-
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 144
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F144..png&hash=1bdb4eaffe5ead8e8186bcd7104ec2eb28ec3062)
-
கால் செல்லும் பாதையில்
காலம் சொன்ன வேளையில்
கடந்து வந்த கல்லும் முள்ளும்
கண்ணீரில் கரையாதே
உழைக்கும் வர்க்கத்தின்
இரத்தம் உறிஞ்சும்
முதலாளி எனும் அட்டை
பூச்சிகளுக்கோ பஞ்சம் இல்லை
இந்த பரந்த உலகிலே
வேர்வை சிந்தி உழைக்கும்
இவர்களுக்காய் விடிவு காலம்
பிறக்கவில்லையே
பிறந்ததோ வேதனை தந்த
வலிகள் மட்டுமே
மாறும் இந்த காலம் என்று
கண்டவரோ யாரும்
இல்லையே மாறாக கண்ணீர்
கொண்டவரே காணும்
இடம் எல்லாம்
உன் தலை மேலுள்ளவன்
ஏவிய பணி செய்யும் பழி
தீர்க்க உந்தன் கீழுள்ளவன்
தலையை பலி வாங்காதே
கைநீட்டி வேலை சொல்பவர்
கை இறங்கவே
கை கட்டி வேலை செய்பவர்
கை ஓங்க வேண்டும்
***விபு***
இந்த கவிதையை நான் நேரம் காலம் பாராமல் உழைக்கும்
FTC யின் எல்லா நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன்
உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்
-
ஓர் சிறு உளி
ஒரு சிலையை வடிக்க
படும் அடிகளோ பல்லாயிரம்
சிலையை தான் ரசிக்கிறோம்
உளி பட்ட அடிகளை யாரும்
நினைத்துப் பார்ப்பதே இல்லை
கல் சுமந்து மண் சுமந்து
வியர்வையை நீராக்கி
தன் கடின உழைப்பால்
கட்டிடத்தை எழுப்புகிறான் தொழிலாளி
கட்டிடத்தை அண்ணாந்து பார்த்து
வியர்க்கிறோமே தவிர
அதன் அடியில் அஸ்திவாரமாக இருக்கும்
ஏழைத்தொழிலாளியை யாரும்
நினைத்துப் பார்ப்பதில்லை
ஏர் உழுது நாற்று நட்டு
இரத்தம் சிந்தி
உலகுக்கே உணவு படைத்திடும் உழவாளி
வயிறார உண்ணும் நாம்
அவன் கஞ்சிக்கு கூட வழியில்லாமல்
அவதிப்படுவத்தை நினைத்தும் பார்ப்பத்தில்லை
இது தான் உலகம்
கஷ்டப்பட்டு கடினமாக உழைத்திடும்
ஒரு வர்கம்
அதை அனுபவிக்கும்
இன்னோரு வர்கம்
உழைப்பவனின் உழைப்பை உறிஞ்சி
கொழுக்கிறது இந்த பணக்காரவர்கம்
ஏன் நம் அரசாங்கங்கள் கூட
வரி என்ற பெயரில்
இல்லாதவனிடம் இருந்து தானே
இருப்பதையும் பிடுங்குகிறது
வெற்றி என்பது ஓர்
இலக்கைத் தொடுவதல்ல
பல இடர்களை முறியடிப்பது
சறுக்கு மரத்தில் சற்று
சரிந்து விட்டதால் சாதனைகள்
மறைந்து விடாது
முயற்சியும் கடின உழைப்பும் இருந்தால்
சறுக்கு மரத்தின் உச்சியையும்
தொட்டு விடலாம்
உயிரில் உணர்ச்சி இருக்கும் வரை
முயற்சி செய்
கடினமாக உழை
நிலவையும் தொடலாம்
உலகையும் வெல்லலாம்
-
பூமி பந்தும் சுழன்றதே
கடிகார முள்ளும் சக்கரமென
வேகம் கொண்டு சுழன்றதே ....
சுழன்றது முள் மட்டுமல்ல
வாழ்க்கையும்தான் ....
காலத்தின் உத்தரவில் ...
வறுமையின் கட்டாயத்தில் ...
கனவுகள் பலித்ததில் சிலர் ..
கனவுகள் பலியாகியதில் பலர் ...
வாழ்க்கையின் அத்தியாயம்
தொடங்குமிடம்...
இதுதான் வாழ்க்கையென
புரியும் கணம் ...
குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமும்
மறையுமிடம் ....
உத்தியோகமெனும் கடமை கையில்
பெற்றிடும் தருணம்...
தலைமேல் ஒருவன் ஏறி அமர்ந்து ஆட்டிப்படைக்க....
சாவி போட்ட பொம்மையாய்
பணியினைப் புயல் வேகத்தில் புரிந்திட ...
கால்களில் பம்பரம் அணிந்திருப்பாரோ...?
சந்தேகம்தான்...!!
விதியின் வழி அறியா உள்ளம் மருக...
உடலின் சோர்வும் வலியும் சேர்ந்து வருத்த...
கறைபடியா பெயருடன்..
அலட்சியமில்லா லட்சியமொன்றே
குறிக்கோள்...
பம்பரமென சுழன்றதிலும் பயனுண்டு....
செயலில் சாமர்த்தியமுண்டு...
பணியில் கடும் முயற்சியுண்டு...
அதற்கு தக்க சன்மானமும் உண்டு...
தலையசைத்த காலம் கடந்தது...
தலைமைத்துவம் நிலைத்தது...
கண்களில் எதிர்காலம் ஜொலித்தது...
கடும் உழைப்பிற்கேற்ற மரியாதையும் கிடைத்தது....
பகலும் இரவாகும் ...
நாளைய பொழுதும் இனிதாகும் ...
கடும் உழைப்பின் எல்லை ..
அது வெற்றியில் முடிவுறும்...
கடப்பாறை பிடித்தவனும்
உழைப்பாளியே...
கணினி முன் அமர்ந்தவனும்
உழைப்பாளியே....
செய்திடும் பணி வெவ்வேறாயினும்....
அதன் கடுமையென்னவோ ஒன்றுதான்....
கடும் முயற்சி கொண்டு உழைத்திடு...
வெற்றி அது நிச்சயம்...
இன்று வெற்றியெனும் படியில்
முன்னோக்கிப் பதித்திடும் பாதம்...
அதுவே நாளை இவ்வுலகம் அறியப்
போகும் சரித்திரம்....
முற்றில்லா முயற்சி...
கடும் உழைப்பை பரிசளித்திடும்...
வெற்றியின் ரகசியப் பாதைக்கு
அதுவே வழிவகுத்திடும் ...!!!!...
நன்றி....
~ !! ரித்திகா....!! ~
-
வெற்றி என்னும் இமயத்தை அடைய வேண்டும் என்றால்..
முயற்சி என்னும் படியில் உன் பாதம் பதிய வேண்டும்..
தோல்விக்கு பின்னால் சிறு தவறு இருக்கலாம்..
ஆனால் உண்மையான வெற்றிக்கு பின்னால்..
கடும் முயற்சி மட்டுமே இருக்க வேண்டும்..
வெற்றி பெறுவதற்க்கு பணிவு வேண்டும்..
தோல்வி கண்டால் பொறுமை வேண்டும்..
எதிர்ப்பு வந்தால் துணிவு வேண்டும்..
இவை அனைத்தும் பெற..
முயற்சி மட்டுமே வேண்டும்..
கஷ்டங்கள் இல்லை என்றால்..
போராடும் எண்ணமே
நமக்கு இல்லாமல் போய் விடும்..
தாஜ்மஹாலில் தெரிவது ஷாஜஹான் அல்ல..
உழைப்பாளியின் உழைப்பு தான்..
கோவிலில் தெரிவது கடவுள் அல்ல..
சிற்பியின் உழைப்பு தான்..
பசியில் தெரிவது உண்ணும் உணவு அல்ல..
விவசாயியின் வியர்வை தான்..
இப்படி என் சிந்தைக்கு ஒவ்வொன்றிலும்
தெரிவது உழைப்பின் உயர்வே..
கடின உழைப்பின் சக்தி மட்டுமே
உலகில் உன்னதமான சக்தி..
அதை வெற்றி கொள்ளும் ஆற்றல்
வேறு எந்த சக்திக்கும் இல்லை..
Idhai unmaiyana ulaipaligaluka
samarpikkiren....
:)deepali
-
மனிதனே
எண்ணங்களுக்குள்
எழுத்தாகி விடு
எழுச்சி அடைவாய் !
சிந்தனைக்குள்
சிறைபடு
சிறந்தவனாவாய் !
முயற்சிகளுக்குள்
முகாமிடு
முதல்வனாவாய் !
உழைப்புக்குள்
உடும்பாகு
உயர்ந்தவனாவாய் !
தன்னம்பிக்கைக்குள்
தங்கிவிடு
தங்கமாவாய் !
நம்மை நாம்
புரிந்துகொண்டால்
நம் உயரம் அறிந்துகொண்டால்
உலகத்தை வெல்லும் நாள்
இன்னும்...
தூரம் இல்லை... இல்லை !
-மாறன்
-
தோழா
குழந்தை பருவம் முதல் ஒவ்வொரு பருவத்திலும்
நம் கடின உழைப்பின் அர்த்தம் மாறுகிறது
வீட்டு பாடம் முடிப்பதில் தொடங்குகியது
பள்ளி பருவத்தின் உழைப்பு -நடுநிசியில்
தூங்காமல் அம்மா போட்டு தந்த காப்பியில்
தொடர்ந்தது என் கல்லூரி படிப்பின் உழைப்பு !
வேலைக்கான தேர்விலும் சரி
என் காதலுக்கான தேடலிலும் சரி
கரைந்தது என் வாலிபத்தின் கடின உழைப்பு !
அழகான மனைவி அன்பான பிள்ளைகள்
இவர்களுக்கானது வாழ்க்கையில் மீதியுள்ள
என் கடின உழைப்பு !
தோழா ,
வாழ்க்கை ஒரு ரோஜா செடி போல
முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும்
முள்ளை உன் கடின உழைப்பால் உடைத்தால்
நறுமணம் வீசும் மலராகும் உன் வாழ்க்கை
தோழா ,
வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு.
அதற்கு அவமானம் தெரியாது,
விழுந்தவுடன் அழுது முடித்து
திரும்பவும் எழுந்து நடக்கும்..!
"உளி பட்ட கல்லில் தான்
உருவத்தை காண முடியும்
தோழா ,
கடின உழைப்பு இருந்தால் தான்
உயர்வை அடைய முடியும் !
தோழா ,
சின்னஞ்சிறிய எறும்புக்கும் உழைப்பு தேவை படும்போது
நமக்கும் தேவை தானே யோசி தோழா !
தோழா ,
கடின உழைப்பின் "பலன்" இன்று இல்லை என்று எண்ணாதே
உன்னிடம் சேர "அது" துடித்துக்கொண்டு தான் இருக்கும் ஆதலால்
உழைப்பை நிறுத்தாதே தோழா .....
வெற்றி நிச்சயம் உன்னை சேருமே தோழா !!
-
வாழ்கை என்னும் சக்கரத்தை
கையில் ஏந்தி சுற்றும் நான்
வெற்றியெனும் கனியை பறித்ததை விட
தோல்வியெனும் தேள்களை பார்த்ததே அதிகம்
விடா முயற்சியின் பேரில்
நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்
என்னை வெற்றியின் கோபுரத்தில்
கொண்டுபோய் நிறுத்தும் என்று
பகல் கனவு கண்டேன்
வெற்றியை தேடி நான் மலை ஏறும்போது
என்னை சுற்றி இருப்பவனோ
கையில் கணினியோடு சொகுசு அறையினுள்
அடுத்தவர் உழைப்பில் சுகம் காண்கிறான்
வாழ்க்கையில் சந்திக்கும் அவமானங்கள் பல
என்னை மூலையில் முடக்குகிறது
ஆனால் மூளை ஏற்க மறுக்கின்றது
இதுவும் கடந்து போகுமென
இனிமேலும் விடமாட்டேன் முயற்சியை
அட்டை போல் என் ரத்தத்தை உறிபவனுக்கு
அடிமைபோல் வாழமாட்டேன்
வெற்றி என்னும் கனியை பறிக்காமல்
என்றும் ஓயமாட்டேன்
-
உலகிலே மிகக் கடின உழைப்பாளியும் அம்மா
கல்வி தரும் அறிவு கொண்ட உழைப்பும்
கல்லாத வாழ்வில் உடலால் மாயும்வலியும்
படித்த புத்தகம் பார்த்து கட்டளையிட
படிக்காதது உன் குற்றம் தலைமேல் சுமை
கற்றவன் கல்வியால் உலகே கலப்படமானது
உணவு நீர் முதல் மருந்து கல்விவரை வியாபாரம்
பாமர மக்களை ஏய்த்து நீ பறித்த விளைநிலங்கள்
வலியில் பூமியில் வளி நீர் கனிமங்கள் ஏதுமின்றி
தரிசாகி மலடான கோலம் வெடிப்புக்களாய்
வானமண்டலம் சென்றால் என்ன அங்கேயும்
கல்வி கொண்ட அறிவால் நீ செய்த பாவம் துரத்தும்
கல்வியெல்லாம் கல்லாதோரையும் வாழ்விக்கவே
ஏழைமகன் பூமியை உருட்டுகின்றான்
மாய்ந்து மாய்ந்து உணவுக்காய்
இரங்குவார் யாருண்டு
உழைக்கும் வர்க்கம் உயிரை காக்க
நீர் நிறைந்த முகில்கள் காண்கின்றோம்
என்ன பயன் நான் அருந்த நீ இல்லையே - நீரே
வீட்டிலே நம்மை பெற்றவள் செய்வதெல்லாம்
உழைப்பிலையா
அம்மா உழைப்புக்கு ஊதியம் தர அப்பாவால்
முடியுமா
தாய் ஈன்ற பிள்ளைகள் அனைத்தும் பெறும்
வருவாயும் அன்னை உழைப்புக்கு ஈடாகுமா
வெட்டியென்று ஒரு வீண்வார்த்தை பேசுவதேன்
கற்ற கல்விக்கு தக்க வேலையை நீயே உண்டாக்கு
இல்லையேல் கல்வியேன் உனக்கு கூலியாய்வாழ
அம்மாவுடன் சேர்ந்து வீட்டுவேலை செய்
தாயின் மனம் குளிரும் ஆயுள் நெடுக்கும்
தனியே மாயும் தாயின் உடல் தேற
உந்துணை போதும் மருத்துவ செலவு வராது
கற்றபின் வேலைசென்று உழைப்பதுதான் உழைப்பா
கற்றபின் பணம் உழைக்கத்தான் வேலையில்லை
வீட்டிலே எப்போதும் வேலையுண்டு செய்திட
செய்து பார் வெட்டியென சொன்ன நாவுகள் போற்றும்
வீட்டுக்கு வெளியே வந்து உன் தெருவில் கல்லாத
பிள்ளைகளுக்கு கற்பித்துப்பார் உன் அறிவுகொண்டு
உன் உழைபு ஊரெங்கும் போற்றப்படும்
கல்விக்கான வேலை கிடைக்கும்வரை
ஊருக்காக நேர்மையாய் சேவைசெய்
உத்தமனென பட்டம் கொடுப்பர் மக்கள்
நேரங்கள் தப்பாத துயிலலும் துயில் எழுதலும்
வீடு முற்றம் கூட்டுதல் ஆடை சலவை செய்தல்
மனதே நம்மை உறுத்தாமல் வீட்டு கடமை செய்தல்
பாத்திரம் கழுவுதலும் உழைப்பு
உழைப்பெல்லாம் வீட்டுக்கு வெளியே எனும் - மாயையே
அம்மா அக்கா தங்கையர் உழைப்பை
இகழ்ந்து பணம் பெறும் உழைப்புக்கு
வீட்டுக்கு வெளியே துரத்தியது பாசத்தை - தொலைத்தது
யாவரும் எழுமுன் எழுந்து தொடங்கும் கடமை
யாவரும் உறங்கிய பின்னும் ஓய்ந்திடுமா
வீட்டில் வீட்டுக்காய் உழைக்கும் பெண்களின்
உழைப்பை ஏற்று போற்றாத ஆண்களின் உழைப்பும்
வீட்டுக்கு வெளியே வஞ்சிக்கப் படும் அங்கிகாரமற்று
அளக்கும் அளவையாலேயே அளக்கப்படும் உழைப்பும்
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே