FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on May 03, 2017, 06:43:10 PM
-
மன்னிக்க மட்டும்
கற்றுக்கொள்
ஏன் என்றால்
நம்மை
ஏமாற்றியவர்கள்
ஒரு நேரத்தில் நாம்
நேசித்து இருப்போம்
அர்த்தமற்ற வாழ்வை அர்த்தமுள்ளதாக
மாற்றுவது நடப்பு
அர்த்தமுள்ள வாழ்வை அற்புதமாக
மாற்றுவது நடப்பு
நிஜங்களை விட நினைவுகள் தான்
இனிமையானவை
ஏன் என்றால்
நிஜம் என்பது சில நிமிடம் தான்
ஆனால்
நினைவுகள் என்றும் நிரந்தரம்
என்றும் நினைக்கும்படி
நட்ப்பிருந்தால்
அதுவே வாழ்வின் வெற்றி
அன்புடன் பிரியன்
:)
-
முதலில் உங்கள் நட்பான கன்னிக் கவிதைக்கு வாழ்த்துக்கள். பூக்கட்டும் உங்கள் கவிதை மலர்கள். நினைக்கும்படியான நட்புகள் வரவேற்கப்படவேண்டியவை .
-
கவிதையை தமிழ்ல எழுதின நீங்கள் தலைப்பையும் தமிழ்ல
எழுதி இருக்கலாமே நண்பா. அது NATPU, NATBU இல்ல
-
வணக்கம் சகோதரா
கவிதை நிதர்சனமான
உணர்வுகளை தாங்கி
நிற்கிறது வாழ்த்துக்கள்
நல் நட்பை கண்டடைய
நல்லதோர் தளத்தில் நீங்கள்
ஆற்றில் விழுத்த அருவிபோல்
கலந்துள்ளீர்கள்
நல் முத்துக்களை கண்டடைய
வாழ்த்துகின்றேன்
பிரியமானவரெனும் நாமம்கொண்ட
உங்கள் நட்புலகம் பிரியாமல் வாழியவே
நன்றி பிரியன் சகோ
-
நன்றி நண்பர்களே. உங்களுடைய கனிவான விமரிசனத்துக்கு நன்றி. என்னை மேலும் எழுத தூண்டும் உங்கள் பாசமிகு வாழ்த்துக்கள் .
நன்றி என்றும் உங்கள் பிரியன்
-
என்றும் நினைக்கும்படி
நட்ப்பிருந்தால்
அதுவே வாழ்வின் வெற்றி
அருமையா சொல்லிருக்கீங்க
வாழ்த்துக்கள் ..நிறைய எழுதுங்க
-
நன்றி சும்மா தோழரே
-
Hi Sun :) Azhagana kanni kavithaiku vazhthukkal ;) FTC nale athu Natpu than so ungal muthal padaippai pola ellam siranthu vilanga ennoda vazhthukkal SUN
-
நன்றி விபூர்த்தி சகோதரி
உண்மையான ஒரு தோழன் ஒரு தோழி இருந்து விட்டால் உலகத்தில் எதுயும் நிகரில்லை.
நல்ல நட்பு பூக்கள் உள்ள இந்த அரங்கில் நானும் இருப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்