FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 10, 2017, 11:51:57 AM

Title: தமிழ்!
Post by: ChuMMa on April 10, 2017, 11:51:57 AM
இவ்வுலகில் பிறந்ததும்
என் தாய் எனக்கு அறிமுகபடுத்தியதாலோ
தாய் மொழி என்றே அழைக்கிறோம் தமிழை ..


தாய்க்கு கொடுக்கும் மரியாதையை
என் தமிழுக்கும் கொடுப்போம் ..

மொழிபெயரையே தம் குழந்தைக்கு
வைக்கும் பாக்கியம் பெற்றவர் நாம்
வேறு மொழிக்கில்லையே இப்பாக்கியம் !?

தமிழன் உலகுக்கு பல கற்று தந்திருக்கிறான்
இன்றும் போராடி கொண்டிருக்கிறான் தன்
இனம் காக்க,தன் மொழி காக்க

எங்கள் தமிழ் உயர்வென்று சொல்லி
பல தலைமுறைகள் கடந்தோம்
வள்ளுவன், வாமனன் போல்
இரண்டடியில் அளந்தான்
கம்பனும்,பாரதியும் உடன் உலகை அளந்தனர்

தமிழால் வாழ்ந்தோர் பலர்
ஆனால்
தமிழால் இழந்தோர் இலர்

வலிக்கையில் அ ஆ
சிரிக்கையில் இ ஈ
காரத்தில் உ ஊ
கோவத்தில் எ ஏ
வெட்கத்தில் ஐ
ஆச்சரியத்தில் ஓ ஒ
வக்கணையில்  ஔ
விக்கலில் ஃ

நம்மை அறியாமல் நம்மில்
கலந்து தினமும் வாழ்கிறது தமிழ் ,
தமிழை கற்பை போல காப்போம் நாம் வா தோழா   ...
Title: Re: தமிழ்! OU 142
Post by: VipurThi on April 10, 2017, 02:33:11 PM
Chumma na :) rmba azhagana kavithai na:) ini ckrm post panunga na:( I miss ur kavithai na:( OK va na?
Title: Re: தமிழ்! OU 142
Post by: ChuMMa on April 10, 2017, 05:54:21 PM
haha vipurthi thangachi. nandrigal pala


Seekiram enaku question paper leak pannidungo..appo thaan i can participate.

Sunday its time for my family... so naan monday thaan parpen...adhukulla full ayidudhu..


Admin Team kavithaiya 8 to 10 aakalaame !? plss









Title: Re: தமிழ்!
Post by: BlazinG BeautY on April 11, 2017, 06:29:54 AM
hi chumma chumma .. enna parnel. kavithai super  athilum last lines super .. hehehe... hmmm naanum ketthuten only 8 than... sikiram.. chumma athu saturday le poduvanga...
Title: Re: தமிழ்!
Post by: ChuMMa on April 11, 2017, 11:12:49 AM
Haha already 8 vandhidichi ma


so i deleted mine... rules follow pannanum la...

avangalaa delete pandradhu kulla ..naane panniten... (my life my rule ) haha

Thanks next week paapom..en kirukalku edam irukaanu...


Thanks all
Title: Re: தமிழ்!
Post by: VipurThi on April 11, 2017, 11:27:27 AM
chumma na u post here :'(
Title: Re: தமிழ்!
Post by: ChuMMa on April 11, 2017, 11:29:34 AM
Thanks

i already post panniten

"தமிழ்"  Idhai vida arumaiyana kavithai undo ulagil


Nandrigal pala ungal anbirku.. :) :) :)

Title: Re: தமிழ்!
Post by: VipurThi on April 11, 2017, 01:56:50 PM
Chumma na cheat panathinga :D kavithai inga post panunga illa nan pesala :'(
Title: Re: தமிழ்!
Post by: ChuMMa on April 11, 2017, 02:33:08 PM
Vipu ma

pesatheenga mail and chat mattum pannunga plsss  ;) :) :)

Nandri
Title: Re: தமிழ்!
Post by: VipurThi on April 12, 2017, 08:39:07 PM
Chumma na;) tnx na:)
Title: Re: தமிழ்!
Post by: ChuMMa on April 12, 2017, 08:53:16 PM
edhuku thanks

thevai illadhadhu...


Title: Re: தமிழ்!
Post by: SarithaN on April 14, 2017, 07:14:44 PM
வணக்கம் சகோதரா.....

அழகும் உயிரும் கொண்ட கவிதை.....

அங்கேயும் படித்தேன்...
காணவில்லையென தேடையில்
இங்கேயும் கண்டேன்.....

பின்னரும் மின்னி மறைந்தது.....
ஆனாலும் இங்கே மீண்டும் நிலைத்தது.....

சகோ அங்கே எட்டு கவிதைகள்தான் ஒலிபரப்பாகும்...
எட்டுக்கு மேலே அங்கே கவிதைகள் இருப்பதை
நிர்வாகம் மறுக்கவில்லை.....

உங்கள் கவிதை இங்கே மௌனமாய் இருப்பது
வருத்தம் தருகிறது.....

எனது ஓவியக் கவிதைகளும் இனிவரும் நாட்களில்
சிறியவர்களுக்கு வழிவிட்டே பதிவாகும் சகோதரா.....

உங்கள் எழுத்துக்கள் எப்போதும் தொடர வாழ்த்துகின்றேன்.....

நன்றி சகோ.....

 
Title: Re: தமிழ்!
Post by: ChuMMa on April 15, 2017, 12:59:51 PM
சகோ

தங்கள் கவிதைகள் தான் ஓவியம் உயிராகிறது நிகழ்ச்சியின்
அஸ்திவாரம் ..என்னை போன்றவர்களுக்கு ஊக்கம்..


என் அன்பு வேண்டுகோள் நிறுத்தாதீர் உங்கள் கவிதைகளின் பயணத்தை

நான் எழுதுவது கவிதை அல்ல என் எண்ணத்தின் வெளிப்பாடு
அவ்வளவே ...அதனால் நிறுத்துகிறேன் ...

இனிமேல் என் பதிவுகளின் தொல்லை இல்லை FTC க்கு ..

ஆனால் என் வரவு நிற்காது ..தங்களை போன்றோரின்
படைப்புகள் படிக்க வருவேன்

நன்றிகள் பல


Title: Re: தமிழ்!
Post by: SarithaN on April 15, 2017, 03:16:23 PM
கோபம் கொண்ட என் வணக்கம்.....

ஓவியம் உயிராதல்.....

நண்பர்கள் தமிழ் இணையத்தின்
ஈடற்ர பெருமை.....

அங்கே பங்கெடுக்கும் பலரில் நானுமோர்
சிறிய புள்ளி.....
வேறு வார்த்தைகளுக்கு பொருத்தமற்றவன்.....
நானும் உங்களைப்போல தொடர்ந்து எழுதுவேன்.....

எதையும் நிறுத்திக் கொள்ளப்போவது இல்லை.....
புதிதாக சகோதரியர்கள் பலர் எழுதுகின்றனர்
அவர்கள் எழுதிய பின்னர் எழுதலாம் என்று சொன்னேன்.....

நமக்கு தரப்படும் ஓவியத்தை அடிப்படையாக கொண்டு.....
கவிதைகள் பதிவாகும்.....
புரட்சி என்றால் முந்தும்.....
மகிழ்ச்சி என்றால் பிந்தும்.....  :) :) :)

காட்சியில் இதயம் கண்டால் வழிவிடுவோம்..... :) :) :)

ஓவியம் உயிராகும் திடலில்
எட்டுக்கு பின்னர் ஆயினும் சகோதரா.....
எனது கவிதைகள் எப்போதும் இருக்கவே இருக்கும்.....

உங்கள் கவிதையும் இருக்க வேண்டும் என்பது எனது
விருப்பம்.....

உங்களது புதிய பதிவுகளுக்காய் காத்திருக்கும் வாசகன்.....


Title: Re: தமிழ்!
Post by: Maran on April 15, 2017, 11:49:08 PM




நல்ல சிந்தனை, மிக அழகாய் கவிதை எழுதி இருக்கிறீர்கள் நண்பா சும்மா... வாழ்த்துக்கள்.  :)