FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on April 18, 2017, 12:43:59 AM
-
வெண்சங்கு கழுத்து வெறித்திட
ஆண்குலமே.....
உன் மனைவி இறந்தால் புது மாப்பிள்ளை நீ.....
நீ இறந்தால் அனைத்தும் இழந்தவள் மனைவி.....
எந்த வகை நீதியோ!
கருமை வண்ண கூந்தலில் மிழிர
வரம் வாங்கிய மலர்கள் பறிக்கப்பட
இருள் நிறை கார்குழலில் மலரும் மலர்கள்
மலராது மறைய
நுதலில் இட்ட வட்ட குங்குமம் கரைந்தோட
ஏழாம் பிறை நுதல் தருசு நிலமாக
தாலியில் பொத்திய முடிச்சுக்கள் இழகி அவிழ
வெண்சங்கு கழுத்து வெறித்திட
கை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று
விரோதியாய் மோதி வளையல்கள் உடைய
கரங்கள் பட்ட மரங்களின் கொப்பாக
கைவிரல் மோதிரங்கள்
எண்ணையிட்டு உருவப்பட
விரல்கள் இலையில்லா கொடியாக
சதங்கைகள் அகற்றப்பட்டு பாதங்கள்
ஒலியிழந்து நிசப்தமாக
மெட்டிகள் வெட்டப்பட சிவப்பாய்
குங்கும நிறத்தில் கசிகிறது குருதி
அவளது இதயம் சிந்தும் கண்ணீரென
கால்விரல்கள் சிந்தும் இரத்தம்
வான்நோக்கி என்னை தேடுகிறது.....
ஆண்குலமே.....
உன் மனைவி இறந்தால் புது மாப்பிள்ளை நீ.....
நீ இறந்தால் அனைத்தும் இழந்தவள் மனைவி.....
எந்த வகை நீதியோ!
அறுதலியென்கையில் வலிக்கவில்லை..... அத்தான்!
நெஞ்சுள் இதயமான நீங்கள் எனை
பிரிந்தது முறையோ தவித்திட நான்.....
கூடவே வருவேன் இல்லையேல் மங்களம்
கொண்டு உன்னை அனுப்பிய பின்னே
வருவேனென சொன்னது பொய்யோ.....
பிரிவின் வலியால் துவள்கிறாள் மங்கை
தேற்றிட யாருமில்லை..... அமங்கலியாமென
மிருகங்கள் செய்கிறது மதச்சடங்கு.....
வான்நோக்கியவள் கண்களின் அடைமழை
நிலங்களை நனைக்கிறது.....
நெஞ்சம் நோகிறது அழுகிறேன் கண்ணீர்
வரவில்லை.....
இறந்த நான் வீட்டு கூரையில்தான்
இருக்கின்றேன்.....
அதற்குள் என் மனைவிக்கு இத்தனை
கொடுமையா.....
கடவுளிடம் வரம் கேட்டேன் மீண்டும் வாழா
அனுமதித்தார் உடல் புகுந்தேன்
கொடியவர் ஓடிமறைய
எரிமலையென வேடித்தேன்
மதச்சடங்கு செய்தோர் மண்டை உடைத்தேன்
என்னவள் வலிபோக்கி அணைத்துக்கொண்டேன்
ஆண்குலமே.....
உன் மனைவி இறந்தால் புது மாப்பிள்ளை நீ.....
நீ இறந்தால் அனைத்தும் இழந்தவள் மனைவி.....
எந்த வகை நீதியோ!
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
sari na :D azhaga sollirukinga na :D indraya ullagin yatharthamana unmai na :) thodarnthu eluthikite irunga na :D
-
விபூமா,
உள்ளவரையிலும்
ஓயாமல் எழுதுவேன்
எழுதுவதெல்லாம்
சிறந்தவை அல்ல
எழுதிச் செல்வதுள்
ஏதோ சிலது நல்லதுண்டு
நன்றி தங்கையே
-
Vanakam sarithan..
azhaama sinthanai azhagana varigal..
Erkanave kanava ilanthu vethainala iruka penkala innum athigama manathalavilum udalalavilum kaayapaduthura seyalgal.. ithaivida athigam kaayangal tharathu soolnthu irukavangaloda varthaigal.. idam porul ariyathu pesi ventha punnil vel paaichina kathaiya aagiduruthu.. kanavanai ilantha manaiviku oru nyayam.. manaiviyai ilantha kanavanuku oru nyayam.. :-\
-
வணக்கம் தோழி,
உண்மைதான்
இதை அதிகமாக இறுகப்பிடித்து
திணிக்கின்ற நிலையில் இருந்து
தாய்க்குலம் வெளியே வரவேண்டும்
இன்னமும் அதிகமாக விடுதலைகாண
புரட்சிகள் பல வேண்டும்
இப்படி செய்கின்ற பாட்டியர் தலையில்
செயற்கை முடிகள் இருக்கும் என்றால் :) :) :)
மதச்சடங்கு செய்தோர் மண்டை உடைத்தேன்
உடைத்த மண்டையில் சவரிமுடி :) :) :)
உங்கள் கருத்துக்கு நன்றிகள் தோழி
-
அன்பிற்குரிய சரிதன் அண்ணா,
தங்களுடைய கவிதையை வாழ்த்துரைக்க
எனது தகைமை போதியளவு இல்லை
இருந்த போதிலும் ஓர் இரசிகனின் பார்வையில்
கவிதையின் வரிகளைப்படிக்கும் பொழுது
ஓயாது பாயும் கடல் அலைகளும் வானத்தில்
சுதந்திரமாய் பறந்து திரியும் பறவைகளும்
காற்றின் வீச்சில் ஆடிக் கொண்டிருக்கும்
மரங்களும் சற்று நேரம் உறைந்து போன தருணமாய்
தங்களுடைய கவியின் ஆற்றல் நிறைந்து நிற்கிறது.
பெண்ணவள் மணமகள் ஆகி மணாளனை பறிகொடுத்து
சமூகத்தில் யாவையும் இழந்த உளக்குமுறலின் உணர்வை
அறிந்த கவிஞனின் வரிகள்.
வாழ்த்துக்கள் அண்ணா
-
வணக்கம் தம்பி
கொண்ட அன்பின் மிகுதியால்
புலர்ந்த பெருமை மிகு சொற்களில்
மகிழ்சி
மேன்மையான புகழ்ச்சிக்கு
அருகதை எனக்கில்லை
உன் அன்பை இதயமெனும்
பேழையில் ஏந்திக்கொண்டேன்
கவிதையின் முழுமை இப்படி இல்லை
இங்கே மட்டும் சிறிது சிரிப்பு இருக்கும்படி
மீண்டும் வாழ்வு தொடர்வதுபோல் முடித்தேன்
அன்பில் மகிழ்ச்சி தம்பி, நன்றி.