே

மாற்றான் பிரசவத்தில்
உதித்த குழந்தை
குறையதை பக்குவமாய்
பெற்றவரிடமே ஓதுகின்றேன்

என் பிரசவமும் 
குறைகள் கொண்டதுவே
கால போக்கில் கண்களில்
துலங்குகிறது

ஈன்றவுடன் கொண்ட
மகிழ்வில்
குறைகள் ஏதும்
தெரிவதே இல்லை காதல்போல்

சரியென ஏற்பரோ இல்லை
இவன் யாரென நினைப்பரே
தவறுகளை ஏற்றோருக்கு நன்றி
கோவம் கொண்டோர் பொறுத்திடுக

செய்யும் சிறு தவறு கூட
ஆசானை மாணவனாய்
மாணவனை ஆசானாய்
விழத்தள்ளி ஏறிநிற்கும் கால கோலம்

புத்தியில் கூர்மை
உடலில் பெலன்   
சிந்தையில் சுத்தம் கொண்டு
இறைவனையே நம்பி 
பயபக்தியாய் இருங்கள்

எவரும் நிறைவாய் இல்லை உலகில்
இறைவனை அன்றி
மறவாதிருங்கள்


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: என் குழந்தையும் குறையுடையது
Post by: SunRisE on May 14, 2017, 12:46:47 AM
சகோதரா

அர்த்தங்கள் பல புதைந்த
படைப்பு
பார்ப்பாரின் கண்களுக்கு
ஐயங்கள் ஏற்படுத்தும்
முடிவில்லா முத்திரைகள்

வாழ்த்துக்கள்
Title: Re: என் குழந்தையும் குறையுடையது
Post by: SarithaN on May 20, 2017, 01:08:54 AM
வணக்கம் பிரியன் சகோதரா

நீங்க சொன்ன அளவுக்கு
இருக்கா தெரியவில்லை
ஆனால்
எனக்கும் சேர்த்தே வைத்தேன்
ஏனெனில் நானுமொரு
குறைவுகளின் பிறப்பிடம்தான்

நன்றி சகோ
Title: Re: என் குழந்தையும் குறையுடையது
Post by: ChuMMa on May 20, 2017, 12:23:11 PM
சகோ

மறைமுக அர்த்தங்கள் கொண்ட படைப்பு , சாமர்த்தியமான படைப்பு

" பெற்ற தாய்க்கு தன்  குழந்தை குறையுடன் பிறந்தாலும்
ஊரார் ஏசினாலும்,  அவள் அன்பில் குறைகள் தெரிவதில்லை
ஏனெனில் அது அவளின் உயிர் "

பார்ப்பவர்களின் கண்களில் பிழை இருப்பின்
குழந்தையின் கண்ணை பிடுங்குவது எவ்வைகையில்
நியாயம் ஆகும் ?

தவறை திருத்தலாம் , யாரின் தவறை ?

வாழ்த்துக்கள் சகோ