FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 03, 2017, 03:25:33 PM
-
2/145 அன்புள்ள கணவனாகான்
என் உயிர் உயிர் கொண்டாள் என்னால்
கர்ப்ப பூமி ததும்ப தாய்மையின் சாந்தமாய்
கொடியிடை தாங்குமோ முழுமையாய்
ஆச்சரியம் பெண்களின் சிறப்பு தாங்கிற்று
காத்திருந்தேன் தந்தையாக அனுமதித்தாள்
அன்னைவரம் தனக்கென சுயநலமாய்
பெருமின்பம் இதயமதில் தேய்வே இல்லா
பெருவளர்ச்சி கருவறையில் வளர்பிறையாய்
என் இலட்சம் முத்தங்கள் சுமந்த தியாகபூமி
மாதங்கள் ஏழு
வேலைக்கு விடுமுறையெனக்கு
பிறக்க முன் மூன்று மாதம்
பிறந்த பின்னரும் முன்று மாதம்
குழந்தை இரண்டையும் நன்றாய்
காத்திட அன்பாய் அணைத்திட
பேறுகாலத்தில் தாய்சேய்க்கு
துணையிருந்து மகிழ
வாழ்விலே விரையங்களை நீக்கி
சேமித்த செல்வம் உண்டு
ஊதியம் இல்லாமையில்
குழந்தையின் நளினங்கள்
கண்டு மகிழவேண்டும்
நாமமதை அர்த்தம் கொண்டு
சூட்டி ஓதவேண்டும்
திறந்தும் திறவாத கண்கள்
ஒலிக்கு ஒவ்வாத சைகை
குழந்தை விழிக்கும் நேரமெல்லாம்
தந்தை என் மார்பிலே வேண்டும்
வலித்த உடல் தேற துணைவேண்டும் மனைவிக்கு
ஈன்றபின் அவள்படும் துயரதை
அருகிருந்து உணரவேண்டும்
மீண்டும் பிரசவம் தகுமோவென
ஈன்றாள் மீண்டும் ஈய்வாள்
எனக்கில்லை வலியென
அவளை உணராதவன் அன்புள்ள கணவனாகான்
துணையென சூழ்ந்து தங்கும் சுற்றமதை உபசரித்து
வாழ்த்துக்களும் ஆசிகளும் அன்பாய் பெற்று
சந்ததிக்கு வரம் தந்த என்னுயிர் செய்
அர்ப்பணங்கள் இன்னதென கற்றுநான்
இல்லறம் தேறிட
அருகே அமர என்றும் கிட்டா அரிய உயர்
வாய்ப்பெனக்கு தந்தையாய்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
அன்புள்ள கணவனாகான்
oru aan than manaivi karpama iruku naal thodangi kulanthai pirantha varai epadi ellam yosipanganu azhaga solirukinga.. itha padikirapo oru aanoda sinthanaiya unarnthathu mattum ilama ovvuru pennukum ipadi kavithaila ulathu pola kanavan kidachita epadi irukumnu than yosika thonuthu enaku.. aanin parvaiyil uthitha kavithai arumai sarithan :)
-
வணக்கம் மைனா
மனைவிமேல் அதிக அன்புகொண்ட
ஆண்கள் இருக்கவே இருக்குத்தானே
அதை இனம்கண்டு கொண்டால்தான்
வாழ்க்கை மகிழ்ச்சி
ஆண்களும் கற்பனைகள் ஆசைகள்
ஏக்கங்கள் உடையவர்கள்தான்
ஆனால்
இலகுவாக அவை வெளிப்படுவதில்லை
ஆரம்பத்தில் அபகரிக்க வேண்டும் அன்பை
நாளிகைசெல்ல தானே நாடிநிற்கும் அன்பாய்
ஆசைகள்
ஏக்கங்கள்
கற்பனைகள் கூட
பெண்கள் உரிமையென
பொய்ப் பேச்சு உண்டு
எனக்கு உடன்பாடு இல்லை
உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி மைனா
-
சகோதரர் சரிடன் அருமையான கவிதை கணவனாவான்
இந்த வரிகள் என் நெஞ்சத்தை தொட்டது
வலித்த உடல் தேற துணைவேண்டும் மனைவிக்கு
ஈன்றபின் அவள்படும் துயரதை
அருகிருந்து உணரவேண்டும்
மீண்டும் பிரசவம் தகுமோவென
உண்மையான வரிகள் உணர்வுபூர்வமான வரிகள்
அருமை வாழ்த்துக்கள்
-
வணக்கம் பிரியன் சகோ
பலரும் உணரவேண்டிய ஒன்று
ஏதோ உருத்தியது எழுதினேன்
கருத்துரையில் குறிப்பிட்டமையில்
கருத்து மீண்டும் வலிமை அடைகிறது
மகிழ்ச்சி சகோதரா
நன்றி