FTC Forum
Special Category => ஆன்மீகம் - Spiritual => Topic started by: ஸ்ருதி on February 18, 2012, 06:26:54 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fimages_news%2Ftblanmegamnews_57677859068.jpg&hash=c5831776dc1296de509dbc211db471ec6098626a)
வட கொரியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோது, ராணுவ தளபதியாக இருந்த ஒருவர்
கைது செய்யப் பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனைக்குரிய நாளும் குறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர்
தன்னைக் கொல்லும் முன், தன் மனைவிக்கு ஒரு கடிதம் எழுத விரும்புவதாகக்
கூறினார். அதற்கு அனுமதி கிடைத்தது. அந்த இக்கட்டான நேரத்தில், மிகச்
சுருக்கமாக உள்ளத்தில் பதியத்தகுந்த வகையில் அந்த கடிதத்தை எழுதினார்.
அதில், ""பில்லை உத்தமமாய் நடக்கச்சொல்,'' என்று ஒரு வரி இருந்தது. அவரது
மகனின் பெயர் பில். சாகும் நேரத்திலும் கூட, தன் மகனுக்கு அவர்
சொல்லியிருந்த அந்த அறிவுரை எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது.
நேர்மை அல்லது உத்தமம் என்ற வார்த்தைக்குள் எல்லா குணாதிசயங்களும் அடங்கி
விடுகிறது. நேர்மையாக நடப்பவன் எந்த தவறும் செய்ய மாட்டான். பைபிளிலும்
கூட, ""உத்தமமாய் நடக்கிற தரித்திரனே வாசி'' (ஏழைகளாய் இருந்தாலும்
நேர்மையோடு இருப்பவர்களே உலகில் உயர்ந்தவர்கள்) என்ற வசனம் இருப்பதை
வாசித்திருப்பீர்கள். மரண வேளையிலும்கூட, தன் மகன் ஒழுக்கத்துடன் வாழ
வேண்டுமென அந்தத் தளபதி விரும்பினார். அதையே தன் கடிதத்தில்
வெளிப்படுத்தியிருந்தார். "நேர்மையே மேன்மை தரும்' என்பதை புரிந்து
கொள்ளுங்கள்.
தன்னைப் பெரிதுபடுத்திக் கொள்வதற்கென்றே சிலர் இந்த பூமியில் வாழ்கிறார்கள். தன்னைப் பற்றி பலரும் கவுரவமாக கருதவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். ஒரு சகோதரி மிகுந்த ஆர்வத்துடன் சமூக சேவையில் ஈடுபட்டார். அனாதை விடுதிகளுக்கு தன் தோழிகளுடன் சென்று, அங்குள்ள குழந்தைகளுடன் பேசுவார். குழந்தைகளுக்கு வீட்டிலிருந்தே கேக் செய்து கொண்டு செல்வார். அதை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் போது, புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
ஒருநாள் ஒரு தோழி, ""இந்த கேக்கை வீட்டில் தானே செய்தீர்கள். இதை உங்கள் அம்மா ருசி பார்த்தார்களா?'' எனக்கேட்டார். அதற்கு அந்த பெண்மணி, "இல்லை' என்றார்.
""ஏன் உங்கள் அம்மா வீட்டில் இல்லையா? வெளியூர் போயிருக்கிறார்களா?'' எனக் கேள்விகளை அடுக்கினார்.
அதற்கு அந்தப்பெண், ""நான் என் அம்மாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிறது. அவர் ஒரு
முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கிறார்'' என்றார். பெற்ற தாயையே கவனிக்க
முடியாதவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
உண்மையான மனதுருக்கம் இல்லாமல், பேருக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு சமூக
சேவை செய்வதை தேவன் அங்கீகரிக்க மாட்டார். இரட்டை வேடத்துடன் வாழ்க்கை
வாழ்வதை அவர் விரும்பமாட்டார். உங்கள் சொந்த வாழ்க்கையை முதலில்
சீர்படுத்திக் கொள்ளுங்கள். அதன்பிறகு சமூக சேவையில் இறங்குங்கள்.
பைபிள் பொன்மொழிகள்
*
சோம்பேறியே! எறும்பைக் கவனி. அதன் வழிமுறைகளைப் பின்பற்றி அறிவு பெறு.
அதற்கு வழிகாட்டி இல்லை. தலைவனும் இல்லை. அதிகாரியும் இல்லை. கோடை கால
ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தை சேகரித்து வைக்கிறது.
* அன்னமும், ஆடையும் இருந்தால் அதுவே போதுமென்ற மனதிருப்தி அடைவோமாக!
* உங்களில் குறிப்பாக ஒவ்வொருவனும் தன் மனைவியை தன்னைப்போலவே காதலிப்பானாக. மனைவியோ தன் கணவனை மதித்து போற்றுவாளாக.
*
எவனும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். தீயதை
நல்லதென்றும், நல்லதை தீயதென்றும் சொல்லுபவர்களுக்கு துயரம்தான் மிஞ்சும்.
தீமையாய் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.
* முகத்தோற்றத்தைக் கொண்டு முடிவு செய்யாதே. நேர்மையான நியாயத்தைப் பார்த்து தீர்ப்பு சொல்.
* தீமையைச் செய்து துன்புறுவதைவிட, நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
* எனக்கு வறுமையோ, செல்வப் பெருக்கையோ தரவேண்டாம். எனக்கு
-
* தீமையைச் செய்து துன்புறுவதைவிட, நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
nice one :)