FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 08, 2017, 06:34:51 PM
-
நீரின் அருமை நான் உணர்ந்தேன்
குளியலறையில் நீராடையில்
குழாய் நீரை பாயவிட்டு
பாடிப் பாடி தேகம் நனைவேன்
குளியலின் நடுநிலை
சவர்க்காரம்
உடல் முழுதும் நுரையாய்
உண்டானது மின்வெட்டு
நின்றுபோனது குழாய் நீர்
வீட்டிலே யாரும் இல்லை
மாமன் மகளையன்றி
வெளியே செல்லவும் இயலாது
அவளை அழைக்கவும் முடியாது
சவர்க்காரத்தின் நுரைப்படிவங்கள்
இயல்பான எனதழகை
கெடுத்துச் சென்றது
நீரின்றி காய்ந்த போது
உண்டான சாபம்
நீரின் பெருமை சொல்லி சென்றது
முன்னர் போல் இல்லை இன்றெல்லாம்
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு
முன்னரெல்லாம் நான் முழுக
ஒரு மணி பொழுதுகள்
நீர்க்குழாய்கள் திறந்தே இருக்கும்
சுமார்
நான்கு நூறு குவளைநீர் வீணாகும்
காலத்தையும் வீணடிப்பேன்
நீரையும் விரையம் செய்வேன்
ஒரு நாள் கற்றபாடம்
நீரின் அருமை
உணர்ந்து கொண்டேன்
அரைமணி பொழுதுகள்
நூறு குவளை நீர் போதுமென பழகி
நிறைவும் கொண்டேன்
நீரது விரையமாகையில்
குருதியது ஓடுவதாய் உணர்க
குருதியே உயிர்
நான் உணர்ந்துவிட்டேன்
நீங்கள்?
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
நீரின் அருமை பெருமைகளை அளந்து சொன்ன உமது குளியல் அறையின் காட்சிகள் கண்முன்னே கண்டதுபோல் அமைந்திருந்தது. அருமை சகோதரர்.
-
Vanakam sarithan..
Intha kavithai enaku rombavum pidichiruku..
oru kathaiya kavithai vaayilaaga solitinga..
arumai sarithan .. vazhthukal..
kathai nu solavum than ninaivuku varuthu..
" thozhiyudan tholaipesiyil " .. itharkaana adutha paguthikaaga kathurukiren :D
-
வணக்கம் பிரியன் சகோதரா
நாம் நம்மை திருத்தாமல்
பிறருக்கு சீர் திருத்த தத்துவம்
சொல்வது நம்மை நாமே
ஏமாற்றும் செய்கை
உங்கள் கருத்துக்கு
மிக்க நன்றி சகோ
-
வணக்கம் தோழி
புரியும் படி
கருத்து உள்ளதாக
எழுத்துக்கள்
உணரப்படையில்
மகிழ்ச்சி
இங்கே உங்கள்
கருத்துரைக்கு
பதிலிட தாமதித்தேன்
குறைபொறுத்திடுக அனைவரும்
kathai nu solavum than ninaivuku varuthu..
" thozhiyudan tholaipesiyil " ..
itharkaana adutha paguthikaaga kathurukiren
உங்கள் இந்த கேள்விக்கு பதில்
கொடுத்து விட்டேன்
கதையை விரைவாக முடிக்கின்றேன்
உங்கள் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி மைனா