FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on April 28, 2017, 04:32:09 AM

Title: அன்புடையார் தரும் வலியும் சுகம்
Post by: SarithaN on April 28, 2017, 04:32:09 AM
அன்புடையார் தரும் வலியும் சுகம்


நான் ஒரு மீனை பாத்தேன்
அதன் கண்களில் கலக்கம்
தொட்டியில் இருந்து வெளியே
எடுத்தேன் ஆறுதல் சொல்ல
இறந்துபோனது

வலிக்கும் பிள்ளைக்கு வாழும்
வீட்டிலேயே வாழ்வை கற்பியுங்கள்
பிரித்தெடுத்து பாடம் ஓதும் செயல் 
இறந்த மீனின் வாழ்வுபோல் ஆகும்

நிதானமாக உற்றுப் பாருங்கள்
மீன்கள் அழுவது தெரியும்
நீரிலே வாழ்வதனால் மீன்கள்
அழுவதே இல்லையென்றால் - தவறு

கண்ணீர் வெளியே தெரிவதில்லை
என்பதே உண்மை எனவே
அழாத கண்களும் வலிக்காத மனதும்
உலகில் இல்லவே இல்லை

வலியோ மகிழ்வோ இருக்கும்
இடத்தில் இருப்பதே சிறப்பு
அன்புடையார் தரும் வலியும் சுகம்
விரும்பாதவர் தரும் அன்பும் துக்கம்


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: அன்புடையார் தரும் வலியும் சுகம்
Post by: MyNa on April 30, 2017, 06:26:33 AM
Vanakam sarithan..
aazhamana karuthugalodu azhagana kavithai..

aaruthal solratha nenachitu sila velaigal la valiyila irukavangala ariyamale inum nogadichodurom..
Meengala uvamaiya vachu manithanoda kanneraiyum valkaiyaiyum etharthama eduthu solirukinga. Palaroda vazhkai neerla aluvura meen pola than.. veliyirunthu paakuravangaluku antha valigal puriyarathu kashtam. pattal thana puriyum vethai.. nadanthathu enna ..nijam enna nu theriyama aaruthal kaaga pesapadura varthaiyum valigal than..

Arumai sarithan..
karuthumikka pathivuku nandri :)
.
Title: Re: அன்புடையார் தரும் வலியும் சுகம்
Post by: VipurThi on April 30, 2017, 06:58:28 AM
Hi sari anna :) kavithai la enaku antha meen utharanam rmba pidichiruku na :) azhagana kavithaiku ennoda vazhthukkal anna :)
Title: Re: அன்புடையார் தரும் வலியும் சுகம்
Post by: SarithaN on May 01, 2017, 10:43:36 PM
வணக்கம் மைனா

சிரிப்பவர்கள் எல்லாம்
மகிழ்ச்சியாக இருப்பதாக
நம்பினால் ஏமாற்றம்தான்

கவிதையை தெளிவாக
உணர்ந்து நீங்கள் சொல்லிய
கருத்துக்களுக்கு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி
Title: Re: அன்புடையார் தரும் வலியும் சுகம்
Post by: SarithaN on May 01, 2017, 10:48:24 PM
வணக்கம் விபூமா

மீன் விடும் கண்ணீர் யாருமா அறிவா
மனித வாழ்வில் கண்ணீர் அவசியமானது

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிமா