FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on March 29, 2017, 12:08:42 PM

Title: காதல் என்பது என்ன?👍
Post by: ChuMMa on March 29, 2017, 12:08:42 PM
கண்ணை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் பார்வை
இல்லாதவர்களுக்கு 
காதல் வராதா?

நிறத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
கருப்பானவர்களுக்கு
காதல் வராதா?🤔

அழகை 😳பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள்
காதலிக்க முடியாதா?👍

பணத்தை பார்த்து வருவதுதான் காதல்
என்றால் ஏழைகளுக்கு
காதல் வராதா?

இடத்தை
பார்த்து வருவதுதான்
காதல் என்றால்
இடமில்லாதவனுக்கு
காதல் வராதா?

பேச்சின் ☺அழகை
கண்டு வருவதுதான்
காதல் என்றால்
பேச இயலாதவனுக்கு 💘காதல் வராதா?🤔

படிப்பை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
படிக்காதவனுக்கு
காதல் வராதா?🤔

உண்மையில் 💘காதல் என்பது என்ன?👍

அன்பிற்காக 😟ஏங்கிக்
🙁கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்" .....

##படித்ததில் பிடித்தது $$
 
Title: Re: காதல் என்பது என்ன?👍
Post by: SwarNa on March 29, 2017, 03:36:54 PM
அன்பிற்காக 😟ஏங்கிக்
🙁கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு
உண்மையான அன்பு எங்கிருந்து பெறப்படுகிறதோ
அங்கு உருவாகும் ஒரு உன்னதமான
உறவுக்கு பெயர் தான் "காதல்" .....

அண்ணா அருமை   :)   

Title: Re: காதல் என்பது என்ன?👍
Post by: ChuMMa on March 29, 2017, 04:17:20 PM
நன்றி என் தங்கச்சி ,

God Bless you !
Title: Re: காதல் என்பது என்ன?👍
Post by: SarithaN on April 08, 2017, 05:34:06 PM
சும்மா சகோ.....

கவிதை படித்தேன்.....
அழகான... நீதியான 
கேள்விகள்.....

காதல்.....
இவை அனைத்தையும்
கடந்து பிறக்கும்
அதிசய குழந்தை.....

ஆனாலும்.....
எதிர்பார்ப்புகள் உள்ள குழந்தை.....