கல்லறை எனும் கருவறையிலே அவள் !!
பேனா மையும்
கண்ணீர் சிந்துதம்மா
உன்னை பற்றி கிறுக்கையிலே ..
பல கனவுகளோடு
பிறந்த வீட்டை விட்டு
வாழும் வீடு புகுந்தவள்..
அவளை சிறு கவலையும்
தீண்டிடாமல் தன் உள்ளங்கையில்
தாங்கும் அன்பான கணவன் ..
தன் சொந்த மகளை போல்
அன்பாய் அரவணைக்கும் இன்னொரு
தந்தையாய் அவளின் மாமனார்..
உடன் பிறப்புகளை போல்
பாசத்தை கொட்டி தீர்க்கும்
நாத்தனாரும் கொளுந்தனாரும்..
சின்னஞ்சிறு விவாதங்களோடு
உரிமையாய் பாசத்தை காட்டும்
இன்னொரு தாயாய் மாமியார்..
எல்லாம் இருப்பினும் அவளின்
மனதில் மட்டும் எப்போதும்
மனதை வருடும் ஒரு கவலை..
காரணம் பிறர் அவளுக்கு சூட்டிய பட்டம்
புத்திர பாக்கியம் இல்லாத துரதிஷ்டசாலி
இன்னும் எளிமையாக கூறினால் மலடி ..
இறைவனின் படைப்பில் அவளுக்கு
குறைகள் இருப்பின் யார் மீது குற்றம்
கூறப்பட வேண்டும் ??
அவளும் பல கனவுகளோடு பிறந்தவள்தான்
தன் கருவில் ஓர் உயிரை சுமக்க எண்ணியவள்தான்
அந்த கரு குழந்தையாய் மாறி அம்மா
என்று அழைக்காதா என்றெண்ணி துடிப்பவள்தான் ..
தூற்றல்கள் கடுஞ்சொற்கள் என
இன்னும் எத்தனை ரணங்களைத்தான்
தாங்கிடும் அவளது புண்பட்ட நெஞ்சம்..
ஏற்கனவே பல மன உளைச்சலோடு
உயிர் இருந்தும் நடை பிணமாய் இருக்கும்
அவளை வார்தைகளாலேயே குத்தி கிழிக்கின்றனர்..
சுபகாரியங்கள் தொடங்கி சாதாரண
சடங்குகள் வரை அவள் தள்ளி
வைக்கப்படுகிறாள் .. ராசி இல்லாதவளாம் !!
தாயாக இருந்த மாமியாரோ
ஊர் உறவினர் சொல் கேட்டு மகளான
மருமகளை வார்த்தைகளால் சுடுகின்றார்..
தந்தையாய் இருந்த மாமனாரோ
இப்போது மருமகளை மகளென உரிமையாய்
பிறர்முன் கூற வெட்கப்படுகிறார் ..
நாத்தனாரும் கொளுந்தனாரும்
வீட்டில் ஏதோ மூன்றாவது மனிதரை
பார்ப்பது போல ஒதுக்கி செல்கின்றனர் ..
தன் கணவனின் நிலை எண்ணி கலங்கி
அவரை ஆறுதல் படுத்திட அனைத்தையும்
தாங்கி கொண்டு பொய்யாய் சிரிக்கின்றாள்..
கணவன் அனைத்தையும் அறிந்தவனாய்
அவளை தன் மார்போடு அணைத்தவாறே
எதையோ சொல்ல தயங்கியவாறே பேசலானான்..
" நா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் ..
எல்லாரும் அதைத்தான் ஆசை பாடுறாங்க..
எத்தனை நாள்த்தான் இப்படியே எல்லாரும் கஷ்டப்படுவது ??
சொல்க் கேட்டு மடிந்தே போனாள் ஒரு கணம்
வாழ்க்கையே முற்றிலும் வெறுமையாகிட .. நின்றாள்
வலிமை இல்லாதவளாய் மார்பில் சாய்ந்தபடியே ..
வார்த்தைகள் கண்ணீராய் கன்னத்தை நனைத்திட
சரியென மௌனமாய் சம்மதம் கூறிவிட்டு
நடைபிணமாய் நகர்ந்தாள் அங்கிருந்து ..
மனைவி முன்னிலையில் கணவனுக்கு மறுமணம்
யாருக்கு கிடைத்திடும் இந்த பாக்கியம்?? தான்
நேசித்தவரை இன்னொருத்திக்கு தத்துக் கொடுக்க..
கண்கண்ட கணவனே கைவிட்ட பின்பு
சுமையாய் இருந்திடல் ஆகாது என்றெண்ணி
தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் ..
இன்றோ அவளின் உயிரற்ற உடலின்
முன் பொய்யாக கதறி அழுகின்றது
அவளை கொன்ற உறவுகள் !!
அவளின் வயிற்றில் தான் புழுப்பூச்சிகள் இல்லை
அவள் மடிந்த பின்னர் பூமாதேவியின் வயிற்றிலாவது தன்னால்
புழுப்பூச்சி உண்டாகட்டும் என்றெண்ணிவிட்டாள் போலும் !!
இதே சூழலில் ஆண் மலடனாக இருந்திருந்தால்
ஊர் ஏற்றுக் கொள்ளுமா பெண்ணின் மறுமணத்தை
கணவன் உயிரோடிருக்கையில் ??
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
வணக்கம் மைனா சீஸ் ...
அழகான கவிதை ...
ஒரு பெண்ணின் வலி...
உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
தங்களின் வரிகளில் படிக்கையில் ..
ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!
அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
வணக்கம் மைனா சீஸ் ...
அழகான கவிதை ...
ஒரு பெண்ணின் வலி...
உணர்தேன் ஒவ்வொரு வரியிலும் ...
இவ்வாறான சூழ்நிலை கதைகளிலும்
நாடகத்திலும் ...ஒரு சில குடும்பங்களில்
நிஜத்தில் நடந்திருப்பதை அறிந்தாலும் ...
தங்களின் வரிகளில் படிக்கையில் ..
ஏனோ விழியினோரம் கரிக்கத்தான் செய்கிறது ....
பெண்கள் வாங்கி வந்த வரம் அவ்வாறோ..!!!
அருமையான கவிதை ...
வரிகளில் பெண் அவள் கொண்ட
வேதனையை அறிந்தேன் !!!!
சிந்தை சிறப்பு...
தொடரட்டும் கவிப்பயணம் ...
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Ff%2Fflowers%2Fpicgifs-flowers-297910.gif&hash=25efc50ac0037094111b5aab469d7226c29cc9e1)
vanakam rithika..
nerameduthu karuthugala alangarichu pathivitathuku nandri..mukiyama antha paravaigal rendum ennaiye paathu kanadikirathu pola iruku ;D
unmaithan sis.. nija vazhkaila nadakurathu thana kathaigalilum naadagangalilum kaatchiyida paduthu.
Pengaloda varam kanner nu sonnal ipo iruka kaala kattathula thanneruku panjame irukathu sis.. avalavu kanner sinthapaduthu.. aanalum ipo palar ethaiyum thuninju nirkavum kathukitanga.. atharkaaga perumaiyum santhosamum iruku.. vazhthukaluku meendum oru murai nandri sis :)..