பூமிக்கு வந்த என் அழுகை கேட்டு
பூரிப்பில் கண்ணீர் கொண்டவளே
உன் உதிரத்தை எனக்கே
உருவமாய் தந்தவளே
என் கண்கள் தினம் தூங்க
உன் தூக்கம் தொலைத்தாயே
என் சிறு சத்தம் கேட்டாலும்
உன் பசி கூட மறப்பாயே
உந்தன் தாலாட்டை நான் ரசிக்க
என் கண்ணசைவை நீ ரசிப்பாயே
என் மழலை சிரிப்பிலே உந்தன்
மனதை தொலைப்பாயே
வருடங்கள் இருபதை கடந்த பின்னும்
மாறவில்லை நீயம்மா
உன் மடியோரம் தலை சாய்க்கும்
என்றும் உன் குழந்தை நானம்மா :D
ஆயிரமாய் உறவுகள் தான் வந்தால் என்ன
அன்னையெனும் உறவுக்கில்லை
என்றும் ஈடு
தாய் எனும் அன்பில் மிதந்திடவே தான்
கடவுள் கூட பிறக்கிறாரோ
குழந்தை எனும் உருவோடு.... :D
" இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன் மகளாய் மாற "
அனைத்து அன்னையருக்கும் எனது அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்