FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: JeSiNa on April 02, 2017, 04:09:54 PM

Title: சிங்கமும் சிலையும் - ஈசாப் நீதி கதை
Post by: JeSiNa on April 02, 2017, 04:09:54 PM
சிங்கமும் சிலையும் - ஈசாப் நீதிக் கதை


(The Lion and the Statue Aesop's Fable)

ஒரு நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.

அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.

''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.

''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.




நீதி:
தனக்கென்றால் தனி வழக்குதான்

Title: Re: சிங்கமும் சிலையும் - ஈசாப் நீதி கதை
Post by: SarithaN on April 14, 2017, 05:29:48 PM
கதைகளை படிப்பதும்
படித்ததில் பலந்தருவனவற்றை
இங்கே பதிவதும்.....

வளர்ச்சிக்கான படிநிலைகள்
வாழ்த்துக்கள்...

தொடரட்டும் பயணம்.....