FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 03, 2017, 03:35:17 PM

Title: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 03, 2017, 03:35:17 PM
4/145     முத்தமிட்டேன் உயிருருக


மணமாகி மூன்று ஆண்டுகள் கடந்தன
என்னுயிர்
உயிரின் கருவறையில் தங்கவில்லை
ஊரும் உறவும் கேள்விகள் கேடன
காயங்கள்பல
எம்மை எதுவும்
எதுவுமே செய்திட முடியவில்லை

ஆழமான அன்புகொண்டு
இன்பமாய் வாழ்கையில்
மணநாளில் கண்ட வெட்கம்
மீண்டும் கண்டேன்
இதழோரம் முத்தவிழ
அத்தான் என்றாள் பூமகள்
உண்டானது தருணம்
மெய்சிலிர்த்து மேனியணைக்க 

காலம் கடந்து போனது
உயிர் என் கருவில் உண்டானது
பொய்க்காது இம்முறை
நிச்சயம் பட்டமுன்று அப்பாவென
வார்த்தைகள் வரவில்லை
பேசவும் தோன்றவில்லை
கால்களை முடக்கி
வயிற்றிலே முத்தமிட்டேன் உயிருருக

உறவுகளுக்கு சொல்ல
மூன்று மாதம் முழுமைபெறட்டும்
காத்திருப்போம் இன்பமாய்
நம்பிக்கையில் தளர்வில்லை
காலங்கள் கடந்தன
வளைகாப்பும் வந்தது ஊர்கூடிட
இன்பமாய் உறவுகள்
அன்பாய் சூழ்ந்திட ஆனந்தம்

ஆணா பெண்ணா தெரியாது
பிறப்பது எங்கள் உயிர்
அப்பா வேலைக்கு சென்றால்
குழந்தை எனக்குத் துணை
விளையாடுவேன்
சண்டை போடுவேன்
தண்டியேன்
என்னை மறப்பேன்
 குழந்தையே உயிரென வாழ்வேன்

குழந்தை இல்லா
மூன்று ஆண்டிலும் கேட்டவசை
குழந்தையின் பெறுமானத்தையும் 
பொக்கிசமென சொல்லி தந்தது
தாய்மை கண்டால் உண்டாகவேண்டிய
தன்னிறைவையும் வரமாய் தந்தது

அனைத்தும் கற்று
வாழ்க்கையில் தேறிட வசைகள் உதவின
உறவுகளையும் உண்மையாய் அறிந்திட
குறைகள் உதவின
கொண்ட குறையும் கேட்ட வசையும்
இன்பமாயின இன்று
வாழ்வில் எல்லாம் சுகமே
அன்னையெனும் புனிதம் கண்டிட



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: MyNa on May 03, 2017, 08:36:29 PM
Naangu kavithaiyilum intha kavithai ennai rombave kavarnthathu  :)..

Kavithai oda mudivu magizhchiyaana muraila irunthalume enaku yeno kavithai padicha piragum manasu bhaaramagave iruku.. intha kavithaila vara thambathiyargal athirshtasaligal.. moondru varudam kaathirunthalum thavathukaana varatha petrutanga.. ethana peru intha varam kedaikama inamum thavam irukanga.. oor vaaithan summa irukuma.. ethana pechu.. ithilum kodumai kudumbame intha kavalaiya purinjikama kaayapaduthurathu than..

Rombave rasichu padichen intha kavithaiya.. unarvugalodu onriyamaiyira kavithai.. varthaigal migaiyaagathu sarithan itha vimarsika.. nandri ipadi oru kavithaiya pagirnthu kondathuku  :)..
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 04, 2017, 03:53:49 AM
வணக்கம் மைனா

உங்கள் கருத்துக்களை படித்தேன்
நான்கு கவிதையின் பின்னே

பதில் பேச முடியவில்லை உடனே
வருந்துகின்றேன்

கற்றோமென சொல்லிட தகமை
கொண்ட உங்கள் ஆழமான பார்வையில்
உண்டான கருத்துரையில் பெருமிதம்

வாழ்க வளமுடன் 
எனது பதில்கள் தொடரும்

மிக்க நன்றி மைனா
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: VipurThi on May 04, 2017, 10:49:17 AM
Sari anna ;) ungaloda kavithaigal ellam indraya nadai murai vazhkkaiya maiya paduthi eluthiratha panum pothu rmba magilchi anna :) vasaigal pala thaandi karuvaraiyile uyir konda antha sisu pola ungaloda kavithaigalum valam vara vazhthukkal anna :)
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 06, 2017, 03:57:13 PM
வணக்கம் மைனா

உங்கள் கருத்துக்களை படித்தேன்

உண்மைதான்
எல்லோருக்கும் வரங்கள்
கிடைப்பதில்லை வலிகள்தான்

ஊராரை விடவும்
உறவுகள்தான் அதிகம்
காயம் செய்கின்றனர்

இது
இயற்கையாக சிலருக்கும்
நோயினால் சிலருக்கும்
துயரமாய் நிற்கிறது

குடும்பம் புரிந்து கொண்டாலே
பாதித் துயரம் தணியும்

இந்த வலிகளை
மொழிகளில் தேற்றிடல் தகுமோ
:'(
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 06, 2017, 04:26:56 PM
வணக்கம் விபூமா

வாழ்த்தில் கருத்தில் மகிழ்ச்சி

நண்பர்கள் தமிழ் இணையத்தின்
நிர்வாகிகள் பற்றிய தெளிவுண்டு எனக்கு

எனது எழுத்துக்களுக்கு அநீதியான
நிராகரிப்புக்கள் இதிவரையில்
அறிவுள்ள நிர்வாகிகளிடத்தில்
எழவில்லை

ஆனால்

அக்கா தங்கை எனும் அடிப்படை
உறவில் காட்டும் அன்பிலும்
அக்கறையிலும் கொண்டுள்ள
உண்மைக்கு அடையாளமென 
ஒரு கவிதையை
இங்கே நீக்கிகொண்டோம்

சிசுக்கொலைகள் போல எனியும் 
அவை நிகழாது

அதிலும் குறிப்பாக ஒருவருக்கு
எனது எழுத்துக்களை பண்பலையில்
படித்திடும் சிரமம் இன்றுமுதல் வாராது.

நிர்வாகிகள் நீதிக்கு முரணாகதவரை
எழுத்துக்கள் ஓயாது விபூமா

உனக்கு நன்றி தங்கையே
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SunRisE on May 08, 2017, 01:47:33 PM
குழந்தை வரம் என்பது
பேரின்பம் இருவரது வாழ்கயில்
அந்த வரம்  வேண்டி காத்து நிற்க்கும்
தம்பதியர் தான் எத்தனை
இறைவன் அருளும் மறுஉயிர்
அழகான அர்த்தமான பதிவு
வாழ்த்துக்கள் சகோதரa
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: ChuMMa on May 09, 2017, 07:34:58 PM
சகோ

உங்கள் கவிதை இல்லா ஓவியம் உயிராகிறது
மலரில்லா பெண்ணின்  கூந்தல் போல்
மனமில்லை

சகோ, கவிஞன் படைக்கும் படைப்புக்கு
அர்த்தம் கற்பிக்க யாராலும் முடியாது அவனை தவிர

கொச்சை என்று உதறி தள்ளும் நாம்
நம்கண்ணாடி வீட்டில் கல் எரிந்து கொள்வதற்கு ஒப்பாகும்

உங்கள் படைப்புக்கு பண்பலையில் இடம் இல்லாமல்
இருக்கலாம் ஆனால்  பல மைல்கள் கடந்து எங்கள்
மனதில் இடம் உண்டு

நண்பர்களிடையே மனஸ்தாபங்கள் ஏற்படுவது
இயற்கை , அதை கடந்து வருவோம் மறந்து வருவோம்

பெண் புரிந்து கொள்ள முடியா புதிர் தான்
புரிந்துவிட்டால் வாழ்க்கை இன்பமாய் மாறிவிடும்


கவிதை தொடர்ந்து பதிவிடுங்கள் எனது தாழ்மையான வேண்டுகோள்

நன்றி

Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 10, 2017, 11:51:16 PM
வணக்கம் சகோ

கவிதைகளை ஆர்வமாய்
படித்து இரசித்து

பிடித்த வரிகளை
ஆர்வம் தரும் வரிகளை
குறித்து நீங்கள் சொல்லும்
கருத்துக்கள் வெகுமதி 

நன்றிகள் பிரியன் சகோதரா
Title: Re: 4/145 முத்தமிட்டேன் உயிருருக
Post by: SarithaN on May 11, 2017, 12:27:15 AM
வணக்கம் சும்மா சகோ

FTC Forum அது தனது தனித்துவமும்
சிறப்புக்களும் கொண்டு என்றும்
உயர்வாய் நிமிர்ந்து நிற்கிறது
நின்றிடும் நிலையாய்

ஓவியம் உயிராகிறது சில ஆண்டுகளை
கடந்து மிகவும் சிறப்பாக மிடுக்காக
ஒலிக்கும் உயிர் ஓசை

அங்கே நான் எதுவுமே இல்லை
கடந்த வாரமும் இந்த வாரமும் கவிதைகள்
மிக மிக அர்த்தமும் அழகும் கொண்டவை
எனவே நான் வெறுமை என்பது உண்மை

பண் அலையில் யாரும் இடம் மறுக்கவில்லை
எல்லாம் எனது நானெனும் அகம்பாவம்  

யார்மேலும் குற்றமில்லை கடந்து போகட்டும் போனவை

உங்கள் கருத்துக்களை காண்கின்றேன்
மகிழ்ச்சி சகோ 
அனைத்தையும் விளக்கவோ விரிவாகவோ
எழுதிட விரும்பவில்லை
எனது பதிலால்
யாருக்குமே காயம் வேண்டாம்
பழி உணர்வு
பகை
வெறுப்பு யார்மேலும் இல்லை

1/
பல மைல்கள் கடந்து எங்கள்
மனதில் இடம் உண்டு

இந்த வார்த்தைக்கு என்னிடம் வெகுமதி இல்லையே
நெகிழ்ந்து போனேன் சந்தோசம்

2/
கவிதை தொடர்ந்து பதிவிடுங்கள்
எனது தாழ்மையான வேண்டுகோள்  

சில நாட்கள் கடக்கட்டும் சகோ நான்
கடந்து வருவேன்

*****
உங்கள் அன்பை நான் உணர்கின்றேன் 
பெரிய வார்த்தைகள் வேண்டாம் சகோதரா
அன்பான நன்றிகள் பல சும்மா சகோ

கடவுளே துணை
அன்பு நிறை நட்புடன்
சரிதன் . எ