FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on May 03, 2017, 03:19:53 PM
-
தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ
உன் கருவறையில் நானிருக்கையில்
எனக்கு ஆபத்தான விசங்களெல்லாம்
மசக்கை எனும் போர்கொண்டு வருத்தும்
உன்னுள்ளே நான்வர இளைமைதொலைந்து
கட்டழகு கொடுமெனும் உண்மையறிந்தும்
எத்தனை பாசம் என்மேல் உன்னைவிட
உன்னுள்ளே நான் வளர பயமும் பக்தியும்
உணவிலும் கடவுள்மேலும் உனக்கதிகம்
ஒறுத்தாய் பிடித்ததெல்லாம் எனக்காய்
உன்கருவறையில் நான் மிதப்பது புனிதநீரில்
எந்த கோவில் கற்பகிரகத்துள்ளும் இல்லை இந்த
ஆசிநீர் ஆனால் உலகிலெவரும் உணர்வதில்லை
நான் சொர்க்கத்தில் வாழ்கின்றேன் இப்போது
உலகமாம் நரகத்துக்கு வரும் புனித வாசலில்
குறுக்கே உறங்குகின்றேன் போர்மாற இயவில்லை
தாய்மையை சுகமாய் தர உழைக்கின்றேன் கருவில்
முடியவில்லை உள்ளேயே அழுகின்றேன் வலியால்
குறுக்கே சிக்கிவிட்டேன் வழிமுன்னே தடம்மாறி
வெளியே வரும் நாளிகை நெருங்குகிறது ஆனந்தத்தில் நீ
பயமும் துயரமும் கொண்டு நான் உள்ளே வேண்டுகின்றேன்
என்னால் நீ பெறும் தாய்மை சுகமாய் கிட்டட்டும் உனக்கென்று
வேண்டுதல் பலிக்கவே இல்லை அறுவைச் சிகிச்சைதான்
தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ
என்னைச் சுமந்ததனால் தானே துயரம்
எத்தனை நூறு தையலம்மா வயிற்றில்
எத்தனை தோலடுக்குகள் பாதுகாப்பாய் எனக்கு
கடவுளின் விந்தையிவை இரக்கத்தோடு
அத்தனையும் கிழித்தார்கள் சம்மதித்தாய் எனக்காய்
மீண்டும் வலிக்குமே தைத்திட எப்படித் தாங்கினாய் தாயே
உலகுக்கு உயிர் வரும் புனித பாதையை
உலக மொழிகள் அனைத்திலுமே இகழ்வர்
அந்த வழியே வெளிவர கொடுத்து வைக்கவில்லை எனக்கு
அதனாலல்லோ உனக்கும் இந்தனை கொடும்துயர் அம்மா
அறிந்தும் அறியாமலும் நானும் புனிதமதை இழிவென
இகழ்ந்துரைத்தேன் ஓர் காலமதில் வருந்துகின்றேன்
வேண்டுகின்றேன் மன்னிப்பும் பொறுத்திடுக பெண்குலமே
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
Vanakam sarithan..
தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ ..
oru sisuvin parvaiyil uthithirukum intha kavithai pala valigalaiyum kadanthu varigal ah uruvagiruku..
epavume thaai thanthaiyoda parvaiyaiyum unarvugalaiyum than kavithaigala padichiruken naan..ithu puthusa iruku.. pala nitharsana unmaigala thaangi amanjiruku varigal.. padikum bhothu manasu sangapadama iruka solla vantha karuthugalai yosichu muraiya ezhuthirukinga.. vazhthukal sarithan :)
-
வணக்கம் மைனா
எனது தேடலில் இந்த கவிதைக்கு
ஒரு அறிவும் தெளிவும் சமுதாய
பார்வையுமுள்ள உங்கள் கருத்து
மிகவும் எனக்கு அவசியாமானது
ஒரு பெண்ணாக இக்கவிதையை
படிக்கையில் உங்கள் கண்ணிலோ
மனதிலோ ஆபாசமாக துலங்காமல்
போனது எனது பேறு
கவிதையை எழுதுகையில் எனது
மனதில் உருத்தலோ
தவறெனும் உணர்வோ சுரக்கவே
இல்லை
ஒரு முறை பட்ட அறிவு இருந்தும்
பாதகமான சிந்தை எழவே இல்லை
ஆனால்
இக் கவிதை
ஆபாசம் வக்கீரமென வசையானது
அநாகரீகமானவனெனச் சொல்லியது
இருக்கும் இடத்துக்கு ஒப்ப ஒழுகத் தெரியாதவனெனவும் சொன்னது
நான் இழைத்த இந்த தவறுகளுக்கான பரிகாரமென
ஒருவகை தண்டனையை எனக்கு நானே கொடுத்துவிட்டே
கவிதை ஒழுக்கம் கெட்டதாய்
தவறான உணர்வுகளை தூண்டுவதாய்
வளரும் தலைமுறையை சீர்கெடுப்பதாய்
சொன்ன செய்தி வாழ்க்கைக்கு வேண்டாததாய் இருந்தால்
ஆட்சேபனையை கருத்துக்களாய் இங்கே
எனக்கு உணர்த்துங்கள்
என்னை நான் மாற்றிக்கொள்கின்றேன்
இது இலக்கிய
இலக்கணம் கெடாத உலகம்
நாகரீகமாய் கருத்தாடலாம்
இத்தனை பாதகமான அவமரியாதைக்கு
உள்ளான கவிதைக்கு நீங்கள் கொடுத்த
வாழ்த்துரை எனது எழுத்தாணியின் குருதி
மிக மிக மிக நன்றி மைன
-
Vanakam sarithan..
haha vaatha medaiku adutha pechalar ah karuthugalai solla pattimandrathil alaikirathu pola irunthathu unga munthaiya bathil :D ethuvaaginum en thanipatta karuthugalai inga pathividarathu thavarillai nenaikiren..
Oru pennaga intha kavithaila ethavathu thavara kandrunthingalanu ketrunthinga..
naan ella padaipilum oru samooga nalan kaaga ethavathu kedaikumanu theduven.. antha vagaila intha kavithaila solla patta karuthum enaku thavarana sinthanaiya elupala.. maaraga ithai oru samooga pirachanai oda velipaada than naan pakuren..
paakuravanga parvailayum avanga eduthukira murailaiyum than elame iruku.. ezhutharavangala thavira vera yarukum athanudaiya karuthu mulumaiya purinjidathu.. athu avanga unarvula uthitha padaipu. enaku ithu thappa padala.. athukaaga argue panra mathavanga parvai thavarunu naan solla varala.. Aanal oru velai varambu meeri ezhuthapattu atharkaana maruppu kidaithu antha marupu sariyaanathu enru thondrinaal maatri kolvathu than murai..
nan poiya karpanaiya ezhuthuratha kaatilum unmaiya velipadaiya ezhuthuratha virumbuven..
antha vagaila intha unmai enaku thavara theriyala... ipadi karuthugala pathividura naala oru pen aaga irunthutu epadi ipadi aatharichu pesa mudiyuma enra kelvi elunthaal atha neradiya yaara irunthalum enkitaye ketkalam.. KAARANAM ITHU EN THANIPATTA KARUTHE OLIYE YARAIYUM THAAKA NAAN PATHIVIDURA KARUTHU KEDAIYATHU !!
nenga ketta kelviku intha karuthu bathilalikum nenaikiren sarithan :)
-
வணக்கம் தோழரே
உங்கள் எழுத்தின் எளிய நடை அருமை அனைவருக்கும் புரியும் என்பதில் ஐயமில்லை. தாய்மை பற்றி எதனை கவிதைகள் தந்தாலும் அதுக்கு மிகை இல்லை , அருமை நண்பரே வாழ்த்துக்கள்
-
"தாயாகி விட்டாய் பாவம் அம்மா நீ "
சகோ பெண் அம்மா, அக்கா, தங்கை, பாட்டி ,மனைவி , எந்த உறவானாலும்
அவள் பாவி தான்
அன்பு ஒன்றுக்காகவே ஏங்கும் பாவி அவள்
வாழ்த்துக்கள் சகோ
-
வணக்கம் மைனா
உங்கள் புரிதலுக்கும் அறிவுக்கும்
விளக்கமோ வர்ணனையோ செய்திடாமல்
கடந்து போகின்றேன்
என்றும் மறவாத நன்றிகள் பல பல தோழி
-
வணக்கம் சகோ
உங்கள் கவிதைகளைப் போல
பிறரது கவிதைகளையும்
பாராட்டும் வரவேற்கும்
உயரிய பண்பு என்றும்
உங்கள் ஆசீராகட்டும்
மிக்க நன்றி பிரியன் சகோதரா
-
வணக்கம் சும்மா சகோ
பெண்களின் வலிகளை
வாழ்வியலில் உள்வாங்கி
படைப்புக்களை பிறப்பிக்கும்
உங்களிடம் கருத்து பெற்றதில்
மகிழ்ச்சி
நன்றி சும்மா சகோ