FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on April 08, 2017, 07:21:16 PM

Title: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: SarithaN on April 08, 2017, 07:21:16 PM
அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!

நண்பனின் ஆழமான அன்பின் நட்பு.....
அவனிடமும் பாதணி இல்லை.....
எனக்கோ கழட்டிய இடத்தில்
பாதரட்சையை மறக்கும் பழக்கம்.....
கடக்கும் புதரில் முள் என்றேன்
முள்ளின்மேல் காலை வைத்தவன்
தன்காலின்மேல்,,,,,
என் காலை வைத்து... வாவென்றான்,,,,,

அவனை பெற்றவள்,,,,,
என் வீட்டில் வேலைக்காரி,,,
என்னை நீராட்டி,,, அலங்கரித்து,,,,,
உணவு தீத்தையில் அன்னையவள்,,,,,
நண்பனை என் தங்கை காதலித்தாள்
என்ன செய்வேன்,,,,,

என் தோழனை உன்னதன் உத்தமனென
என்வீட்டிலே புகழ்ந்தவன் நான்,,,,,
புகழத் தகுதியும் உள்ளவன் அவன்,,,,,
வசதி இல்லாதவன்,,,,,
இல்லாமையிலும்,,,,,
உள்ளவர் கொண்டிடா நல்லுள்ளம் கொண்டவன்,,,,,

பெருமிதமாய் நற்சான்று கொடுத்தவன் நான்.....

அண்ணனென் வாக்குமூலத்தை,,,,,
தெய்வீகமாய் கருதி,,,,,
என் தோழனை தனது வாழ்வென எண்ணி,,,,,
காதல் கொண்டாள் தங்கை,,,,,
தவறுதானென்ன கண்டோம் இங்கே,,,,,

எங்கேயோ! யோரோ! எப்படியானவனோ!
எதையுமே அறிந்திட முடியும்,,,,,
உணர்ந்திட முடியாது,,,,,
இயல்புகளை உணரமுடியா
வாழ்க்கைத் துணையுடன்,,,
என் தங்கை மாளிகையில் வாழ்வதிலும்,,,,,

நல்லவன்,,, நேர்மையானவன்,,,,,
ஏழைதான்,,,,,
அன்பான இதயம் கொண்டவன்,,,,,
என் தோழனின் இயல்புகள்,,,,,
விலைமதிப்பில்லாதவை,,,,,
என் தங்கையின் காதலை,,,,,
மரணம்வரை மரணிக்காது,,,,,, காக்க வல்லவன்,,,,,
மகிழ்ச்சியாய் வாழ்வாழ் தங்கை,,,,,
நல்லதொரு அண்ணனாய்,,,,,
தோழனின் பாதம் கழுவி,,,,,
வாழ்த்துகின்றேன்,,,,,
வாழ்க வளமுடன் பல்லாண்டு.....


குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: VipurThi on April 10, 2017, 08:11:22 AM
Sari na;) azhagana kavithai na:) azhagana natpu ithu:)
Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: SarithaN on April 14, 2017, 07:26:33 PM
நன்றி விபூமா.....  :)
Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: JeSiNa on April 15, 2017, 10:48:40 AM
Sarithan Anna unga kavithaigazha sollave vena epothum sprr than nenga eluthurathu kavithai illa na kaaviyam apdi than Sollanum... Nanna ezhungo na Vazhthugal... :)
Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: SarithaN on April 15, 2017, 03:27:00 PM
வணக்கம் தங்கச்சி.....

உனது வாழ்த்துக்கு நன்றி.....

இப்படி பெரிய வார்த்தைகள்
தடைசெய்யப் படுகிறது.....

காவியங்களை எழுதிவிட்டு நம்மை
பிரிந்து போன மூதாதையர்கள் வந்து
என்னை கொல்ல போகிறார்கள்..... படுக்கையில்...  :'( :'( :'(

மேலும் இங்கே இருக்கின்ற முதிர்ச்சி
கொண்ட எழுத்தாளர்கள்.....
உள்ளக தகவலால் என்னை
திட்டித் தீர்ப்பார்கள்.....
அவர்களுக்கு எனது தவறுகள் தெரியும்.....  :) :) :)

உனது அன்புக்கு நன்றிமா...
Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: Maran on April 15, 2017, 11:45:12 PM



அழகாய் கவிதை எழுதி இருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்.



குறை கூறவில்லை சிறு ஆலோசனை மட்டுமே. நிறுத்தக்குறிகளையும் அதை பயன்படுத்தும் விதத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.

மிக தெளிவான செய்தி பரிமாற்றத்திற்கும், கால இடைவெளி தருதல், நிறுத்துதல், ஏற்றஇறக்கம் தருதல் போன்ற முறைகளால் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கவும் குறிப்பாக கவிதை நடைக்கும் நிறுத்தக்குறிகள் மிக அவசியம். அந்த நிறுத்தக்குறிகளை முரணாகவோ, மிகையாகவோ பயன்படுத்துவதைத் தவிர்த்து முறையாகப் பயன்படுத்த வேண்டும்.


Title: Re: அண்ணனின் தோழன்,,,,, காதலன்,,,,,!
Post by: SarithaN on April 17, 2017, 07:48:01 PM
வணக்கம் தோழன் மாறன்,

உங்களை போன்ற பாண்டித்தியம் கொண்டவரின்
வாழ்த்துக்கள் எனக்கு ஊக்க மருந்து, நன்றிகள் பல.

குறியீடுகளை நான் எனது எழுத்துக்களில் பயன்படுத்துவதே இல்லை

இங்கே நான் பயன்படுத்துவது குறியீடுகளாக அல்ல மாறாக தமிழை
புரிந்திட கடினம் உடையோரும் இலகுவாக உணரும்வண்ணம் பிரித்து
கொடுக்கும் செயலுக்கு புள்ளிகளை அதீதமாக பயன்படுத்துகின்றேன்.

இந்த கவிதையில்தான் அரைக்காலையும் தவறுதலாக பயன்படுத்தினேன்.

எதையும் நான் நியாயப்படுத்துவதாக இல்லை, நீங்கள் சொல்லிய
ஆலோசனையை பூரணமாக ஏற்கின்றேன், நான் குறியீடுகளை
பயன்படுத்திய விதம் தவறென்பதையும் மனமிசைவுடன் ஏற்கின்றேன்.

நன்றி தோழா, உங்கள் ஆலோசனைகள் என்றும் தேவை.