FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on May 13, 2017, 08:32:53 PM
-
வேதங்கள் போதிக்க
விண்ணவர் தேவையில்லை
மேதைகளும் தேவையில்லை
ஜாதகங்கள் எடுத்துரைக்க
அறிவுரை வழங்கவும்
ஆக்கங்கள் புரியவும்
பிதாமகனும் தேவையில்லை
ஆறறிவுதான் இருந்தால்
சிற்றெறும்பு போதும்
சிறு துளைகள் தோன்றிவிடும்
யானைகளும் அடி சறுக்கும்
காலத்தின் கைப்பிடியில்
பகுப்பதும் பிரிப்பதும்
கனப்பதும் சினப்பதும்
தனிப்பதும் திகைப்பதும்
தன்மானத்துக்கு இல்லை என்றும்
இமயத்தின் உயரம்
ஆழ்கடலின் ஆழம்
கற்பகதருவின் வாசனை
கண்டோருமில்லை
வென்றோருமில்லை.
-
தோழி
உங்கள் எழுத்து நடை
பூவுக்கு பூச்சூடும் அழகு
ஆற்றலுக்கு உயிர் கொடுக்கும் அற்புத
முயற்சி
பகுப்பதும் பிரிப்பதும்
கனப்பதும் சினப்பதும்
தனிப்பதும் திகைப்பதும்
தன்மானத்துக்கு இல்லை என்றும்
தன்மானத்துக்கு இதைவிட
உதாரணம் இருக்க முடியாது
அருமை தோழி
-
அருமை தோழி உங்களின் கவிதை நடை.உங்களின் பல திறமைகளில் இந்த கவிதை எழுதுவது மிக அருமை.வளரட்டும் உங்களின் அழகு தமிழ் கவிதைகள்
-
ஸ்வீட்டி உங்க கவிதை வேற லெவல். ரொம்ப அர்த்தமான கவிதை. ஓவியத்துக்கு மட்டுமில்ல. ஆற்றலுக்கும் உயிர் கொடுத்திருக்கீங்க
-
உங்கள் பாராட்டுகளுக்கு நன்றிகள் தோழர்கள் Sunrise Jokeguy கார்த்தி .
sarithan.. விபூர்த்தி ரித்திகா நன்றிகள்.
சிறிய அறிவுக்கு எட்டிய சிறிய கவிதை மட்டுமே.
-
Jo ss :D kavithai varigal ennikaila chinnatha irukalam but karuthu alavula rmba perusu :D unga arivu atha vida perusu :D menmelum ezhutha vazhthukkal ss :D
-
வணக்கம் தோழி
பிடித்த வரிகள்
கனப்பதும் சினப்பதும்
தனிப்பதும் திகைப்பதும்
தன்மானத்துக்கு இல்லை என்றும்
வெப்ப சட்டியில்
வெடிக்கும் கடுகுபோல்
சொல் ஆள்கை
சினத்தோடு சீறிய
சிறுத்தை போல்
கவிதையின் வேகம்
வாழ்த்துக்கள் SweeTie
வாழ்க வளமுடன்