FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 13, 2017, 01:39:34 PM

Title: யார் இவள்!?
Post by: ChuMMa on April 13, 2017, 01:39:34 PM
வளர் பிறை போல மலர்ந்து முழு நிலவாய்
மாறும் என்றிருந்தேன் ஆனால்
அது தேய் பிறை ஆகி அமாவாசை
ஆகி போனதேனோ ?!?!

ஓடையில் விட்ட காகித கப்பல்
கடலை சென்றடையும் என்று எண்ணும்
சிறுவனாய் ஆகி போனேன் நான் !

என் நிழலினின்றி
எனக்கு வேறு துணை இல்லை என்று
உணர்த்திவிட்டாள் அவள் !

அன்பே ,உன்னோடு வாழ நினைத்தேன்
ஆனால்
இன்று கல்லறையில் புதைத்து விட்டாயடி எனை

கடற்கரை மணலில் நாம் நேற்று
நடந்த பாத சுவடுகள் கூட
மாயவில்லை இன்னும்..
ஆனால்  நீயோ !?!!

தவறுகள் செய்திருப்பின் என்னை தண்டித்துவிடு
என்னை விடுதலை செய்துவிட்டு போய்  விடாதே
என் அன்பே !!

என்  நினைவுகளாவது
வைத்து கொள் உன் இதயத்தில்,
அதிகமாய் உன்னை நேசித்தவன் என்று !!

பழகிய காலங்கள் அனைத்தும் கனவுகளாய்
போனதேனோ !




Title: Re: யார் இவள்!?
Post by: SarithaN on April 14, 2017, 07:05:01 PM
வலிகளின் வெளிப்பாடு.....

கவிதையின் வலிகளாய் போகட்டும்.....

கவிஞரின் வலியாகிடாமல்... கனக்கும் கவிதை.


Title: Re: யார் இவள்!?
Post by: ChuMMa on April 15, 2017, 01:01:17 PM
அந்த அவள் தான் FTC
Title: Re: யார் இவள்!?
Post by: SarithaN on April 15, 2017, 02:57:37 PM
வணக்கம் சகோ.....

நீங்கள் தமிழ் எனும் கவிதைக்கு கீழே
எழுதியதையும் படித்தேன்.....
தெளிவான புரிதல் கொண்டே இதை
சொல்கின்றேன்.....

குறைபாடுகள் சொல்லும் குறைகளை.....
குறைபாடுகள் சொல்லும் கருத்துக்களை..... 
விதி விலக்குகளை விதியென கொள்வதை.....
நம்மை நாமே தளரச்செய்வதை தூர... துரத்துவோம்.....

நமக்கென ஒரு... பிறர் நோகாதபாதை போதும்
தொடர்ந்து பயணம் போக.....
எழுத்துக்களை நிறுத்த வேண்டாம்.....
சமூக ஆர்வலனின் எழுத்தாணி மௌனிப்பதே
சமூகத்துக்கு செய்யும் துரோகம்.....

வேறு தளங்களில் நீங்கள் எழுதலாம்.....
நீங்கள் எழுதும் தளங்களுக்கு வராத
சகோதர சகோதரியர் எப்படி உங்கள்
எழுத்துக்களை காணமுடியும்.....

எனவே இங்கே நீங்கள் எழுதுவது நிலையானது.....
மனவலி உண்டாகி இருந்தால்.....
அது காலையில் உலரும் பனி.....

நீங்கள் இங்கே எழுதவேண்டும்.....
பலரும் படிக்க வேண்டும்.....   
இது எனது விண்ணப்பம்.....

உங்கள் எழுத்துக்கள்.....
சமூகத்தின்மேல் காட்டும் அன்பை
ஆழமாக உணர்ந்த வாசகன்.....

சகோதரா.....
Title: Re: யார் இவள்!?
Post by: ChuMMa on April 15, 2017, 07:53:13 PM
சகோ
தங்களை வறுத்தபட வைத்ததற்கு மன்னிக்கவும்
எனக்காக தங்கள் நேரம் எடுத்து, எழுதியதற்கு நன்றி

நீங்கள் என் எழுத்தை பற்றி சொன்னது என் மேல் நீங்க கொண்ட அன்பினால்
என நான் அறிவேன் அதனால் அதை  நான் மதிக்கிறேன்.

இவனை பற்றி சிந்திக்காதீர்கள் ...காலம் ஆற்றும் எல்லாம் காயத்தையும் ...

நீர் வாழ்க கடவுளின் அருள் பெற்று பல ஆண்டுகள்...

நன்றி பல