FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 13, 2017, 06:05:41 PM
-
நான்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!
அம்மா அப்பா
என்னை
கடைசியாக
மடியில்
வைத்துக்கொள்ள
நினைக்கலாம்..!!!
அக்கா தங்கை
என் கை
பிடித்து அழ
நினைக்கலாம்..!!
துனைவியாரோ
கடைசி
நிமிடத்திலாவது
அருகில் இருக்க
நினைக்கலாம்..!!
பெற்ற குழந்தை
என்னை
தட்டி எழப்ப
நினைக்கலாம்..!!
தொலைந்த
தோழியொருத்தி
கடைசியாய் என் கரம்
கோர்க்க வரலாம்..!!
கூட பழகிய
நண்பர்கள்
கடைசியாய்
கட்டித்தழுவி கதறி
அழுதிட விரும்பலாம்..!!
அன்பைக்
காட்டத் தெரியாத
நான் விரும்பியோர்
கடைசியாய்
என் தலைகோத
ஆசைப்படலாம்..!!
உறவற்ற
பெயரற்ற
செய் நன்றி மறவா யாரோ
கடைசியாய் என் பாதம்
தொட விரும்பலாம்..!!
உயிரற்று
போனால்தானென்ன..?
கடைசியாய் எனக்கும்
தேவையாய் சில
வருடல்கள்
இறந்த பின்
கண்ணாடி பேழைக்குள்
அடைக்காதீர்...!!
எல்லாம் அந்த ஒரே ஒரு
நாள் மட்டுமே..!!
கண்ணீருடன்....
யாரோ எழுதிய கவிதை....இதில் உள்ளவை அத்தனையும் நிதர்சனமான உண்மை...!!
-
வணக்கம் சும்மா சகோ
யாரோ எழுதியது
எங்கே எப்போது யார்
இதை எனக்கு உள்ளக
தகவலில் சொல்லுங்கள்
இல்லையேல் நீங்கள்
எழுதியதாகவே கருதுவேன்
நன்றி
-
வணக்கம் சும்மா சகோ
எந்த வரிகளை குறிப்பிட்டு
பாராட்டுவது வாழ்த்துவதென
நினைத்தால்
கவிதை முழுமையும்
பிரதி செய்திட வேண்டும்
அத்தனையும் நிதர்சனம்
நீங்கள் சொல்லியதுபோல்
எத்தனை பெருத்த வலிதனை
உண்டிருந்தால்
பருகி இருந்தால்
சுமந்திருந்தால்
இத்தனை துயர் பொங்கி
பாய்ந்திருக்கும்
உயிர் இருந்தும் பிணமாய்
மாறிய உள்ளத்துக்கு
உலகம் ஏங்குகிறது
அன்புள்ள உறவுக்காய்
யாருக்கோ நன்றி
உங்களுக்கும் நன்றி
-
சகோதரா
இருக்கும்போது தன வாழவில்லை
கடை நிமிடம் போகும்போது
நான் நாங்க போகின்றேன்
என்று
இறந்தவன் நம்மை பார்த்து
கேட்பது போன்ற வலிமை
கொண்ட வரிகள்
அருமை
-
யாரோ எழுதிய கவிதை ..
Aanal padikum anavaraiyum oru kanam yosika vaikum kavithai..
Arumaiyana sinthanai chumma.. vazhthukal :)
-
வணக்கம் சகோதரா
உங்கள் பதிலுக்காய்
காத்திருக்கின்றேன்
நன்றி