FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 03, 2017, 03:29:51 PM

Title: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: SarithaN on May 03, 2017, 03:29:51 PM
3/145   காத்திருக்கும் மூவுயிர் நான்

நான் குமரியல்ல
தாய்மையின் விளிம்பில்
கோவம் கர்வம் பகை
பழியென ஏதுமில்லை
மனதில் நல்லெண்ணங்களோடு
எனைமறந்து
கர்ப்ப ஸ்திரி தெய்வமெனும்
வாக்கை ஏற்று
தீமை களைந்து
நன்மையில் சிந்தை நிலைக்க

எனக்கொரு மகன் பிறப்பான்
என் உயிரைப்போல பிறப்பான்
ஊர்போற்ற பேரெடுப்பான்
தந்தையின் அறிவு கொண்டிருப்பான்
அவரது நற்பண்பு காத்து நடப்பான்
அன்னையின் வளர்ப்பே
 சிறந்ததெனும் பரிசளிப்பான்

வீட்டிலே மகிழ்வின் விம்பமாயிருப்பன்
தாத்தாக்கள் பாட்டியரின்
பேரானந்த மாயிருப்பான்
மாமாக்கள் மாமியரின் நஸ்ரமில்லா
நல் மருமகனாயிருப்பான்
பெரியப்பா பெரியம்மாக்களின்
எல்லையில்லா செல்லமாயிருப்பான்
அன்னை தந்தையின் எல்லாமுமாயிருப்பான்

புளகாங்கிதம் கொண்டு
தவத்தின் பலன்கண்டு
குமரிப் பருவம் தொலைத்து
தாய்மை சிறப்பெய்ய
காத்திருக்கும் மூவுயிர் நான்

வளைகாப்பு பிறந்த வீட்டில்
பிரசவம் பிறந்த வீட்டில்
ஓருயிரை பிரிந்து ஈருயிராய் போகேன்
மூவுயிரும் ஒன்றென வாழும் வீட்டில் விட்டிடுங்கள்

வளைகாப்பு பெண்வீட்டின் பெருமையின் மகிழ்வு
பிரசவம் பிறந்த வீட்டிலெனும் பொய் யார்மகிழ
இவற்றில் எல்லாம் மகிழ்வில்லை பிரிவதில் வலியே

பேறுகாலத்தில் துணைவன் தரும்
அன்பை ஆறுதலை அரவணைப்பை
யார் தருவார் அவரை அன்றி
கருவறையில் உயிர் கொண்டமுதல்
அவர் கொண்ட அக்கறை
ஆழியிலும் அதிகம் விட்டிடுங்கள்
வளக்கமென பிரிக்காமல்
மகிழ்ந்து நாமிருப்போம் நீங்களும் எங்களுடன் வருகவே



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: MyNa on May 03, 2017, 08:32:03 PM
காத்திருக்கும் மூவுயிர் நான்

Kavithaiyin thalaipu padika thoondum vagaila amanjiruku.. oru penn than thaayaga poratha enni epadi ellam yosipanganu solirunthinga.. athilum enaku romba pidichathu valaikaapu pathi ezhuthirunthinga. Oru vagaila thaai veetuku porathu santhosama irunthalum kalyanathuku piragu thaaiyoda anbu kanavan kitta irunthu kedaikapetral kanavara pirinju thaai veedu porathum kashtama than irukum.. kavithaiyil irukum azhagana thambathiyarai pola anaivarum irunthu vittal illaram inimaiyantha amanjidum :)
Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: SarithaN on May 06, 2017, 04:10:55 PM
வணக்கம் மைனா

கவிதைகளை முழுமையும் உள்வாங்கி
நீங்கள் இடும் கருத்துக்கள் பார்க்கையில்
மகிழ்ச்சி

கவிஞர்கள் பலரது கவிதைக்கும் நீங்கள்
இடும் கருத்துக்களில்

ஒரு கவிஞரின் சிந்தனை பாச்சலை அதே
கவிஞரின் ஆசனத்தில் அமர்ந்து நோக்கும்
உணரும் தெளிந்த அறிவு கண்டேன்

எனது எழுத்துக்களையும் நீங்கள் நோக்குதல்
கருத்திடுதல் மகிழ்ச்சி 

உங்கள் உள்ளக்கிடக்கைகள் போலவே வாழ்வும்
அமைய வாழ்த்துகின்றேன் வேண்டுகின்றேன்

மிக்க நன்றி மைனா

Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: MyNa on May 06, 2017, 04:57:40 PM
Sariyaana purinjitu than karuthugala pathividuranaanu theriyala sarithan.. mudinja varai ovvoru kavithaiyum mulumaiya purinjika muyarchi panren.. haha pala samayangal la puriyatha velaigal la ezhutharavanga kita kekurapo avangalum salikaama vilakam tharanga.. atha nalaa than enalaiyum purinjika mudiyuthu  :)
Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: SunRisE on May 06, 2017, 05:50:22 PM
அருமை நண்பரே . ஒரு தகப்பன் மற்றும் தாயின் பிள்ளைக்கான ஏக்கத்தை நல்ல நடையில் தந்தமைக்கு நன்றி

priyan (SUNRISE)
Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: SarithaN on May 10, 2017, 11:18:58 PM
வணக்கம் மைனா

பொதுவாக அனைவருக்கும் புரியும்
வண்ணம் படைப்புக்களின் உருவாக்கம்
அமைவது சிறப்பு

சில சமயம் வாழும் பகுதிகள்
நாம் பேசிக்கொள்ளும் தமிழின்
தன்மைகள் கூட
நமது புரிதலை கேள்வியாக்கலாம்

புரிந்து கொள்ளல்
புரியாதவை பற்றிய
அறியாமை போக்கி கொள்ளல்

எழும் சந்தேகங்களை கேட்டறிதல்
சிறப்பான பண்புதான்

தலைப்பை பாராட்டி இருந்தீர்கள்
மிக்க நன்றி

தொடர்க உங்கள் எழுத்துக்கலை
என்றும் வாழ்க வளமுட

நன்றி மைனா
Title: Re: 3/145 காத்திருக்கும் மூவுயிர் நான்
Post by: SarithaN on May 10, 2017, 11:21:46 PM
வணக்கம் பிரியன் சகோதரா

உங்கள் ஆர்வமூட்டும்
கருத்துரைக்கு மிக்க
நன்றி சகோதரா

வாழ்க வளமுடன்