FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on May 06, 2017, 05:44:12 PM

Title: தமிழர்கள்
Post by: SunRisE on May 06, 2017, 05:44:12 PM
வர்ண முலாம் பூசும்
வார்த்தைகள்
காதலிக்கு தீட்டும்
காகிதத்தில் இருக்கலாம்.

உன் வாழ்க்கையில்
கரிய முலாம் பூசுவதேன்

நம் என்ன சிறகுகளுக்கு
வாழ்க்கைக்கு
பாலமாகவும் , ஏணி ஆகவும்
நம்மை ஏற்றி விட்ட முன்னோர்க்கு
நாம் என்ன செய்தோம்.

முன்னோர்களை பாராட்டி
முழுவிசை காகிதத்தில்
முலாம் பூச எழுதினால்
முடிந்து விடுமா ?

நீ எப்போது வாழ்வாய்
அவர்கள்
வாழ்ந்தது போன்று.

தமிழ் எம் மொழி
என மார் தட்டும்
எம் இனமே
அந்த தமிழ் தந்த
நம் முன்னோர்கள் தந்த
கலாச்சாரம் பண்பாடு
எங்கே தமிழா!

கால்களில் எட்டி
உதைக்கின்றாய் ஏன்?

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
இந்த சொல்லுக்கு
நியாயம்
உன்னிடம் இருக்கிறதா தமிழனே !

அன்பு செய்யுங்கள்
காதல் செய்யுங்கள்
அது மனிதனின் மகத்துவம்
எதை செய்தாயினும்
தமிழ் மரபினை மாண்பினை
மாற்றம்  செய்யாதீர்
மாண்பு மிக்க தமிழரே!

என்றும் பிரியன் :)
Title: Re: தமிழர்கள்
Post by: ChuMMa on May 06, 2017, 05:56:06 PM
தமிழா

நல்ல கவிதை எண்ணங்கள்

"பாலமகாயும்" அல்ல "பாலமாகவும்" என்பது தானே சரி ?! நீங்கள் நினைத்தது இதுவென்றால் மாற்றி கொள்ளவும்


கடைசியில்  "மற்றம் செய்யாதீர்"  "மட்டம்" அல்லது "மாற்றம்" ஏதேனும் பொருள் கொள்ளலாம்
தமிழில் எழுதிய தங்களுக்கு வாழ்த்துக்கள்

தவறு சுட்டி காட்டுவது என் நோக்கமல்ல சகோ
என் தவறாயின் கற்றுக்கொள்ளவே
நன்றி




Title: Re: தமிழர்கள்
Post by: SunRisE on May 06, 2017, 06:02:29 PM
தவறை சுட்டி கட்டுவது தவறில்லை நன்றி கூற வேண்டும் மிக்க நன்றி .
Title: Re: தமிழர்கள்
Post by: VipurThi on May 06, 2017, 09:54:12 PM
Sun bro azhagana kavithai :) oru thamizhan in Tamil unarvai thoondum kavithai :) menmelum thodarnthu elutha vazhthukkal bro :)
Title: Re: தமிழர்கள்
Post by: MyNa on May 06, 2017, 11:28:16 PM
Vanakam piriyan :)

தமிழ் எம் மொழி
என மார் தட்டும்
எம் இனமே
அந்த தமிழ் தந்த
நம் முன்னோர்கள் தந்த
கலாச்சாரம் பண்பாடு
எங்கே தமிழா!

கால்களில் எட்டி
உதைக்கின்றாய் ஏன்?

தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
இந்த சொல்லுக்கு
நியாயம்
உன்னிடம் இருக்கிறதா தமிழனே !

ezhimaiyaana varigalil aazhamaana karuthugal..
Ovvoru tamilanum satre sinthika vendiya kelvigalai ezhupirukinga.. arumaiyaana kavithai..
vazhthukal piriyan.. thodaratum kavipayanam  :)
Title: Re: தமிழர்கள்
Post by: SunRisE on May 07, 2017, 12:52:35 AM
நன்றி தோழி மைனா அவர்களே ,

உங்களுடைய கனிவான பாராட்டுக்கள் நிச்சயம் மென்மேலும் எழுத தூண்டும்
நன்றி சகோதரி .