FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on February 15, 2012, 03:44:32 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffsb.zedge.net%2Fcontent%2F1%2F6%2F6%2F4%2F1-2280144-1664-t.jpg&hash=36ce87d80883c156c7782bcc968b143bc8572210)
நீ தந்த அன்பை போல
யாரிடமும் பெற்றதாய்
உணர முடியவில்லை
இன்று
ஆதரவின்றி தவிக்கின்றேன்
ஆறுதல் மொழி கூற
அருகில் நீ இல்லாததால்
கண்கள் இன்று
குளமாகி போனது
பிரிவு என்ற வார்த்தை
நிஜமாகி போனதால்
நீ என்னோடு இல்லாத குறை
பெரிதாகி போனதால்
நிறைவு பெறாத
ஏதோ ஒரு ஏக்கம் என் கண்களில்
அதிகம் பிடித்தவர்களால் மட்டுமே
அதிகம் அழவைக்க முடியுமாம்
அதனால்தான் அழவைக்கிறாயோ...
உனக்கு அதுதான் பிடிக்குமென்றால்
அழுதுவிட்டு போகின்றேன்,
மரணம்வரை..