FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 06, 2017, 02:03:33 PM
-
பயமாய் தான் இருக்கிறது
ரோட்டில் பிச்சை எடுக்கும்
பிச்சை காரியிடம் இல்லை
என சொல்கையில்
பயமாய் தான் இருக்கிறது
சுயநலமான நண்பனுடன்
பயணிக்கையில்
பயமாய் தான் இருக்கிறது
நிலவு போல் அவள் இருக்க
நிலவின் நிழல் போல இருக்கும்
நான் காதல் சொல்கையில்
பயமாய் தான் இருக்கிறது
நான் இல்லாமல் நீ இருப்பாய் -ஆனால்
நீஇல்லா நாட்களில் நான் வாழ்வதை எண்ணி
பயமாய் தான் இருக்கிறது
புதிதாக யாரேனும் பாசமாக
பேசுகையில்
பயமாய் தான் இருக்கிறது
நேசத்திற்காக நான் பழக
தேவைக்காக மற்றவர் பழக
பயமாய் தான் இருக்கிறது
ஏமாற்றுவதாய் நினைப்பவர்கள் முன்
ஏமாறுவதாய் நடிக்கையில்
பயமாய் தான் இருக்கிறது
கவிதை என்று எழுதியதை
நம்பி படிக்கும் உங்களை
எண்ணி
-நன்றி --சும்மா
-
Vanakam chumma..
Itha padikirapo thenali padathula kamal solrathu pola ellam baya mayam nu neenga solrathu pola iruku ;D
kavithaiya padichathum karuthu pathividavum yeno bayama than iruku.thotru viyathi pola intha bayam ::)
marupatta sinthanaila nalla kavithai chumma.. vazhthukal :)
-
வணக்கம் சகோதரா
பயங்களின் கவிதை
எனக்கான ஆறுதல்
அழகான கருத்துக்கள்
சொல்லும் கவிதை
பயமாய் தான் இருக்கிறது
கவிதை என்று எழுதியதை
நம்பி படிக்கும் உங்களை
எண்ணி
எனக்கும் இப்படி ஒரு நிலை
ஆனால்
நான் ஆயத்தமாய் இல்லை
நீங்களே உங்கள் கவிதையை
குறைப்பட வேண்டாம்
பலன் தரும் வகையில் உள்ளன
உங்கள் எழுத்துக்கள்
பயந்தால் பிணம் தான் சகோ
துணிந்து நிற்க வாழ்த்துக்கள்
நன்றி சகோதரா
-
பயப்படாதே தமிழா உனக்கு
எல்லாவற்றையும் சொல்லி கொடுத்திருக்கிறேன்
என தமிழ் முன்னோர்கள்
இட்டு சென்ற தமிழ் இனம்
எதற்கு பயம்