FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: EmiNeM on April 13, 2017, 12:50:13 PM
-
Bharathiyin pirandha naal andru ezhuthiyathu...
இவன் முண்டாசைக் கண்டு
பீரங்கி வாய்கள் அச்சத்தால்
மௌனித்துப் போயின.
ஆயுதங்களை எதிர் கொண்ட
சேனைகள் இவன்
சொல்லாயுதத்திற்கு
மிரண்டு போயின.
என் தேசத்தை ஆள
எவனடா நீ
என முறுக்கு மீசையும்
கண்களில் கனலும்
இவன் காட்டியபோது
வெள்ளையன் நடுநடுங்கித்தான்
போனான்
சாதிகள் இல்லையடி பாப்பா
என பாடி
சமத்துவத்தை விதைத்து
விட்டுச் சென்றான்
பெண்ணியம் பேசிய
புண்ணியவான்
பெண்ணடிமைத்தனத்தை
வேரோடு அசைத்துப் பார்த்தது
இவன் சொல் வீச்சு
அடிமைப்படுத்தும் எண்ணம்
கொண்டோருக்கு இவன் தீ -
அவன் தான் நம் பாரதி.
-
Emi na:) rmba azhagana kavithai na:) bharathi kanda puthmai aan neenga than:) vazhthukkal anna:) vasikum pothu oru pennaga thalai thooka venum nu oru garvam tharum kavithai na;) thodarnthu eluthunga na:)
-
வணக்கம் சகோதரா.....
மிடுக்கான கவிதை.....
முப்பாட்டன் பாரதியை
பெண்கள் கற்றிட்டால்.....
வாழ்வுக்கான ஒரு தெளிவை
கண்டடைவர்.....
வாழ்த்துக்கள் சகோ.....