FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on April 08, 2017, 07:20:11 PM
-
காதல் உணர்வு
அன்பு.....
நம்மை சுற்றி இல்லாமல் இல்லை.....
ஆனால் சுற்றி உள்ள அன்பு.....
நம் இதயம் விரும்புவதை.....
உள்ளம் ஏங்குவதை.....
தரவல்லதாய் இல்லை.....
தரவல்லதாய் இல்லை எனும்போது.....
காதல்.....
அவனால்..... அவளால்.....
ஒருவரால் மட்டும் தரக்கூடிய
அனைத்தையும் எதிர்பார்த்து ஏங்கும்.....
உணர்வு..... காதல்.....
தேவி வருவாள்... தேகம் அணைத்து.....
தலைதடவி.....
நெற்றியிலே அன்பிட்டு.....
கன்னங்கள் வருடி.....
முத்தங்கள் கொடுப்பேன்.....
ஏற்பாள்.....
கொடுப்பாள்.....
மகிழ்ந்து பெறுவேன்.....
கவலைகள் விலகும்.....
இதயம் சுகமாகும்.....
நிறைகள் குறைய.....
காற்றிலே மிதபோம்.....
இதைக்கூடவா காதலில்.....
காதலர்கள் எதிர்பார்ப்பதில்லை.....?
இணையக்காதல் பல.....
விரைவாய் விலகி
இணையாதுபோக
இவையும் காரணமோ.....
தேக்கி வைத்த வலிகள் சொல்லி.....
பனிக்கும் விழிகள் துடைத்து.....
ஆறுதலாய் முதுகில் தட்டி.....
தைரியமும் சொல்வோம்.....
நம்பிக்கையும் வளர்ப்போம்.....
எதிர்ப்போர் வெட்கமுற.....
வாழ்வில் உயர்வோம்.....
வளம்பெற்று நிமிர்வோம்.....
என்றெல்லாம் கதைபறையாதோ..... காதல்!
வெறுப்போர்.....
விரட்டுவோர்.....
தேடிவந்து வாழ்த்திட.....
வாழ்ந்து காட்டுவோமென ஓதாதோ..... கதல்!
அன்பு நம்மை சுற்றி இல்லாமல் இல்லை.....
நம்மை சுற்றி நமக்காகவே வாழும்.....
அன்னை தந்தை.....
அக்கா தங்கை.....
அண்ணன் தம்பி.....
உறவினர் நண்பர் அன்பு.....
காதலன்பின் தேவையை.....
நிறைவேற்றிட திராணியற்றவை.....
மரபின் நெறியில்.....
எனவே காதல் தவறில்லை.....
சுற்றத்தார் வெறுப்பதனால்.....
அன்பு காட்டும் இதயத்தின்பால்.....
எழுவது மட்டுமே காதலென்பது அபத்தம்.....
குடும்ப உறவுகளை குறைசொல்லாது
காதல் வாழ்க வாழியவே.....
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே