FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on April 03, 2017, 08:32:38 PM
-
அவளை பார்த்த பின் தான் தொடங்கியது
உனக்கும் எனக்குமான அந்த பந்தம்
உன் உதவியினால் தான் நான் கண்டேன்
அவளை முதன் முதலில்
அந்தத் பௌர்ணமி நிலவு தன் நெற்றியில்
பொட்டு வைத்து கொண்டிருந்தாள் உன்னை பார்த்து
அவளை பார்க்க செல்கையில்எல்லாம் உன்னிடம்
தான் என் எல்லா ஒத்திகையும் நடக்கும்
அவளை முத்தமிட்ட தருணமும்
அவள் தாய்மை அடைந்த தருணமும்
அவள்கவலை கொண்ட தருணமும்
அவள்ஆனந்தமடைந்த தருணமும்
என் கண் முன் பிம்பமாய் தந்தது நீ !
என் வெக்கத்தை அறிந்ததும் நீயே
என் துக்கத்தை அறிந்ததும் நீயே
யார் கண் பட்டதோ உடைந்தது நீ
இறுதியில் மிஞ்சியது துகள்களின்
எண்ணிக்கை அல்ல -அதில் நான்
வாழ்ந்த வாழ்க்கை ..
என்றும் நான் அழ நீ சிரித்ததில்லை
இன்றும் நான் அழுகிறேன் உன் நிலை
எண்ணி நீயோ அதனை துகள்களிலும்
அழுகிறாய் என்னுடன் ..
உனை போல உலகில் வேறுண்டோ
என் வீட்டு கண்ணாடியே !!!
-
chumma na :) kavithai pramatham romba azhaga sollirukinga na :D thodarnthu eluthikite irungana ;D
-
Nandri en anbu sago.
-
அன்பின் சகோ.....
நிறைவான ஒரு கவிதை
நிகழ்ச்சியில் இருந்திருக்க
வேண்டும்..... ஓவியம் 141
காலம்கடந்து பிறந்துவிட்டது.....
எனவே இங்கே வாழ்கிறது.....
வருத்தத்தோடு வாழ்த்துகின்றேன்.....
-
கவிஞர்கள் அதிகம் இருக்குறீர்கள் ...
என் படைப்பு கண்ணாடி போல் உடைந்தாலும்
அத்தனை துகள்களிலும் உங்கள் வாழ்த்து பிரதிபலிக்குமே
என் அன்பு சகோ ..
வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல ..