FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on April 18, 2017, 03:12:34 AM
-
அண்டத்தில் மிதக்கும் கோளத்தில்
ஒட்டியிருக்கும் ஒட்டடைப் பூச்சிகள்
எல்லாம் என்னுடையதென
மார்தட்டிக் கொள்ளும் மாயை !
எல்லாம் நிலையற்றது என்பதில்
நானும் சேர்த்தி என்பதை
ஒப்பத் தயங்கும் உள்ளம்...
இறுகிப்போன இதயத்தின் மத்தியில்
செல்லரித்துப்போன நிஜங்கள்
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!
இதுவும் கடந்து போகும்
என்று சொல்லி
கடந்து போவது எது?
கிணற்று நீரில்
ஒரு கணம் எட்டிப் பார்த்துவிட்டு
நகர்கிறது வாழ்க்கை,
உறக்கத்தில் எழுப்பப்பட்ட
குழந்தை போல
மனநீர்
ஆறாது அலைகிறது.
எழுத்துக்களில்லா தாள்கள்
கற்பனை இருந்தும்
எழுத இயலா கவிதைகள்,
பிணமாகி வெகு நாட்களாயிற்று
இயலாமையுடன்!
-
எல்லாம் எனக்கெனும் சுயநலம்
யதார்த்தத்தை மறுக்கும் மாயை
புறம் தள்ளப்படும் உண்மைகள்
அனைத்துக்கும் ஒரே ஆறுதலெனும்
ஏமாற்று தத்துவம்
எல்லாம் கடந்து போகும், எப்போது?
வலிகளை கண்டு துவண்டுவிட்டால்
தோற்றுவிடும் வாழ்க்கை
தோளை நிமித்துங்கள்
வெற்று காகிதங்களை
உயிர் பெறச்செய்யுங்கள்
உண்மையெனும் கருவால்
வார்த்தைகளின் யாலம்கொண்டு
-
தங்கள் பின்னூட்டத்தில் நெகிழ்ந்தேன்! நண்பா சரிதன்...
மிக்க மகிழ்ச்சி, தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி.
-
எல்லாம் நிலையற்றது என்பதில்
உள்ளது நம் வாழ்க்கையின் சூட்சுமம்
அரியாதோர் பலர் என்னை போல்
அரிந்தோர் சிலர் தங்களை போல்
வெற்று காகிதங்களை
உங்கள் பேனாவில் மை இட்டு நிரப்புங்கள்
எங்களை போலுள்ளவர் அறிந்துகொள்ளவேனும்!
வாழ்த்துக்கள் சகோ
-
Hi maran anna :) azhagana kavithai na :) vazhthukkal na :)
-
மிக்க மகிழ்ச்சி...! நண்பா சும்மா மற்றும் சகோதரி விபூர்த்தி.
தங்களின் இனிய கருத்திற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. :)
-
ஐக்! ஐக்! மாறனின் கவிதை. மிக அருமையாக உள்ளது தோழா. நிறைய நாட்களுக்கு அப்பறம் உங்கள் கவிதை படிக்கிறேன். என்றும் எப்பொழுதும் அழகிய கவியை உருவாகிய என் தோழருக்கு வாழ்த்துக்கள்..