FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 13, 2017, 08:51:12 PM

Title: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: SarithaN on May 13, 2017, 08:51:12 PM
பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது

எங்கே போகிறாய் மனிதா 
கேவலம் பறவை மிருகமும்
காறி உமிழுதே பேயென உன்னை

பகுத்து உணரும் அறிவை
அதிகமாய் இறைவன் தந்தது
உனக்கே மனிதா
எம்மையும் வாழ்விப்பாயென

பறவை மிருகமும்
காறி உமிழுதே பேயென உன்னை

தனக்கு வெளியே
காண்பிக்கிறதே
இரும்பு குழாய்
இரட்டை துளிகளை

ஏந்தும் கைகளில்
விழவேயில்லை அவை

இரும்பு
தானும்
அழுவதை காட்டுகிறது

இரும்பு விடும் கண்ணீர்
அதன் வலியோ இல்லை
தண்ணீர்தேடி தன்னிடம்
ஏமாரும் மக்களுக்காய்
விடும் கண்ணீரோ

இந்த இரும்பு குழல்
படிக்காத மேதை
பாட்டன் காமராச் வீட்டில்
பூட்டி கழட்டியதோ
அவர் கட்டிய நீர் தேக்கங்களை
நினைத்தும் அழுகிறது போலும்

இரும்பும் இளகியது
அழுகிறது உயிர்களுக்காய்
அரசே எங்கே போனாய்
என்ன தான் செய்கிறாய்

இயல்பிலே இறைவன்
உயிர்களுக்காக்கிய
உயிர்க்கொடை தண்ணீர்

மாத்திரை முழுங்கவும்
நீர் இல்லை ஏழைக்கு - ஆனால்
நீர்வரம் நோயாய் பாவமாய் 
அடைப்பானில் சாபமாய் வாழுதே

குடிக்கவே இல்லையே
எப்படி குளிப்பாய்
குளிப்பதே குதிரை கொம்பு
உற்பத்தி எப்படி உண்டாகும்

புழுப்பிடித்து நாற்றமெடுத்து
சாகமுன் அரசியலை மாற்றிடு

உங்களின் உயிராம் நீரையே 
மாறி மாறி பணத்துக்கு
விற்பவனை ஆட்சியில்
அமர்த்தும்
பகுத்தறிவுகொண்ட மூட மனிதா

பதாகைகள் ஏந்தி
மானம்கெட்டு நிற்கிறாய்
யார் உன்னை கண்டுகொண்டார்
மறுமுறையாவது திருந்தி விடுவாயா

உனக்கு பதாகை பிடிக்க
கோசமிட முடிகிறது
நாங்கள் எங்கே போவோம்
யாரிடம் முறையிடுவோம்

பறவைகள் மிருகங்கள்
மரங்கள் உயிரினங்கள்
நாம் விடும் கண்ணீரும்
எழுப்பும் ஓலமும் உனக்கு
கேட்காது மனிதா

பறவை நான்
குஞ்சுக்கு இரைதேடி
நீருடன் கலந்து
தீத்த வேண்டும்

நீருக்காய் அலைந்தும்
நீரில்லை
கூடு திரும்பையில்
குஞ்சுக்கு உயிர் இல்லை
எங்கள் உயிர்
உயிர் இல்லையோ மனிதா

பறவை நான் அலைந்தும்
நீர்நிலையை காணேனே
மிருகங்கள் நிலை கொடிதென
உணராயா மனிதா

நீதிமன்றில் வழக்காட
நம்பிக்கை இல்லை
ஏனென்றால் அங்கே
நீதி இல்லை
உன் மனசாட்சி இரங்கினால் மட்டுமே விடியல்

எங்கள் துயர்நீக்க
உன்னை கண்டிக்க
வெள்ளத்தை இறைவன்
அனுப்ப முன் உன்னை மாற்றிக்கொள் மனிதா 

விடைசொல் எமக்கு
இப்படிக்கு
பறவைகள் மிருகங்கள்
மரங்கள் உயிரினங்கள் சார்பில்
பேசத்தெரிந்த பறவைகள்


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: SunRisE on May 14, 2017, 12:37:08 AM
சகோதரா

தாகம் கொண்ட எந்த
மனதும் கொண்டாடும்
உமது கவிதையின் தாக்கத்தை
வாழ்த்துக்கள்
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: MyNa on May 14, 2017, 09:28:35 PM
Vanakam sarithan..

kavithai varigal ellame vethanaiyin velipaada iruku..
Aararivu irukum manithane ivalavu thindadurapo paavam avaigal than enna seiyum??
Oru velai mirugangalukum paravaigalukum vaayirunthal enna ellam thitirukumnu yosichu parkum pozhuthu unga kavithai athuku bathil ah amaiyuthu..


vazhthukal sarithan.. marupatta sinthanaila arumaiyaana kavithai :)
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: SarithaN on May 20, 2017, 01:11:56 AM
வணக்கம் பிரியன் சகோதரா

உங்கள் ஊக்கம் அளிக்கும்
பண்பில் மகிழ்ச்சி

தாகம் கொண்ட
உயிர் அனைத்தும்
சாபத்தில் இருந்து
மீண்டிட வேண்டுவோம்

மிக்க நன்றி
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: SarithaN on May 20, 2017, 01:22:28 AM
வணக்கம் தோழி

பறவைகள் மிருகங்கள்
மீன்கள் மரங்கள் ஆமைகள்
அனைத்தோடும்
அன்பு கொண்டு உறவாடுவேன்

அவற்றின் மன நிலைகளையும்
சிந்தை செய்தே கிறுக்கினேன்

வீட்டிலே செல்ல பிராணிகளை
வளர்ப்பதும் பாதுகாத்து நேசிப்பதும்
உறவுகளையும் சக மனிதரையும்
அன்பு செய்ய வகை செய்யும்

உங்கள் கருத்துக்கு நன்றி மைனா
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: ChuMMa on May 20, 2017, 12:05:51 PM
சகோ

உண்மையான வரிகள்

நீர் சேகரிக்க தவறி விட்டோம்
மனிதம் வளர்க்க தவறி விட்டோம்

"புழுப்பிடித்து நாற்றமெடுத்து
சாகமுன் அரசியலை மாற்றிடு

நாமும் மாற வேண்டும்
அரசியலை மாற்ற வேண்டும்

அருமையான கவிதைகள்
வாழ்த்துக்கள் சகோ
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: VipurThi on May 21, 2017, 12:39:11 PM
sari anna :D aazhamana karuthu konda kavithai :) vaay konda manithargal seyum avalangalal paathikapadugindra vaayila jeevangalin nilamai rmba paavam
Title: Re: பறவையும் மிருகமும் நீரின்றி அழுகிறது
Post by: DeepaLi on May 21, 2017, 09:55:56 PM
Hi sarithan..... azhagana varigal...  unmaiya eduthu solra mari eludhi irukinga.. nice keeep on go....:)