FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on May 02, 2017, 12:03:28 PM
-
மருத்துவர் சொன்னதும்
ஆனந்தம் சூடி கொண்டேன்
என் கணவரிடம் சொல்ல
வெட்கம் சூடி கொண்டேன்
சொன்னேன் அவரிடம்
நான் தாய்மை அடைந்தேன் என
என் காதலை சொன்ன
நேரம் போல் ஆனந்தம் அடைந்தார்
தொடங்கியது எங்கள் பிள்ளைகளுக்கான
எங்கள் தேடல்
பெயர் தேர்வு முதல் குழந்தையை சேர்க்கும்
பள்ளி தேர்வு வரை ஆயிற்று
குழந்தையை மார்பில் போட்டு
தாலாட்ட கற்று கொண்டேன் நூறு பாடல்
அக்கறையாய் மருத்துவரிடம் கூட்டி சென்றார்
மாதமொருமுரை. குழந்தையின் இதய துடிப்பு
கேட்டேன்
பத்து மாதம் கடந்தது வெளியுலகு வந்து
தன்தந்தையை காணும் ஆவலில் -எட்டி உதைத்தான்
என் வயிற்றில்
ஆனந்த வலியில் மருத்துவமனை சென்றேன்
அருகில் அன்பாய் என் கை கோர்த்து என் தலை கோதி
என் கணவர்
பிரசவ அறையில் நான் துடிக்க -
வெளியில் நின்று என் கணவர் துடிக்க
சொர்க்கமும் நரகமும் ஒரு சேர
அனுபவித்தோமே ..
ஆண் பிள்ளை என்றாலும் பெண் பிள்ளை
என்றாலும் கள்ளி பாலுக்கு இடம் இல்லை
என்றிருந்தோம்
கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி
கணவனிடம் என் சொல்வேனோ ?
:'( :'( :'( :'(
/b]
-
Arumai anna :)
-
Nandri Thangachi...
-
வணக்கம் சகோ
நீங்க என்னை விட மோசமா
எழுதி இருகிறீங்க சோகமா
இப்படியான சம்பவங்கள்
நிகழ்ந்துகொண்டே இருக்கிறது
எனக்கு நெருக்கமான உறவினருக்கு
ஆறு நாட்கள் முன்னதாக பிறக்க இருந்த
குழந்தை தாய் வயிற்றில் முதல் நாள்
மூச்சை நிறுத்திக்கொண்டது பெரும்துயர்
உண்டாவது போராட்டம்
உண்டான பின் காத்தல்
காத்த உயிரை பிரசவித்தல்
பெரும் யுத்தம்
எதுகும் சுகமில்லை
வாழ்த்துக்கள் சகோதரா
-
ஆமாம் ..மலடி என்ற பழி சொல்லில் இருந்து
தப்பிக்க ஓடி கடைசியில் சேர்ந்த பட்டம் கொலைகாரி
பெண் என்றால் பழி சொல்ல ஒரு கூட்டம்
கூடவே சுற்றும் போல
தங்கள் கருத்துக்களுக்கு
நன்றிகள் பல சரிதன் சகோ
-
Vanakam chumma..
Aananthama padika aarmabichen kavithaila..
mudivil ethirparatha thiruppam..
Varigalil valigal niranjiruku :(
கடைசியில் கள்ளி பால் எங்களுக்கு தந்து
சென்றாயே பிரசவ அறையை சவ அறையாக்கி ..
Varthaigaluku bathila kanner valiyuthu intha varigalai padikaiyil..
vazhthukal chumma.. arumaiyaana kavithai :)
-
இன்று ஆன் பெண் என்று யாரும் பார்ப்பதில்லை காரணம் குழைந்தை பேறு என்ற பாக்கியமே பெரிதாய் போனது இருப்பினும் உங்கள் கவிதை நடை அருமை வாழ்த்துக்கல்