FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SwarNa on April 24, 2017, 05:19:20 PM
-
துள்ளித் திரிந்த சிறுபெண் நான்
தாய் சொல் மீறாதவள்
தந்தையின் செல்லத்திற்கோ ஏகபோக உரிமை
தமையனுக்கோ சிறியவளிடம் குட்டிச்சண்டைகள்
சுற்றத்திற்கோ பணிவானவள்
நட்புவட்டமோ திமிர்பிடித்தவளென ஏசும் செல்லமாய்
பூ தரும் பாட்டியோ கன்னம் வழித்து,நெட்டி முறித்து
நல்லா இரு கண்ணு என வாழ்த்த
பட்டாம்பூச்சியாய் பறந்து
சிட்டுக்குருவியாய் சுற்றித்திரிந்தவள் நான்
ஆங்கோர் விடாக்கண்டனைக் கண்ட நாள் முதல்
பாடித்திரிந்த வாயும்
ஓடித்திரிந்த காலும்
சற்றே இளைப்பாறிற்று
உயிர்ப்பூவைப் பறித்துத் தொடுத்தான் மாலையாய்
அவனின்றி என் மனமும் ஆகிற்று பாலையாய்
அனைவர் மனங்கொள்ளை கொண்ட
என்னை
சிறையெடுத்தவன் அவனே <3 <3 <3
-
தங்கச்சி ...,
அருமையான வரிகள்
காட்சிகள் என் கண் முன்னே வந்தன
மனம் கவர்ந்த கள்வன் யாராயினும்
வாழ்த்துக்கள் :D :D :D
-
Hi sis! Inime na unga tamil kvidhai ku fan aiten :)<3
-
Chumma na :) nandri
-
Loli sis ty :)
-
ஏன் ?
ஆர்ப்பரிக்கும் அலைகடல்தான் ஓய்ந்திருக்க
தனித்திருக்கும் அகக்கடல்தான் பொங்கியதும் ஏன்?
அலைமகள்தான் அசையாதிருக்க,
நிலமகளும் துயின்றிட,
பெண்மனம்தான் துடிப்பதும் ஏன்?
கானகத்தின் காரிருளில்
அடைந்திட்ட புல்லினங்களும்,
தொடுவானில் எட்டிப்பார்க்கும் நிலவும்,
நானில உயிரினங்களும் நித்திரையில் ஆழ்ந்திருக்க
வானகமும்,வையகமும் மோனத்திலே வீற்றிருக்க
கன்னியிவள் மனதும் தவிப்பதேன்?
காற்றில் மிதந்து வரும் மலர்களின் மணமும்
காரிகையிவள் மனதில் வெம்மை தோய்த்திட
மங்கைக்கு கையறு நிலையும்
ஏன்?
-
வணக்கம் தங்கையே
கவிதைகள் படித்தேன்
இரசித்தேன்
கவிதையென ருசித்தேன்
சிறையெடுத்தவனை கண்ட
யாரும் சீண்டவில்லையோ
கேலிக்கையெனும் அம்பெடுத்து
பாடிய வாய்கள் ஓயாது பாடட்டும்
ஓடிய கால்களும் ஓய்வின்றி ஓடட்டும்
இசையும் நடனமும்
சிறையெடுத்தவனின்
இரசனை ஆகலாம்
கவிதை நாயம் சிறப்பு
கவிதை ஒவ்வொன்றும் புதிய
பக்கத்தில் வருவது நல்லது
இல்லையேல் கருத்துக்களுள்
சிக்கி கவிதையின் முகங்கள்
மறையும் தங்கையே
எனவே இது தங்கத்தின்.......... வாழ்த்தொலி மட்டுமே
-
ஆரவாரம் புரியும் கானகத்தின்
ஓரத்திலா உன் பாதை?
மர்மமான இருள் படர்ந்த ஆழத்தின்
ஊடேயா உன் பாதை?
எந்த வழியைத் தொடர்ந்து
உந்தன்
பயண நூற் கண்டின் கயிறு
முனை திரிக்கப்பட்டு
எனைக் காண
வருகிறாய்? :D :D :D
-
Hi kiddo sis ;D kavithai pramatham :D rmba peel pani eluthirukinga ;) ithuku pinnal irukum flashback enna sis ;D nan chuma sonnen sis ;) ungaloda kavipayanam karai purandu oda vazhthukkal sis ;)
-
மிக அழகான கவிதை தோழி சுவர்ணா அருமையான தேர்ந்தெடுத்த வரிகள். பாராட்டுகள்.
கவிதை வரிகளை கட்டமைப்பதில் கவனம் தேவை. முடிந்தால் பத்திகளாக பிரித்து எழுத முயற்சி செய்யுங்கள் தோழி. பத்திகள் கவிதைக்கு எளிமையையும், பார்வைக்கு அழகும் சேர்க்கிறது . படிக்கின்றவருடைய மனத்திற்கும், கண்ணிற்கும் தளர்ச்சி ஏற்படாமல் காக்கின்றன.
தொடர்ந்து கவிதை எழுதுங்கள் கவிதாயினி சுவர்ணா. வாழ்த்துக்கள்! :)
-
Sarithan anna hmm na .maathikiren .unga thanga vaai epovo moodichu anna :D romba samathu agiten la ipomlam
-
Chumma na noolkandu kaanapochu :( kandupichu thanga na
-
Vipu ty :D back lam ila :P eee
-
Maran thozha :)
maathikiren.nandri :) mob r tab la typ pandradhala enala sariya panama pochu.nandri .kavithayini alavukulam na inum valarala :)
-
தங்கத்தின்..........
« on: April 24, 2017, 05:19:20 PM »
Quote
துள்ளித் திரிந்த சிறுபெண் நான்
தாய் சொல் மீறாதவள்
தந்தையின் செல்லத்திற்கோ ஏகபோக உரிமை
தமையனுக்கோ சிறியவளிடம் குட்டிச்சண்டைகள்
சுற்றத்திற்கோ பணிவானவள்
நட்புவட்டமோ திமிர்பிடித்தவளென ஏசும் செல்லமாய்
பூ தரும் பாட்டியோ கன்னம் வழித்து,நெட்டி முறித்து
நல்லா இரு கண்ணு என வாழ்த்த
பட்டாம்பூச்சியாய் பறந்து
சிட்டுக்குருவியாய் சுற்றித்திரிந்தவள் நான்
ஆங்கோர் விடாக்கண்டனைக் கண்ட நாள் முதல்
பாடித்திரிந்த வாயும்
ஓடித்திரிந்த காலும்
சற்றே இளைப்பாறிற்று
உயிர்ப்பூவைப் பறித்துத் தொடுத்தான் மாலையாய்
அவனின்றி என் மனமும் ஆகிற்று பாலையாய்
அனைவர் மனங்கொள்ளை கொண்ட
என்னை
சிறையெடுத்தவன் அவனே <3 <3 <3
வணக்கம் ஸ்வர்ண சீஸ்...!!!
ரொம்ப அழகா எழுத்திருக்கிங்க ....
அழகான வரிகள் ...
'' உயிர்ப்பூவைப் பறித்துத் தொடுத்தான் மாலையாய்
அவனின்றி என் மனமும் ஆகிற்று பாலையாய்
அனைவர் மனங்கொள்ளை கொண்ட
என்னை
சிறையெடுத்தவன் அவனே''
தொடரட்டும் கவிப்பயணம் ...!!!
~ !! வாழ்த்துக்கள் !! ~
-
Nandri rithi sis :)