FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 17, 2017, 09:48:12 PM
-
தோழா ,
உன் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் இருந்தால்,
நீ துன்பத்தை அறியாதவன் என்பதை
புரிந்து கொள்..!
உனக்கு அவர்களிடம் பேச ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்
ஆனால்
அவர்களிடம் கேட்க நிறைய இருக்கிறது
தெரிந்து கொள் ..!!
நீ மண்ணில் பிறக்கவே வலி தந்த போதும்
தான் மண்ணில் உள்ளவரை நேசிப்பது அவர்கள் தான்
அறிந்துகொள் !
அன்பை உள்ளே வைத்து கொண்டும்
வெளியே எதிரியாய் உனக்கு தெரிவது
அவர்கள் தான்
உன்னை மாற்றி கொள் !!
அன்பையே தோற்கடிக்கும்
அன்பை பெற்றவர்கள் அவர்கள் தான்
கொஞ்சமேனும் திருப்பி தர
கற்றுக்கொள் !!
உயிருடன் உடன் வைத்து கொள்
முதியோர் இல்லம் அனுப்பி கொல்லாதே
அம்மனது அங்கேயும் உன்னை வாழ்த்தும்
ஆனால்
உன் பிள்ளையும் உன்னை சேர்க்கும் அவ்விடம்
மறவாதே !
-
சகோ. ஆழமான கவிதை
உயிருடன் உடன் வைத்து கொள்
முதியோர் இல்லம் அனுப்பி கொல்லாதே
அம்மனது அங்கேயும் உன்னை வாழ்த்தும்
ஆனால்
உன் பிள்ளையும் உன்னை சேர்க்கும் அவ்விடம்
மறவாதே!
தவறு செய்தவன் இதைப் படித்தால் திருந்துவான்
இல்லையேல் யடமெனக் கொள்வோம்.
வாழ்த்துக்கள் சகோதரா.
-
தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல சகோ
-
Chumma na :D azhagana petror ullam sollum kavithai na:) vazhthukkal na:)
-
Nandrigal pala vipu ma :D :D
-
Chumma kavithai arumai..
thannalamatrathu thai thanthaiyin manathunu romba azhaga solirukinga.. ethaiyum ethirpaakama elathaiyum namakaaga thara antha ullangal palana ethirpaarpathu paasatha mattum than.. antha anba kooda thara yosicha atha vida periya paavam irukathu ::)
-
Sariya sonnenga myna
Amma kitta saaptiya ma nu kettale avanga vayiru niranjidum..
adha kooda kekaama romba peru busy nu solli theriyiraanga
Nandrigal pala