FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: Global Angel on February 15, 2012, 03:03:27 PM

Title: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:03:27 PM
சிவாஜி (பேரரசர்)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F477px-RaigadFort5.jpg&hash=6cf1c7e35d9da6ff8b460a2e7a21c00b46aac973)


ஆட்சிக்காலம்
 
1664 - 1680
 

முடிசூட்டு விழா
 
ஜூன் 6, 1674
 

முழுப்பெயர்
 
சிவாஜி சகாஜி போசுலே
 

பட்டங்கள்
 
க்ஷத்திரீய குலாவதம்ச கோப்பிராமண பிரதிபாலக
 

பிறப்பு
 
பெப்ரவரி 19, 1627
 

பிறப்பிடம்
 
சிவநேரி கோட்டை, புணே, இந்தியா
 

இறப்பு
 
ஏப்ரல் 3, 1680 (அகவை 53)
 

இறந்த இடம்
 
ராய்காட் கோட்டை
 

பின்வந்தவர்
 
சம்பாஜி
 

மனவிகள்
 
சயீ பாய்
 சோயரா பாய்
 புத்தளி பாய்
 காசி பாய்
 சுகுணா பாய்
 காசி பாய்
 சக்கவார் பாய்
 குண்வந்தி பாய்[1][2]
 

வாரிசுகள்
 
சம்பாஜி, ராஜாராம், 6 மகள்கள்
 

தந்தை
 
சகாஜி
 

தாய்
 
ஜீஜாபாய்
 

சமய நம்பிக்கைகள்
 
இந்து


பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680), மராட்டியப் பேரரசின் அடித்தளங்களை அமைத்து அளித்தளித்தவராவார். சாஹாஜி போஸ்லே மற்றும் ஜிஜாபாயின் இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். பிஜாப்பூர் சுல்தானியம், டெக்கான் சுல்தானியர்கள் மற்றும் மொகாலியர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாஹாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.[3] ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் (இந்திய சுயாட்சி) சித்தாந்தத்திற்கு ஆதரவளித்த சிவாஜி ராஜே போஸ்லே, பிஜாப்பூர் சுல்தானியத்திற்கும், இறுதியாக வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் அன்னிய ஆட்சிக்கும் நேரடியாக சவால் விட அவர்தம் தோழர்களுடனும், வீரர்களுடனும் ஓர் இந்து கோவிலில் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். சிவாஜி, அவரின் வாழ்நாளில், மேற்கத்திய இந்தியாவின் தற்போதைய மாநிலமான மஹாராஷ்டிராவில் வலிமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு பகுதியைக் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்கு வகித்தார்.[4].
 
சிவாஜி மகாராஜாவின் ஹிந்தவி சுயராஜ்ஜிய சித்தாந்தமும், அதன் தொடர்ச்சியாக மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் தொடர்ச்சியான விரிவாக்கமும் தற்போதைய மகராஷ்டிர வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தால் அவர்கள் தவிர்க்கமுடியாமல் தோற்கடிக்கப்படுவதற்கு முன்னர், இந்தியாவில் சுதந்திர பேரரசை உருவாக்கவதிலும், ஒரு வெற்றிகரமான மராட்டிய தலைமுறையை ஊக்குவித்ததிலும் ஹிந்தவி சுயராஜ்ஜியத்தின் சித்தாந்தம் பெரும் பங்கு வகித்தது. இந்த சித்தாந்தம், இஸ்லாமிற்கு எதிராகவோ அல்லது இந்துத்துவத்தைப் பரப்புவதை நோக்கியோ திருப்பி விடப்பட்டிருக்கவில்லை.[5] ஒடுக்குமுறை ஆட்சியாளர்களால் தாக்குதல்களுக்கு உட்படாத ஓர் ஐக்கிய இந்தியா தான் சிவாஜியின் நோக்கமாக இருந்தது.
 
நன்கு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவம் மற்றும் நன்கு வடிவமைக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளின் உதவியுடன் பேரரசர் சிவாஜி, ஒரு பொதுவாட்சியை உருவாக்கி அமைத்தார். பெண்களை யுத்த காரணத்திற்காக பயன்படுத்துதல், மத அடையாள சின்னங்களை அழித்தல், அடிமைப்படுத்துதல் மற்றும் கட்டாய மத மாற்றம் போன்ற அப்போதிருந்த பொதுவான பழக்கங்கள் அவர் நிர்வாகத்தில் முற்றிலுமாக எதிர்க்கப்பட்டன. அவர் தம்முடைய காலத்தில் பக்தியும், பரந்த மனப்பான்மையும் கொண்ட சிறந்த அரசராக விளங்கினார். சிவாஜி மகாராஜா, அவருக்கென இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான முறைகளை வகுத்திருந்தார். மராத்தியில் கானிமி காவா என்றழைக்கப்படும், கொரில்லா உத்திகளைப் பயன்படுத்துவதில் அவர் நிபுணராக விளங்கினார். அது இறப்பு எண்ணிக்கையையும், வேக தாக்குதல், திடீர் தாக்குதல், ஒருமுகப்பட்ட தாக்குதல் போன்ற பல்வேறு காரணிகளை மையப்படுத்தி இருந்தது. அவரின் எதிரிகளை ஒப்பிடும் போது, பேரரசர் சிவாஜியிடம் மிகச் சிறிய இராணுவமே இருந்தது. ஆகவே இந்த சமமின்மையைச் சமாளிக்க உதவும் வகையில் தான், அவர் கொரில்லா யுத்தத்தை செய்ய வேண்டி இருந்தது.[6]
 
அவர் பேரரசின் பெரும்பாலான பகுதிகள் கடற்கரையாக இருந்தன, அவர் தம் தளபதி கான்ஹோஜி ஆங்ரேயின் கீழ் அதனை ஒரு வலிமையான கடற்படை கொண்டு பாதுகாத்து வந்தார். வெளிநாட்டு கடற்படை கப்பல்களை, குறிப்பாக போர்ச்சுகீசியர்கள் மற்றும் பிரிட்டிஷாரின் கப்பல்களை மடக்கி வைப்பதில் அவர் வெற்றிகரமாக இருந்தார். மிகப் பெரிய முதல் கடற்படை தளத்தை உருவாக்குவதற்கான அவரின் தொலைநோக்கு பார்வையால், அவர் "இந்திய கடற்படையின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார்.[7] கடற்புற மற்றும் நிலப்பகுதி கோட்டைகளை உருவாக்குவது மற்றும் பாதுகாப்பதென்பது சிவாஜி மகாராஜின் இராணுவ வரலாற்றில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தன. கடற்கரை மற்றும் கடல்எல்லைகள் மீதான சிவாஜியின் பாதுகாப்பு, பிரிட்டிஷ் ஆட்சியின் விரிவாக்கத்தையும், இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் அவர்களின் வர்த்தகத்தையும் தவிர்க்க முடியாமல் தாமதப்படுத்தியது.


Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:05:45 PM
ஆரம்ப வாழ்க்கை

பிறப்பு
 
சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும் ஜிஜாபாய் போஸ்லே ஆகியோரின் இளைய மகன் ஆவார். சிவாஜி மகாராஜின் பிறந்த தேதியைக் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஆனால் 1627 பிப்ரவரி 19 என்று கருதப்படும் நாள் சமீபத்தில் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அவர் பூனேவிற்கு 60 கிலோமீட்டர் வடக்கில், ஜூன்னாரில் உள்ள சிவனேரி கோட்டையில் பிறந்தார். அக்கோட்டையின் பெண்தெய்வமான ஷிவை என்பதன் நினைவாக சிவா என்று பெயரிடப்பட்டார். ஜிஜாபாயிற்கு சிவாஜி மகாராஜ் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார், அவர்களில் மூவர் மழலையிலேயே இறந்துவிட்டனர், சாம்பாஜி ஒருவர் மட்டுமே உயிரோடு இருந்தார். சிவாஜி மகாராஜ் பெரும்பாலும் அவர் அன்னையுடன் இருந்தார், சாம்பாஜி அவர் தந்தையுடன் பெங்களூரில் (தற்போது பெங்களூரூ) வசித்து வந்தார். சிவாஜி மகாராஜின் பிறந்த காலத்தில், மகாராஷ்டிராவின் அதிகாரம் பிஜாப்பூர் சுல்தானியம், அஹ்மதாபாத் சுல்தானியம் மற்றும் கொல்கொண்டா சுல்தானியம் ஆகிய மூன்று சுல்தானியங்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டிருந்தது. அப்போதிருந்த பெரும்பாலான மராட்டியர்களின் படைகள், அவர்களின் உடைமைகளை இந்த சுல்தானியங்களில் ஒன்றிடம் பிணையமாக வைத்திருந்தார்கள் மற்றும் பரஸ்பர நட்பு மற்றும் பகைமைகளின் ஒரு தொடர்ச்சியான விளையாட்டிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
 
சிவாஜியின் தந்தை சஹாஜி போஸ்லே, வேரூலில் (தற்போது மகாராஷ்டிராவின் எல்லோரா) இருந்த மலோஜி போஸ்லேயின் மூத்த மகனாவார். நிஜாம்ஷாஹியில் இருந்த ஒரு சர்தாரான லக்கூஜிராவ் ஜாதவ் தம் மகளான ஜிஜாபாயின் (சிவாஜி மகாராஜின் அன்னை) திருமணத்தை அவர் மகனான சஹாஜிக்கு முடித்து வைக்க மறுத்த விவகாரத்தில், லக்கூஜிராவினால் மலோஜி போஸ்லே அவமதிக்கப்பட்டதாக புராணங்கள் உள்ளன. இது நிஜாம்ஷாஹியின் கீழ் உயர்ந்த மதிப்புகளையும், ஒரு முக்கிய பொறுப்பையும் பெற வெற்றி பெறுவதற்கு மலோஜியை இட்டு சென்றது, இது தவிர்க்க முடியாமல் அவரை மான்சாப்தார் (இராணுவ தளபதி மற்றும் ஒரு ஏகாதிபத்திய நிர்வாகி) பட்டத்தைப் பெறவும் இட்டு சென்றது. இந்த புதிய புகழ் மற்றும் அதிகாரத்தைப் பெற்றதால், ஜாதவ்ராவ் அவரின் மகளை தம் மகன் சஹாஜிக்கு திருமணம் முடிக்க அவரை மலோஜி போஸ்லேவினால் சமாதானப்படுத்த முடிந்தது.
 
சஹாஜி பல்வேறு டெக்கான் யுத்தங்களில் அவர் தந்தை வகித்த ஒரு முக்கிய பாத்திரத்தை தொடர்ந்து ஏற்று சென்றார். அவர் அஹ்மதாபாத்தில் உள்ள இளம் நிஜாம்ஷாவுடனும், 1600ன் மொகலாயர்கள் தாக்குதலின் போது அவர்கள் பெற்ற மாவட்டங்களை மீண்டும் நிஜாம்ஷாவிற்காக வென்றெடுத்த நிஜாமின் மந்திரி மலிக் அம்பருடனும் இணைந்து தம் சேவையைத் தொடங்கினார்.[9] அதிலிருந்து, லாகூஜி ஜாதவ், சஹாஜியின் மாமனார் சஹாஜியைத் தாக்கினார், அத்துடன் அவரை மஹூலி கோட்டையில், நான்கு மாத கர்ப்பிணியான ஜிஜாபாயுடன் சேர்த்து முற்றுக்கையிட்டார். நிஜாமிடமிருந்து எந்த உதவியும் வராததைத் தொடர்ந்து, சஹாஜி கோட்டையை விட்டு விட்டு, தப்பிவிட திட்டமிட்டார். அவர் தமது கட்டுப்பாட்டில் இருந்த சிவனேரி கோட்டைக்கு ஜிஜாபாயைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார். அங்கு, சிவனேரியில் தான் சிவாஜி மகாராஜ் பிறந்தார். இதற்கிடையில், லாகூஜியின் கடமையில் சந்தேகப்பட்டு, லாகூஜியும், நிஜாம்ஷாவின் படைகளில் சேர வந்திருந்த அவர் மூன்று மகன்களும், அவர்தம் நீதிமன்றத்தில் கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தால் அதிருப்தி அடைந்த சஹாஜி ராஜே, நிஜாம்ஷாஹி சுல்தானியத்தில் இருந்து விலகி செல்ல முடிவெடுத்தார், மற்றும் சுதந்திர பதாகையை உயர்த்தினார். அத்துடன் ஒரு சுதந்திர பேரரசை உருவாக்கினார்.
 
இந்த பாகத்திற்கு பின்னர் அஹ்மதாபாத் மொகாலய சக்ரவர்த்தி ஷா ஜஹானிடம் வீழ்ச்சி அடைந்தது, அதன்பின்னர் குறுகிய காலத்தில் நிஜாமின் தளபதியாக இருந்த சஹாஜி மொகாலய படைகளைத் தாக்கி அந்த பகுதியின் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பிரதிபலிப்பாக திரும்பவும் அந்த பகுதியைக் கைப்பற்ற ஒரு பெரிய படையை 1635ல் அனுப்பிய மொகாலயர்கள், மஹூலிக்குள் சஹாஜி பின்னடைய வேண்டிய நிலைக்கு கட்டாயப்படுத்தினார்கள். 1636ஆம் ஆண்டில் இந்த பகுதியை ஆள்வதற்கு அதிகாரத்தை மீட்டு கொடுத்ததற்காக மொகலாயர்களுக்கு திறை செலுத்த பிஜாப்பூரின் அடில்ஷா உடன்பட்டார். அதன்பின்னர், பிஜாப்பூரின் அடில்ஷாவால் சஹாஜி சம்பிரதாயப்படி பதவியில் அமர்த்தப்பட்டார். மேலும் ஒரு தொலைதூர ஜாகிர் நிலவுடைமைகள் (தற்போது இது பெங்களூர்), இவருக்கு அளிக்கப்பட்டன, அத்துடன் பூனேயில் இருந்த அவரின் பழைய நிலங்களையும், உடைமைகளையும் வைத்து கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:07:01 PM
சாம்ராஜ்ஜியத்தின் உருவாக்கம்
 
சிவாஜி மகாராஜின் அன்னையான ஜிஜாபாய் கவனிப்பின் கீழ், பூனே உடைமைகளை நிர்வகிக்க இளம்வயது சிவாஜி மகாராஜை சஹாஜி நியமித்தார். நிர்வாகத்தில் சிவாஜி மகாராஜிற்கு உதவவும், பயிற்றுவிக்கவும் ஒரு சிறிய அமைச்சர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவில் ஷாம்ராவ் நீல்கந்த் பேஷ்வாவாகவும் (பிரதம மந்திரி), பாலகிருஷ்ண பாண்ட் முஜூம்தார் ஆகவும், ரகுநாத் பல்லால் சப்னீசாகவும் , சோனோபண்ட் தாபீரா கவும், சாத்தியப்பட்ட வகையில் தாதோஜி கொண்டியோ ஆலோசகராகவும் இருந்தனர். இந்த மந்திரிகள் தவிர, இராணுவ தளபதிகள் கன்ஹோஜி ஜிட்ஹே மற்றும் பாஜி பாசல்கார் ஆகியோர் சிவாஜி மகாராஜை இராணுவ கலைகளில் பயிற்சி அளிக்க நியமிக்கப்பட்டார்கள்.1644ல், பூனேயில் தம் மனைவிக்காகவும், மகன் சிவாஜி மகாராஜிற்காகவும் சஹாஜி லால் மஹால் கட்டினார். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ஓர் இராஜமுத்திரை, இது சஹாஜியின் மகனான சிவாஜியின் இராஜமுத்திரையாகும் என்று குறிப்பிடுகிறது. இந்த இராஜமுத்திரை மக்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டது. பிறைநிலா வளர்வது போல் இருந்த இந்த முத்திரை (முத்திரையின் விதி) , சிவாஜி மகாராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வாறு சிவாஜி மகாராஜ்ர அரசியல் செயல்திட்டத்தின் ஒரு சிறிய பேரரசின் சுதந்திரமான ஓர் இளம் இளவரசராக அவரின் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சிவாஜி மகாராஜ், ராஜா (அரசர்) என்ற பட்டத்தையே சஹாஜியின் மரணத்திற்கு பின்னர் தான் பயன்படுத்தினார்.
 
தாய்நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும் தம் பற்றை அவர் அன்னை தமது பாடங்களுடன் கூறி ஓர் அழிக்க முடியாத நம்பிக்கையை அவருக்குள் உருவாக்கினார். சிவாஜி மகாராஜ், அரசியல் சுதந்திரத்திற்கான அவர் தந்தையின் தோல்வி முயற்சிகளில் இருந்து நிறைய பாடங்களைக் கற்று கொண்டார்: அதாவது அவரின் தனித்துவமான இராணுவ திறமைகள் மற்றும் சாதனைகள், சமஸ்கிருதம், இந்து பண்பாடு, கலைச்சிறப்புகள், அவரின் யுத்த தந்திரங்கள் மற்றும் அமைதிகால இராஜாங்கம் ஆகியவற்றை கற்று கொண்டார். விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கான அவர் குடும்பத்தின் இலட்சியம் அவருக்கு கற்று கொடுக்கப்பட்டது, அவற்றால் ஊக்கமளிக்கப்பட்டார். மேலும், அப்பிராந்திய அரசர் நிஜாம்ஷாவினால் நடத்தப்பட்ட ஒரு துரோககரமான சதியால் அவர் அன்னை, தம் தந்தையையும், மூன்று சகோதரர்களையும் இழந்திருந்தார். அன்னிய நாட்டு ஆட்சியாளர்களாக அவர் கருதியவர்களின் உள்ளூர் மக்கள் மீதான ஏளனம் மற்றும் உணர்வுகளை மதிக்காத தன்மையால் அவர்களை அவர் வெறுத்தார். இவ்வாறு சுய-மரியாதை மீதான ஓர் இயற்கையான பற்றையும், அன்னிய அரசியல் செல்வாக்கின் மீதான வெறுப்பையும் ஜிஜாபாய் சிவாஜி மகாராஜிற்குள் ஊற்றி வளர்த்தார்.
 
சொந்த கலாச்சாரத்தின் மீதான அவரின் பற்றும், பொறுப்பும், அத்துடன் சிறந்த இந்திய புராணங்களான மகாபாரதம் மற்றும் இராமாயணத்தில் இருந்து எடுத்துக்கூறிய கதைகளும் சிவாஜி மகாராஜாவின் பண்பை வடிவமைத்தன, அவரை இணையற்றவராக (அவருக்கு விரோதமான வரலாற்றாளரான காஃபி கான் கூட இதை உறுதிப்படுத்துகிறார்) குறிப்பாக பிற மதம் மீதான அவரின் சகிப்புத்தன்மை குணம், அத்துடன் பெண்கள் மற்றும் போரில் ஈடுபடாதவர்கள் மீதான அவரின் கருணை, இரக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்க அவருக்கு உதவியது. ஷாஹாஜியின் இலக்கு , ஜிஜாபாயின் கல்வி மற்றும் ஊக்கம், தாதோஜி கொண்டதேவ் போன்ற நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களாலும், கோமாஜி நாயக் பன்சம்பால் மற்றும் பாஜி பசால்கர் போன்ற இராணுவ தளபதிகளாலும் அளிக்கப்பட்ட சிறந்த பயிற்சிகள் தான் சிவாஜி மகாராஜை ஒரு தைரியமான மற்றும் அச்சமற்ற இராணுவ தலைவராகவும், அத்துடன் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாகவும் மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தன. சிவாஜி மகாராஜ் அவர் மாவல் நண்பர்களுடனும், வீரர்களுடனும் சேர்ந்து ரோஹிதேஷ்வாரா கோவிலில் சுயராஜ்ஜியத்திற்காக இரத்தத்தால் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:08:03 PM
பிராந்திய சுல்தானியர்களுடன் மோதல்
 
1645ல், 17 வயதில், பிஜாப்பூர் பேரரசின் டோர்னா கோட்டையைத் தாக்கி கைப்பற்றியதன் மூலம் சிவாஜி மகாராஜ் அவரின் முதல் இராணுவ தாக்குதலை நடத்தினார். 1647 வாக்கில், அவர் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டைகளை கைப்பற்றினார், அத்துடன் தெற்கு பூனே பிராந்தியத்தின் பெரும்பகுதிகளையும் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். 1654 வாக்கில், சிவாஜி மகாராஜ் மேற்கத்திய தொடர்களில் இருந்த கோட்டைகளையும், அத்துடன் கொங்கன் கடற்கரையையும் கைப்பற்றினார். சிவாஜி மகாராஜின் திறமையான தலைமையின் கீழ் மராட்டியர்களின் இந்த நகர்வை நாசம் செய்வதற்கான ஒரு திட்டத்தில், அடில்ஷா அவர் தந்தை சஹாஜியைப் போலி காரணத்திற்காக கைது செய்தார், மேலும் பெங்களூரில் இருந்த சிவாஜி மகாராஜின் மூத்த சகோதரரான சம்பாஜிக்கு எதிராக (பர்ரத்கான் தலைமையில்) ஒரு இராணுவத்தையும், புரந்தரில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக (பட்டீகான் தலைமையில்) ஓர் இராணுவத்தையும் அனுப்பி வைத்தார். எவ்வாறிருப்பினும், இரண்டு போஸ்லே சகோதரர்களும் அந்த எல்லைமீறி நுழைந்த இராணுங்களைத் தோற்கடித்து - சிவாஜி மகாராஜ் ஷாஜஹானின் உதவியைக் கேட்டு மனு செய்ததற்கான சாத்தியக்கூறுகளும் இதில் இருக்கின்றன - அவர்களின் தந்தையை விடுவித்து காப்பாற்றினார்கள். அதன்பின்னர், பக்குவப்பட்ட ஒரு தளபதியும், காரியத்தை நிறைவேற்ற கூடிய ஒரு போர்வீரரும் ஆன அப்ஜல் கான், பிஜாப்பூரால் ஒரு பிராந்திய புரட்சியாக பார்க்கப்பட்டதை மாற்றியமைத்து சிவாஜி மகாராஜை தோற்கடிக்க அனுப்பி வைக்கப்பட்டார்.
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:08:57 PM
பிரதாப்கட் போர்
 
பிஜாப்பூரை விட்டு நகர்ந்த அப்ஜல்கான், துல்ஜாபூர் மற்றும் பண்டர்பூரில் உள்ள இந்து கோயில்களை நாசப்படுத்தினார். சிவாஜி மகாராஜை உணர்வுப்பூர்வமான கொந்தளிப்பிற்கு உள்ளாக்கி, எண்ணிக்கையில் உயர்ந்த, சிறந்த ஆயுதமேந்திய மற்றும் மிக துல்லியமான பிஜாப்பூர் இராணுவத்தால் அவரின் சிறிய இராணுவ வளங்களைப் பழிக்குப்பழி வாங்கவும், அவ்வாறு அவரை வெற்றி கொள்ளவும் மற்றும் அவரிடம் அரும்பி வந்த இராணுவ அதிகாரத்தை எளிதாக அழிக்கவும் அவர் திட்டமிட்டார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜ் வேறொரு யோசனைகளைக் கொண்டிருந்தார். தாம் அப்ஜல்கானை முகங்கொடுக்க விரும்பவில்லை என்றும், ஏதாவதொரு வகை புரிந்துணர்வுக்கு வர விரும்புவதாகவும் அவர் ஒரு கடிதம் அனுப்பினார். மிக கவனமாக தமது கருத்துக்களை முன்னிறுத்திய சிவாஜி மகாராஜ், இராஜாங்க பேச்சுவார்த்தைகள் என்ற புனைவில் அப்ஜல்கானை ஆச்சரியப்படுத்தவும், எதிர்கொள்ளவும் தந்திரமாக முடிவெடுத்தார். பிரதாப்கட் கோட்டையின் அடிவாரத்தில் சிவாஜி மகாராஜிற்கும், அப்ஜல்கானிற்கும் இடையிலான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.[6] அந்த கூட்டத்தின் போது, அப்ஜல்கான் சிவாஜி மகாராஜைக் கொல்ல திட்டமிட்டிருந்தான் என்ற தகவல் அவருக்கு கிடைத்தது.
 
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிச்சுவா (குத்துவாள்), வாஹ் நாக் (புலிநகம்) மற்றும் சில்காட் (சங்கிலி கவசம்) போன்ற ஆயுதங்களால் சிவாஜி மகாராஜ் தம்மைத்தாமே ஆயுதபாணியாக்கி கொண்டார். அந்த பேச்சுவார்த்தையின் போது என்ன சம்பவித்தது என்பது படியெழுதுபவர்களால் பதிவு செய்யப்படவில்லை, ஆனால் அவர்களின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் வெகு விரைவில், உயரமான அப்ஜல்கான் - வழக்கமாக கட்டித்தழுவலின் போது - அவரின் இடது கையால் சிவாஜி மகாராஜின் கழுத்தைப் பிடித்து இறுக்கி கொண்டு, அவரின் வலது கையால் ஒரு குத்துவாளினால் சிவாஜி மகாராஜை குத்தினார். எவ்வாறிருப்பினும், சிவாஜி மகாராஜின் கவசம் அவரை காப்பாற்றியது. பழிவாங்கும் நடவடிக்கையில், அவர் அப்ஜல்கானை ஒரு வாஹ்நாக் மற்றும் பிச்சுவாவினால் தாக்கினார், அவர் இரத்தமும், குடலும் தரையில் வந்து விழுந்தன. உடனே அப்ஜல்கானின் காவலாளி சையத் பாண்டா வாட்களுடன் சிவாஜி மகாராஜை தாக்கினான், ஆனால் சிவாஜி மகாராஜின் பிரத்யேக பாதுகாவலன் ஜீவா மஹாலா அவனை அடித்து கீழே தள்ளியதுடன், சையத் பாண்டாவின் ஒரு கரத்தை தண்டாபட்டாவினால் (படா - கோடாளி போன்ற ஆயுதம்) வெட்டி எறிந்தான். கூடாரத்தி்ல் இருந்து உதவியைப் பெற தட்டுத்தடுமாறி வெளியே வந்த அப்ஜல்கான், நிறுத்தி இருந்த சிவிகையில் ஏற முற்பட்டான், ஆனால் தப்பிப்பதற்கு, எச்சரிக்கை ஒலியை எழுப்புவதற்கும் முன்னால் சிவாஜி மகாராஜின் கூட்டாளி சம்பாஜி காவ்ஜி கொண்டல்கரால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டான்.[6]
 
1659 நவம்பர் 30ல் அடர்ந்த ஜாவ்லி காட்டில் தொடர்ந்து கொண்டிருந்த பிரதாப்கர் யுத்தத்தில், சிவாஜி மகாராஜின் இராணுவங்கள் பிஜாப்பூரின் (அப்ஜல் கானின்) படைகளை தாக்கின, அவர்களை திடீர் தாக்குதல் உத்திகளில் சிக்க வைத்திருந்தனர். அப்ஜல்கானை கொன்ற உடனேயே, சிவாஜி மகாராஜ் அவரின் தளபதிகளுடன் கோட்டையை நோக்கி இருந்த சரிவை நோக்கி விரைந்து சென்றார், அத்துடன் பீரங்கிகள் மூலம் குண்டு வீசவும் உத்தரவிட்டார். இது, உடனடியாக அப்ஜல்கானின் படைகளைத் தாக்க, அடர்த்தியாக இருந்த பள்ளத்தாக்கில் தந்திரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர் காலாட்படைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு சமிக்ஞையாக ஆகும்.[6] 1,500 முஸ்கீதர்களைத் தாக்கிய கன்ஹோஜி ஜீதேவின் கீழ் இருந்த மராட்டிய துருப்புகள், அவர்களை கோட்டையின் அடிவாரத்திற்கு திருப்பி விட்டது. பின்னர் ஒரு விரைவான அணிவகுப்புடன், முஷீகான் தலைமையிலான அடில்ஷாஹி படைகளின் ஒரு பிரிவு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் காயப்பட்ட முஷீகான், அவரின் வீரர்கள் தங்களுக்குதாங்களே தற்சார்பாக நிற்க விட்டுவிட்டு களத்தை விட்டு வெளியேறினார். தளபதி மோரோபாண்ட் பின்கலே, அடில்ஷாஹி துருப்புகளின் கைவிடப்பட்ட பகுதியின் அந்த காலாட்படைகளுக்கு தலைமை ஏற்று நடத்தினார். படைத்தங்கும் இடத்திற்கு நெருக்கத்தில் வந்து அவர் அளித்த திடீர் தாக்குதலால், அடில்ஷாவின் இராணுவம் நிலைகுலைந்து போனது. குதிரைப்படைகள் யுத்தத்திற்கு தயாராவதற்கு முன்னதாகவே தளபதி ரகோ ஆட்ரி விரைவாக குதிரைப்படையைத் தாக்கினார், அதில் பெரும்பாலும் ஒட்டுமொத்தமும் அழிக்கப்பட்டது. வேயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடில்ஷாஹி படைகளுன் இணைய முயற்சித்த அடில்ஷாஹி படைகளைப் பின்வாங்கச் செய்யும் ஓர் உச்சக்கட்ட முயற்சியில் நேதாஜி பால்கர் தலைமையிலான குதிரைப்படை வேய் நோக்கி விரைந்து சென்றது. யுத்தத்தில் ஈடுபட்டிருந்த அப்ஜல்கானின் பின்வாங்கிய படைகள் திருப்பி விடப்பட்டன.[6]
 
இந்த வெற்றி சிவாஜி மகாராஜை மராட்டிய நாட்டுபுறத்தில் ஒரு கதாநாயகனாகவும், அவர் மக்கள் மத்தியில் ஒரு சரித்திர பிரபலமாகவும் மாற்றியது. பெரும் எண்ணிக்கையில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், குதிரைகள், கவசங்கள் மற்றும் பிற பொருட்கள் ஆரம்பகட்டத்தில் வளர்ந்து கொண்டிருந்த மராட்டிய இராணுவத்தை வலிமைப்படுத்த உதவியாக இருந்தது. மொகலாய சாம்ராஜ்ஜிய அவுரங்காசீப், சிவாஜி மகாராஜை அவரின் வலிமை வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக கண்டார். அதன்பின்னர் விரைவிலேயே, சிவாஜி மகாராஜ், சஹாஜி மற்றும்உ நேதாஜி பால்கர் (மராட்டிய குதிரைப்படையின் தலைவர்) ஆகியோரால் பிஜாப்பூரின் அடில்ஷாஹி பேரரசைத் தாக்கி தோற்கடிக்க வேண்டுமென்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், சஹாஜியின் உடல்நிலை மோசமடைந்ததால் திட்டமிட்டப்படி செயல்கள் நடைபெறவில்லை, ஆகவே அவர்கள் தங்களின் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். எவ்வாறிருப்பினும், நேதாஜி பால்கர், அடில்ஷா பேரரசிற்கு தொல்லை அளிக்கும் சிறியளவிலான தாக்குதல்களுடனும் இந்த திட்டத்தை கையில் எடுத்தார்.
 
அதே வேளையில், சிவாஜி மகாராஜ் அவரின் இராணுவத்தை கணிசமாக விஸ்தரிப்பதற்கு முன்னதாக அவரை தோற்கடிக்கவும், பின்னிருத்தவும் ஆப்கானிய சிப்பாய்களை முதன்மையாக கொண்ட ஒரு மேற்தட்டு புஷ்தான் இராணுவத்தை பிஜாப்பூர் சுல்தான் அனுப்பினார். அதன் விளைவாக ஏற்பட்ட யுத்தத்தில், பிஜாப்பூர் புஷ்தானின் இராணுவம் மராட்டிய துருப்புகளால் நசுக்கப்பட்டது. இந்த தீவிர, இரத்தந்தோய்ந்த யுத்தம், பிஜாப்பூர் படைகள் சிவாஜி மகாராஜிற்கு நிபந்தனையற்ற முறையில் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:10:18 PM
கோல்ஹாபூர் போர்
 
பிரதாப்கட் இழப்பை ஈடுகட்டவும், புதிதாக உருவாகி வரும் மராட்டிய சக்தியை தோற்கடிக்கவும், இந்த முறை 10,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட மற்றொரு இராணுவம், பிஜாப்பூரின் புதிய அபிசீனியன் ஜெனரல் ருஸ்தாம்ஜமான் தலைமையில் சிவாஜி மகாராஜிற்கு எதிராக அனுப்பி வைக்கப்பட்டது. 5000 மராட்டிய குதிரைப்படைகளுடன், 1659 டிசம்பர் 28ஆம் தேதி கோல்ஹாபூரில் சிவாஜி மகாராஜ் அவர்களைத் தாக்கினார்.
 
ஒரு விரைவான போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் தலைமையில் எதிரி படைகளின் மத்தியில் ஒரு முழு முன்னணி தாக்குதல் நடத்தப்பட்டது, அதேவேளை அவரின் குதிரைப்படைகளின் மற்ற இரண்டு பிரிவுகள் பக்கவாட்டில் இருந்து தாக்கின. பல மணி நேரம் தொடர்ந்த இந்த யுத்தத்தின் இறுதியில் பிஜாப்பூர் படைகள் கடுமையான தோல்வியைத் தழுவின, ருஸ்தாம்ஜமான் இழிவான வகையில் யுத்தக்களத்தை விட்டு ஓடிவிட்டார்.[6] அடில்ஷாஹி படைகள் சுமார் 2000 குதிரைகளையும், 12 யானைகளையும் மராட்டியர்களிடம் இழந்தார்கள். இந்த வெற்றி, அப்போது சிவாஜி மகாராஜை ஏளனம் செய்யும் வகையில் "மலைவாழ் எலி" என்று குறிப்பிட்டு வந்த வலிமையான மொகலாய சாம்ராஜ்ஜியத்திற்கு எச்சரிக்கை மணி அடித்தது. முக்கியமான மராட்டிய அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வர, மொகலாய சக்ரவர்த்தி அவுரங்காசீப் அப்போது முழு பலத்தையும், மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வளங்களையும் ஒட்டுமொத்தமாக கொண்டு வர தயாராகி கொண்டிருந்தார்.
 
1660 ஜனவரியில் பிஜாப்பூரின் படி பேகமின் வேண்டுகோளின் பேரில், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க 10,000த்திற்கும் மேற்பட்ட இராணுவ எண்ணிக்கையுடனும், சக்திவாய்ந்த ஆயுதங்களுடனும் அவுரங்காசீப் அவரின் தாய்வழி மாமாவான சாய்ஸ்தா கானை அனுப்பினார். துர்க்தாஜ், ஹூசைன், ஹைதர், நாம்தார் கான், கர்தாலப் கான், உஜ்பெக் கான், பதெக் ஜங்க் மற்றும் பானு சிங், சியாம் சிங், ராய் சிங், சிசோதியா, பிரத்யூமன் போன்ற ராஜபுத்திரர்களுடன் மேலும் பலரையும் சேர்த்து கொண்டிருந்த திறமையான தளபதிகளைக் கான் கொண்டிருந்தார்.அனுபவம் வாய்ந்த தளபதியான கான், 1636ல் அதே பிராந்தியத்தில் சஹாஜியை தோற்கடித்திருந்தார்.சிட்தி ஜௌஹரின் தலைமையிலான பிஜாப்பூர் இராணுவத்துடன் இணைந்து மராட்டிய பேரரசை எதிர்க்க அவர் உத்திரவிடப்பட்டிருந்தார். ஜௌஹரால் சிவாஜி தோற்றகடிக்கப்பட்ட பின்னர், மராட்டிய பேரரசை கைப்பற்ற (அதன் மூலம் அடில்ஷாவை ஏமாற்ற) சாய்ஸ்தா கானுக்கு அவுரங்காசீப் உத்தரவிட்டிருந்தார். சிவாஜி தற்போது மொகலாயர்கள் மற்றும் அடில்ஷா படைகள் ஆகிய இரண்டின் தாக்குதலையும் முகங்கொடுக்க தயாரானார்

Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:12:40 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F434px-Shivaji-Dhurandhar.jpg&hash=1064afa4a404200f10d2a46eba837691398eb2e6)

வி. துரந்தர் வரைந்த சிவாஜி ஓவியம்


1660ல், சிவாஜி மகாராஜை தோற்கடிக்க ஒரு தலைச்சிறந்த ஜெனரலான சிட்தி ஜௌஹரை அடில்ஷா அனுப்பினார். மஹாராஷ்டிராவின் கோலாப்பூருக்கு வடக்கே சிவாஜி மகாராஜை எதிர்கொண்டு, அனைவருக்குமாக தோற்கடிக்க 40,000 பேர் கொண்ட அவர் இராணுவத்திற்கு அவர் உத்தரவிட்டார். பாலாவானியின் ஜஸ்வந்த்ராவ் தால்வி மற்றும் ஸ்ரிங்கர்பூரின் சூர்யாராவ் சர்வே ஆகியோர் சிவாஜி மகாராஜை தோற்கடிக்க சிட்தி ஜௌஹருக்கு உதவினார்கள்.அந்த நேரத்தில், சிவாஜி மகாராஜ் அவரின் 8,000 மராட்டிய படைவீரர்களுடன், அவரின் அதிகாரத்தி்ற்குட்பட்ட எல்லையின் தெற்கில் இருந்த, தற்போதைய கோலாப்பூருக்கு அருகில் உள்ள பன்ஹாலா கோட்டையில் முகாமிட்டிருந்தார். சிட்தி ஜௌஹரின் இராணுவம் 1660 மார்ச் 2ஆம் தேதி, பன்ஹாலாவின் அனைத்து வினியோக வழிகளையும் அடைத்து விட்டு கோட்டையை முற்றுகையிட்டது. பாஜி கோர்பேட் மற்றும் சிட்தி மாசூத்தினால் மேற்கிலும், சதக் கான் மற்றும் பாய்கானினால் வடக்கிலும், ரஸ்லாம் ஜமாம் மற்றும் பேட்கானினால் கிழக்கிலும், சிட்தி ஜௌஹர் மற்றும் பஜல் கானினால் தெற்கிலும் அந்த கோட்டை முற்றுகை இடப்பட்டிருந்தது. மராட்டிய படையின் கமாண்டர்-இன்-சீஃப் நேதாஜி பால்கர், அடில்ஷாஹி மாகாணத்தை தாக்குவதற்கும், நசுக்குவதற்கும் பன்ஹாலாவில் இருந்து தொலைவில் இருந்தார் என்பதால் சிவாஜி மகாராஜின் உதவிக்கு அவரால் வர முடியவில்லை. அந்த நேரத்தில், சாய்ஸ்தா கான் பாராமதியில் இருந்து சிர்வாலாவிற்கு நகர்ந்தார்.
 
பன்ஹாலா மிகவும் வலிமைமிக்க கோட்டையாகும். அடில்ஷா இராணுவம் தொடர்ச்சியாக பீரங்கி குண்டு வீச்சுகள் மற்றும் வலிமையான பாறை-மோதல்களுடன் போராடி வந்தது.இவ்வாறு, சிட்தி ஜௌஹர் ராஜ்பூர் துறைமுகத்தில் இருந்த பிரிட்டிஷ் தலைவர் ஹென்ரி ரிவிங்டன்னிடம் தொலைதூர மற்றும் நவீன பீரங்கிகளை கேட்டார். எதிர்கால உதவிகளின் நிபந்தனைகளுடன் ஹென்ரி அவருக்கு உதவ முன்வந்தார், பன்ஹாலா கோட்டை உடையத் தொடங்கியது. இதற்கிடையில், இந்த மராட்டியர்கள் பன்ஹாலாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடர்ந்தார்கள். அத்துடன் சிட்தி ஜௌஹரை வளைகுடாவில் நிறுத்தி வைப்பதற்கான முயற்சியையும் தொடர்ந்தார்கள். மராட்டியர்கள் சிலமுறை அடில்ஷாவின் முகாம்களை தாக்கினார்கள், ஆனால் அதல் பெரும் வெற்றி பெற முடியவில்லை. எவ்வாறிருப்பினும், இதுபோன்ற ஒரு தாக்குதலில், டிரையம்பாக் பாஸ்கர் மற்றும் கொண்டாஜி பார்ஜண்ட் இருவரும் முறையே தங்களைத்தாங்களே பிரிட்டிஷ் அதிகாரி போன்றும், அடில்ஷாவின் ஒரு வீரரைப் போலவும் மாறுவேடமிட்டார்கள். அவர்கள் அடில்ஷாவின் முகாமிற்குள் வந்து ஹென்றி ரெவிங்டன் மற்றும் அவர் கூட்டாளிகளைச் சந்தித்தார்கள். அவர்கள் ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை கொன்றதுடன், ஹென்றியையும் காயப்படுத்தினார்கள். அதன்பின்னர், பீரங்கிகளை அழித்ததுடன், அவர்களை அவர்களே பயனற்றவர்களாகவும் ஆக்கி கொண்டார்கள். இதனால் ஜௌஹர் லிவிட் முற்றுகையை மேலும் இறுக்கினார்.[13] பன்ஹாலாவைச் சுற்றியுள்ள முற்றுகை தளர்ந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய, ஜௌஹர் ஒரு கல் கூட நகரவிடவில்லை. ஜௌஹர் தனிப்பட்ட முறையில் மிகவும் கவனமாக இருந்தார், அவர் இராணுவத்தில் இருந்த ஒருவர் கூட அகமகிழ்வுடன் இல்லை.ஆரவாரமான மழையையும் எதிர்கொள்ள ஏற்பாடுகள் செய்த அவர், கடுமையான மழையிலும் கூட முற்றுகையைத் தொடர்ந்தார்.பன்ஹாலாவின் கடுமையான முற்றுகையை பற்றி அறிந்த நேதாஜி பால்கர் பிஜாப்பூரில் இருந்து திரும்பி பன்ஹாலாவைச் சுற்றி இருந்த அடில்ஷாவின் படைகளைத் தாக்கினார். முற்றுகையை உடைக்க அவர் முயன்றார், ஆனால் சிறியளவிலான மராட்டிய படை, பெரிய எண்ணிக்கையிலான அடில்ஷாஹி இராணுவத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டது.
 
அது முதல், சிவாஜி மகாராஜ், அருகில் இருந்த விஷால்கட் கோட்டைக்கு தப்பிவிடவும், அங்கு அவரின் வீரர்களை மீண்டும் ஒன்று திரட்டி, சிட்தி ஜௌஹர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த தீர்மானித்தார். சிவாஜி மகாராஜ் தாம் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், தங்குமிடம், புரிந்துணர்வு மற்றும் கருணையை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டு சிட்தி ஜௌஹருக்கு திசைதிருப்பும் செய்திகளை அனுப்பினார். அதற்கிடையில், பிஜாப்பூரைத் தாக்க சிவாஜி வலிமையான சிட்தி ஜௌஹருக்கு பணம் மற்றும் ஆட்களை அளித்து உதவுகிறார் என்ற வதந்திகளையும் சிவாஜி பரவவிட்டார். இந்த செய்தியால், அடில்ஷா வீரர்கள் சற்று தளர்ந்தார்கள், சிவாஜி மகாராஜ் 1660 ஜூலை 12ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஒரு பயங்கர இரவில் தப்பித்தார். சிவாஜி மகாராஜை தப்புவிக்க எதிரிகளைத் திசைதிருப்புவதற்காக சிவாஜி மகாராஜ் போன்ற தோற்றமுடைய சிவகாஷித்தை அவர் போன்றே உடையணிவித்து வெளியில் அணுப்பினார், ஜௌஹரின் வீரர்கள் போலியான சிவாஜி மகாராஜ் உட்பட மராட்டியர்களின் ஒரு சிறு குழுவை பிடித்தார்கள். பிடிக்கப்பட்டவர் சிவாஜி மகாராஜைப் போன்றே தோற்றமுடையவர் என்பதையும், சிவாஜி மகாராஜூம் அவர் இராணுவமும் விஷால்கட்டிற்கு சென்று விட்டார்கள் என்பதையும் ஜௌஹரின் வீரர்கள் பின்னர் புரிந்து கொண்டார்கள்

Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:14:39 PM
பவன்கிண்ட் யுத்தம்
 
எதிரிகளின் குதிரைப்படை விரைவாக தங்களை நெருங்கி வருவதை உணர்ந்த சிவாஜி மகாராஜ் தோல்வியையும், பிடிபடுவதையும் தவிர்க்க விரும்பினார். ஒரு மராட்டிய சர்தாரான பாஜி பிரபு தேஷ்பாண்டே, அவரின் 300 வீரர்களுடன் எதிரிகளை கோட்கிண்டில் (விஷால்கண்டில் இருந்து 4 மைல்கள் தூரத்தில் இருந்த காஜாபூருக்கு அருகில் இருந்த ஒரு மலைப்பாதை) நிறுத்தி வைக்க இறக்கும் வரை போராட தாமாக முன்வந்தார், இதன் மூலம் சிவாஜி மகாராஜூம், அவரின் எஞ்சிய இராணுவமும் விஷால்கட்டிற்கு பாதுகாப்பாக சென்றடைய ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
 

பவன்கிண்ட் யுத்தத்தைத் தொடர்ந்து, பாஜி பிரபு தேஷ்பாண்டே கடுமையாக போராடினார். முற்றிலுமாக மிக கடுமையாக அவர் காயப்பட்டிருந்த போதினும், சிவாஜி மகாராஜ் பாதுகாப்பாக கோட்டையைச் சென்றடைந்து விட்டார் என்பதற்கு அறிகுறியாக விஷால்கட்டில் இருந்து பீரங்கி முழக்கம் கேட்கும் வரை அவர் தொடர்ந்து போராட்டத்தைத் தக்க வைத்திருந்தார். இதன் விளைவு இந்த கொடூரமான யுத்தத்தில் 300 மராட்டியர்களின் மரணம் மற்றும் அடில்ஷா துருப்புகளில் 1286 வீரர்களின் மரணம். சிவாஜி 1660 ஜூலை 13ஆம் தேதி மாலை 6 மணிக்கு அக்கோட்டையைச் சென்றடைந்தார். அதன்பின்னர் சிவாஜி மகாராஜாவின் பேரரசை சுதந்திர நாடாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்தும், உறுதியளித்தும் சிவாஜி மகாராஜிற்கும், அடில்ஷாவிற்கும் இடையில் சஹாஜியின் மூலம் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பன்ஹாலா கோட்டை சிட்தி ஜௌஹருக்கு அளிக்கப்பட்டது.
 
பாஜி பிரபு தேஷ்பாண்டே, ஷிபோசிங் ஜாதவ், புலோஜி, பண்டால் சமூக மக்கள் (அந்த பிராந்தியம் பற்றிய அறிவு, மலையேற்ற திறன், இராணுவ பண்புகள் ஆகிய காரணங்களை மனதில் கொண்டு பன்ஹாலாவில் இருந்து தப்பிக்கும் போது குறிப்பாக பண்டால் சமூகத்தின் மக்கள் சிவாஜியால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்) மற்றும் கோட்கண்டில் போராடிய பிற வீரர்களை கௌரவிக்கும் வகையில் கோட்கிண்ட் (கிண்ட்=ஒரு குறுகலான மலைப்பாதை), பவன்கிண்ட் (புனித பாதை) என்று பெயர் மாற்றப்பட்டது.பாஜி பிரபு மற்றும் அவர் உடனிருந்தவர்களின் துணிவிற்கு மதிப்பளிக்கும் வகையில் இன்றும் கூட ஒரு சிறிய நினைவுச்சின்னம் அங்கு நிற்கிறது. இந்நிலை சஹாஜியின் மரணம் வரை நீடித்தது. அதன்பின்னர் டெக்கானில் மராட்டியர்கள் ஓர் உத்தியோகப்பூர்வ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சக்தியாக இருந்தார்கள். சிட்தி ஜௌஹரின் துரோகத்தைச் சந்தேகித்து, அடில்ஷாவால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:15:55 PM
பிரிட்டிஷ் மீதான தாக்குதல், ராஜா ஜஸ்வந்த்ராவ் மற்றும் ராஜா சூர்யாராவ்
 
சிவாஜி தற்போது ரத்னகிரி கடற்கரை பகுதியில் உள்ள ராஜாபூர் கோட்டையில் இருந்த பிரிட்டிஷாரின் பக்கம் அவரின் கவனத்தைத் திருப்பினார்.பிரதாப்கட் யுத்தத்திற்கு முன்னர், ஹென்ரி உட்பட பல பிரிட்டிஷ் அதிகாரிகளை மராட்டியர்கள் கைது செய்தனர், ஆனால் அவர்களை வெளியில் செல்ல அனுமதித்து விட்டனர்.[13] யுத்தத்திற்கு முன்னர், அப்ஜல்கான் அவர்களுக்கு அவர் கப்பல்களை அளித்திருந்தார், யுத்தத்திற்கு பின்னர் அவற்றை மராட்டியர்களிடம் திருப்பி அளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். இவ்வாறு அவர்கள் மராட்டியர்களால் கைது செய்யப்பட்டனர், எவ்வாறிருப்பினும் ஹென்ரி மற்றும் அவர் சக பிரிட்டிஷார் சிவாஜி மகாராஜின் பாதையில் ஒருபோதும் குறிக்கிட மாட்டோம் என்று உறுதி அளித்ததுடன், நேச உடன்படிக்கை ஒன்றையும் செய்து கொண்டதால் சிவாஜி மகாராஜ் அவர்களை மீண்டும் விட்டு வி்ட்டார். சிவாஜியால் இரண்டு முறை மரணதண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட போதினும், ஹென்ரி ரேவிங்டன் அவரின் வார்த்தைகளைக் காப்பாற்றவில்லை என்பதுடன் மராட்டியர்களுக்கு எதிராகவும் சவால் விடுத்தார். சிட்தி ஜௌஹருக்கு அவரின் பன்ஹாலா முற்றுகையின் போது, ஹென்ரி அவருக்கு நவீன ஆயுதங்களை அளித்ததோடு மட்டுமின்றி, பீரங்கிகளை இயக்க ஆட்களையும் (ஆயுத கண்காணிப்பாளர், இதர பிறரையும்) அளித்தார். அதிலிருந்து, இந்த அன்னிய நாட்டவர்கள் தங்களை வெறுமனே வர்த்தகர்களாக காட்டிக் கொள்கிறார்கள், ஆனால் உண்மையில் அவர்களின் சொந்த ஆட்சியை அமைக்கவும், விரிவாக்கவும் அவர்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள் என்ற தீர்மானத்திற்கு சிவாஜி மகாராஜ் வந்தார்.
 
இவ்வாறு, வர்த்தகம் என்ற பெயரில் அப்போதைய காலத்தில் பிரிட்டிஷார் கொண்டிருந்த சில பாதுகாப்பான துறைமுகங்களில் ஒன்றான ராஜாப்பூர் துறைமுகத்தை சிவாஜி தாக்க தீர்மானித்தார். சிவாஜி தாமே ராஜாப்பூர் துறைமுகத்திற்கு அணிவகுத்து சென்றார். ஜௌஹருக்கு உதவியது தங்களின் தவறு தான் ஒத்துகொண்டதுடன், இதுபோன்று மீண்டும் நடக்காது என்றும் கூறி சிவாஜியை சமாதானப்படுத்த பிரிட்டிஷார் முயற்சித்தார்கள். தற்போது பிரிட்டிஷாரை நம்ப தயாராக இல்லாத சிவாஜி, ராஜாப்பூர் துறைமுகத்தில் இருந்து அனைத்து பிரிட்டிஷாரையும் துல்லியமாக கைது செய்தார்கள், அத்துடன் அவர்களின் வக்கார் - அதாவது வர்த்தக உடமைகளையும் கைப்பற்றினார்கள்.
 
சிட்தி ஜௌஹர் கட்டளையின்படி விஷால்கட்டை முற்றுகையிட்டவர்களும், சிவாஜிக்கு எதிராக இருந்தவர்களுமான ஜஸ்வந்த்ராவ் தால்வி (பால்வன் மகாராஜா) மற்றும் சூர்யராவ் சுர்வே (சிங்கர்பூரின் மகாராஜா) இருவருக்கும் சிவாஜி தற்போது பாடங்கற்பிக்க விரும்பினார். பால்வனை நோக்கி சிவாஜி அணிவகுத்து சென்றவுடன், அச்சப்பட்ட ஜஸ்வந்த்ராவ் தப்பி ஓடி, சூர்யராவின் சிங்கர்பூரில் அகதியாக தஞ்சமடைந்தார். பின்னர் சூர்யராவுடன் நட்புக்கரம் நீட்டிய சிவாஜி, அன்னிய சக்திகளுக்கு எதிராக போராட அவர்கள் ஒன்றுபட வேண்டியதன் தேவையை அவர்களுக்கு புரிய வைக்க அவர் முயற்சித்தார்.சிவாஜியின் கருத்தை ஒத்துக்கொண்ட சூர்யராவ், சிவாஜி இல்லாத போதும் சிங்கர்பூரில் நிறுத்தப்பட்ட அவரின் இராணுவத்தை முழுமையாக கவனித்து கொள்வதாகவும் உறுதியளித்தார். எவ்வாறிருப்பினும், துரோக நாடகம் நடத்திய சூர்யராவ் ஆயத்தமாக இல்லாத மராட்டிய இராணுவத்தை தாக்கினார். தானாஜி மலூசரேயின் தலைமையிலான மராட்டிய இராணுவம், சூர்யராவின் ஆட்களுக்கு எதிராக போராடியது, அவர்களை பின்னுக்கு தள்ளியது. சூர்யராவின் துரோகத்தால் ஆத்திரமடைந்த சிவாஜி, திரும்பி வந்து சிங்கர்பூரைத் தாக்கினார். எவ்வாறிருப்பினும், சூர்யராவ் தப்பியோடினார் மற்றும் சிங்கர்பூர் சிவாஜியால் கைப்பற்றப்பட்டது
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:17:28 PM
மொகலாயர்களுடன் மோதல்

கொங்கன் வெற்றி
 
1661, பி்ப்ரவரி 3ல் கொங்கன் பகுதியில் சிவாஜி மகாராஜாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கோட்டைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அவர் மீது தாக்குதல் தொடுக்கவும் ஓர் உஸ்பெக் தளபதியான கர்தாலாப் கானை சாய்ஸ்தா கான் அனுப்பி வைத்தான். அவர் 30,000 துருப்புகளுடன் பூனேவிற்கு அருகில் இருந்த அவர் முகாமை விட்டு புறப்பட்டார். இந்த முறை மொகாலயர்கள் வெளிப்படையாக அணிவகுத்து வரவில்லை, சிவாஜி மகாராஜை அதிர்ச்சிக்குள்ளாக்க அவர்கள் நாட்டின் சுற்றுப்பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால், மாறாக, 'அம்பர் கிண்ட்' (இன்றைய பென் அருகில் உள்ள ஓர் அடர்த்தியான காடு) என்ற பாதையில் சிவாஜி மகாராஜ் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார், அத்துடன் அவர்களை அனைத்து திசைகளில் இருந்தும் தாக்கினார். அந்த அடர்த்தியான காட்டில் மறைந்திருந்த மராட்டியர்கள், ஒரு நன்கு ஒருங்கிணைந்த தாக்குதலை மொகலாயார்கள் மீது நடத்தினார்கள்.[13] சிவாஜி மகாராஜ் தாமே ஒரு மேற்தட்டு குதிரைப்படை பிரிவுடன் முன்னனியில் இருந்தார். மற்ற மூன்று பக்கங்களும் சிவாஜி மகாராஜின் மிதமான காலாட்படைகளால் பக்கவாட்டில் இருந்து தாக்குதலைத் தொடுத்தன.
 
மிதமான காலாட்படை மற்றும் குதிரைப்படையின் ஒரு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், சிவாஜி மகாராஜ் அவர்களை வெற்றி கொண்டார். மொகலாய படைகளுக்கு துணை-தலைமை வகித்து வந்த ஒரு மராட்டிய பெண்மணியான தளபதி ராய்பகான் சூழ்நிலையை ஆராய்ந்தார், தோல்வி தவிர்க்க முடியாதது இருப்பதை உணர்ந்த அவர், தோல்வியை ஒப்புக்கொண்டு, சிவாஜி மகாராஜூடன் சமாதானத்தை ஏற்படுத்தி கொள்ளுமாறு கர்தாலாப்கானுக்கு ஆலோசனை வழங்கினார்.[6][13] நான்கு மணிநேர தாக்குதல்களுக்கு உள்ளாகவே எதிரிகள் தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவர்கள் தங்களின் அனைத்து ஆயுதங்களையும், பொருட்களையும் மற்றும் உடைமைகளையும் ஒப்படைத்தார்கள். மொகலாய இராணுவம் பெரியளவில் காயப்பட்டிருந்தது. தோல்வியடைந்த இராணுவம் பாதுகாப்பாக செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் நிராயுதபாணியான பொதுமக்கள் மீதான சிவாஜி மகாராஜின் நீண்டகால கொள்கையின் அடிப்படையில் கர்தாலாப்கான் மற்றும் ராய்பகான் இருவரும் மரியாதையுடன் விடுவிக்கப்பட்டனர்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:19:36 PM
சாய்ஸ்தா கான்
 
இதற்கிடையில், சாய்ஸ்தாகான் அவரின் சிறந்த மற்றும் மீதமிருந்த 100,000 இராணுவத்துடன் பூனேவையும், அதன் அருகில் இருந்த சகான் கோட்டையையும் முற்றுகையிட்டார்.
 
அந்த சமயத்தில், 300-350 மராட்டிய வீரர்களால் பாதுகாக்கப்பட்ட சகான் கோட்டையின் கில்லேடராக (தளபதியாக) பிரான்கோஜி நர்சாலா இருந்தார். மொகலாயர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து அவர்களால் ஒன்றரை மாதம் மட்டும் தாக்கு பிடிக்க முடிந்தது. பின்னர், பரூஜ் (வெளிப்புற சுவர்) வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டது. இது கோட்டைக்குள் மொகலாயர்கள் நுழைய அனுமதிக்கும் வகையில் ஒரு வழியை ஏற்படுத்தி கொடுத்தது.எண்ணிக்கையில் அதிகமாக இருந்த மொகலாய இராணுவத்திற்கு எதிராக பிரான்கோஜி தாமே மராட்டியர்களை முன்னின்று வழிநடத்தினார்.தவிர்க்க முடியாமல், கோட்டையின் இழப்புடன்,பிரான்கோஜியும் கைது செய்யப்பட்டார். பிரான்கோஜியின் வீரத்தை பாராட்டிய சாய்ஸ்தா கானின் முன்னால் அவர் கொண்டு வரப்பட்டார், மொகலாய படையில் அவர் சேர்ந்தால் அவருக்கு ஜஹாகிர் (இராணுவ கமிஷன்) அளிக்கப்படும் என்ற நிபந்தனை வழங்கப்பட்டது, ஆனால் அதை பிரான்கோஜி நிராகரித்தார். அவரின் இராஜ விசுவாசத்தைக் கண்டு ஆச்சரியமடைந்த சாய்ஸ்தா கான் பிரான்கோஜியை மன்னித்து விடுவித்தார். சிவாஜியிடம் திரும்பி வந்த பிரான்கோஜிக்கு, அவர் புபல்கட் என்ற கோட்டையை விருதாக வழங்கினார்.
 
சாய்ஸ்தா கான் அவரின் பெரிய, நன்கு வசதிகளைப் பெற்றிருந்த மற்றும் கடுமையான ஆயுதமேந்திய இராணுவத்துவத்துடன் சில மராட்டிய மாகாணங்களின் சாலைகளில் காலடி பதித்தார். சிவாஜியை அடிபணியச் செய்ய முடியாத சாய்ஸ்தாவின் தோல்வியால் வெறுப்படைந்திருந்த அவுரங்காசீப்பை சமாதானப்படுத்த, அவர் பரிந்தா என்ற அடில்ஷாஹியின் கோட்டையையும் கூட கைப்பற்றினார். இருப்பினும், அவர் பூனேயை ஓர் ஆண்டிற்கும் மேலாக அவரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார், அதன் பின்னரும் அவருக்கு சில வெற்றிகள் கிடைத்தன. அவர் பூனேயில் சிவாஜியின் அரண்மனையான லால் மஹாலை அவர் இருப்பிடமாக கொண்டிருந்தார்.[6] சாய்ஸ்தாவினால் சிவாஜியை அடிபணிய வைக்க முடியாததைப் பார்த்த அவுரங்கசீப், சாய்ஸ்தாகானுக்கு உதவ மகாராஜா ஜஸ்வந்த் சிங்கை (இவர் அவுரங்காசீப் டெல்லியின் சிம்மாசனத்தில் ஏற முயன்ற போது, முன்னதாக ஷா ஜஹான் கட்டளையின் கீழ் தாபி ஆற்றங்கரையில் அவுரங்காசீப்பை நிறுத்தி ஒரு இராஜபுத்திரர் ஆவார்) அனுப்பினார்.
 
சாய்ஸ்தாகான் பூனேயில் கடுமையான காவலை ஏற்படுத்தி வைத்திருந்தார். எவ்வாறிருப்பினும், இந்த கடுமையான காவலுக்கு இடையிலும் சாய்ஸ்தா கான் மீதான ஒரு தாக்குதலுக்கு சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். 1663 ஏப்ரலில், ஒரு திருமண விழா ஓர் ஊர்வலத்திற்கான சிறப்பு அனுமதியைப் பெற்றிருந்தது; அந்த திருமண விழாவை பயன்படுத்தி ஒரு தாக்குதலைத் தொடுக்க சிவாஜி மகாராஜ் திட்டமிட்டார். மராட்டியர்கள் தங்களை பெண் மற்றும் மாப்பிள்ளை ஊர்வலத்தில் மாறுவேடம் பூண்டு பூனேவிற்குள் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜ் அவரின் இளமைகாலத்தின் பெரும்பகுதியை பூனேவில் கழித்திருந்தார், அதனால் அந்நகரையும், அவரின் சொந்த அரண்மனையான லால் மஹாலைச் சுற்றிலும் இருந்த அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும்.சிவாஜி மகாராஜின் சிறுவயது நண்பர்களில் ஒருவரான சிம்மானாஜி தேஷ்பாண்டே, ஒரு பிரத்யேக காவல் சேவைகள் வழங்கியதன் மூலம் இந்த தாக்குதலில் அவருக்கு உதவி செய்தார். பாபாசாஹேப் புரன்தரேவின் கருத்துப்படி, மொகலாய இராணுவத்தில் மராட்டிய வீரர்களும் அடங்கி இருந்ததால், சிவாஜி மகாராஜாவின் வீரர்களுக்கும், மொகலாய இராணுவத்தில் இருந்த மராட்டிய வீரர்களுக்கும் இடையில் வித்தியாசத்தைக் கண்டறிவது யாருக்கும் சிரமாக இருந்தது. இவ்வாறு, இந்த குழப்பத்தை ஆதாயமாக்கி, சிவாஜி மகாராஜூம் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களும் மொகலாய முகாமிற்குள் ஊடுறுவினார்கள்.
 
அரண்மனை காவலாளிகளை வேட்டையாடிய பின், மராட்டியர்கள் ஒரு சுவரை இடித்து அரண்மனைக்குள் நுழைந்தார்கள். சிம்னாஜி மற்றும் நேதாஜி பால்கர் இருவரும் சிவாஜி மகாராஜாவிற்கு பாதுகாப்பளிக்க முதலில் நுழைந்தார்கள். சிவாஜி மகாராஜாவின் மற்றொரு நீண்டகால விசுவாசியான பாபாஜி தேஷ்பாண்டே இந்த தாக்குதலின் போது அவருக்கு உண்மையான பாதுகாப்பை அளித்தார்கள். லால் மஹால் தாக்குதலுக்கு உட்பட்டிருப்பதைப் பார்த்த சாய்ஸ்தா ஹரமில் (பெண்கள் பகுதி) சென்று ஒளிந்து கொண்டார். பின்னர் சிவாஜி மகாராஜ் 'நேருக்கு நேர்' சாய்ஸ்தா கானை எதிர்கொண்டார். ஆபத்தை உணர்ந்து கொண்ட சாய்ஸ்தாவின் மனைவியரில் ஒருவர் உடனடியாக விளக்குகளை அணைத்து விட்டார். சிவாஜி சாய்ஸ்தாவைத் தாக்கினார், இதில் சிவாஜி (இருட்டிலேயே) தம் வாளால் அவர் மூன்று விரல்களை வெட்டினார், உடனே சாய்ஸ்தா திறந்திருந்த ஜன்னல் வழியாக தப்பி ஓடினார். சாய்ஸ்தா கான் மரணத்தின் மிக அருகிலிருந்து தப்பிவிட்டார்; ஆனால் இந்த படையெடுப்பில் அவரின் மகனையும், அவரின் பாதுகாவலர்களையும், வீரர்களையும் இழந்தார்.
 
இந்த தாக்குதலின் 24 மணி நேரத்திற்குள், சாய்ஸ்தா கான் பூனேயை விட்டு விட்டு ஆக்ராவை நோக்கி வடக்கில் ஓடிவிட்டார். பூனேயில் அவரின் இந்த இழிவான தோல்வியால் மொகலாயர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டமைக்கு தண்டனை அளிக்கும் வகையில் கோபமடைந்த அவுரங்காசீப் அவரை தொலைதூர வங்காளத்திற்கு மாற்றிவிட்டார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:21:18 PM
சூரத்தும், மிர்ஜா ராஜா ஜெய்சிங்கும்
 
1664ல் சிவாஜி மகாராஜ், ஒரு முக்கியமான மற்றும் செல்வவளம் மிக்க மொகலாய வர்த்தக நகரான சூரத் மீது படையெடுத்தார், தற்போது வெறுமையாக இருந்த அவரின் கருவூலத்தை நிரப்பவும், சாய்ஸ்தா கானினால் மராட்டிய மாகாணம் சூறையாடப்பட்டதற்கும், கைபற்றபட்டதற்கும் பலிவாங்கும் நடவடிக்கையாக சிவாஜி அதை சூறையாடினார். 1670ல், சூரத் மீண்டும் சிவாஜியால் சூறையாடப்பட்டது.
 
கோபமடைந்த அவுரங்காசீப், சிவாஜி மகாராஜைத் தோற்கடிக்க 100,000த்திற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட இராணுவத்துடன் முதலாம் மிர்ஜா ராஜா ஜெய் சிங்கை அனுப்பினார். ஆரம்பகட்ட யுத்தங்களில் மொகலாய படைகள் தடுத்த நிறுத்த முடியாதபடிக்கு இருந்தன, சிவாஜி மகாராஜ் அவுரங்காசீப்புடன் பேச்சுவார்த்தையில் இறங்க முடிவெடுத்தார். சிவாஜி மகாராஜ் மற்றும் ஜெய்சிங்கிற்கு இடையில் கையெழுத்தான புரந்தர் உடன்படிக்கையில், சிவாஜி மகாராஜ் அவரின் 23 கோட்டைகளையும், ரூ. 400,000த்தையும் மொகலாயர்களுக்கு அளிக்க ஒப்பு கொண்டார். மேலும் அவர் மகன் சம்பாஜியை ஒரு மொகலாய சர்தாராக அனுப்பவும், அவுரங்காசீப்பின் மொகலாய சபையில் சேவை செய்யவும் அவர் ஒப்புகொண்டார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:29:19 PM
ஆக்ராவிற்கான பயணமும், தப்பிப்பும்
 
1666ல், அவுரங்காசீப் அவரின் ஐம்பதாவது பிறந்தநாள் விழாவில் சிவாஜியும், அவரின் ஆறு வயது மகன் சம்பாஜியையும் ஆக்ராவிற்கு வர அழைப்பு விடுத்திருந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் வடமேற்கத்திய எல்லைகளை ஒருங்கிணைக்க, நவீன காலத்தில் ஆப்கானிஸ்தானாக இருக்கும் கண்டாஹாருக்கு சிவாஜி மகாராஜை அனுப்ப அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், 1666 மே 12ல், அவுரங்காசீப் அவரின் சபையில் மன்சாப்தார்களுக்கு (இராணுவ தளபதிகளுக்கு) பின்னால் சிவாஜி நிற்குமாறு செய்தார்.[6] இந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவாஜி மகாராஜ் சபையை விட்டு திடீரென வெளியேறினார். ஆகவே ஆக்ராவின் கோட்வலான புலத்கானின் கண்காணிப்பில் அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்தம் ஒற்றர்கள் மூலம், அவர் வசிப்பிடத்தை ராஜா வித்தல்தாஸ் ஹவேலிக்கு மாற்றவும், பின்னர் அவரை கொன்று விடவும் அல்லது ஆப்கான் எல்லைகளில் அவரை சண்டைக்கு அனுப்பவும் அவுரங்காசீப் திட்டமிட்டிருந்தார் என்பதை சிவாஜி அறிந்தார். இதன் விளைவாக அங்கிருந்து தப்பிக்க சிவாஜி திட்டமிட்டார்.
 
கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருப்பது போல் நடித்த அவர், அவரின் படைப்பிரிவின் பெரும்பகுதியை டெக்கானுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார், இதன் மூலம் அவர் இராணுவத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவுரங்காசீப்பை ஏமாற்றவும் முயற்சித்தார். இதன்பின்னர், அவரின் வேண்டுகோளின் பேரில், அவர் குணமடைவதற்காக ஆக்ராவிலுள்ள சன்னியாசிகள், பகீர்கள் மற்றும் கோயில்களுக்கு தினமும் இனிப்புகளும், பலகாரங்களும் அளிக்க அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.[6] இனிப்புகள் கொண்ட பெட்டிகளை பல நாட்கள் மற்றும் வாரங்களுக்கு அனுப்பிய பின்னர், சிவாஜியும் அவரின் ஆறு வயது மகனும் இரண்டு பெட்டிகளில் ஒளிந்து கொண்டு தப்பித்தார்கள். சாதுக்களைப் (புனித மனிதர்கள்) போன்று போலி வேடமிட்டு சிவாஜியும், அவர் மகனும் டெக்கானுக்கு தப்பினார்கள். இந்த தப்பித்தலுக்கு பின்னர், மொகலாயர்களை ஏமாற்றவும், அவர்களிடமிருந்து சாம்பாஜியைக் காப்பாற்றவும் சிவாஜி அவரே, சாம்பாஜி இறந்துவிட்டதாக வதந்திகளைப் பரப்பினார்.[6]
 
அக்ரயாஹூன் சுட்கா என்கிற ஒரு புத்தகத்தில் டாக்டர். அஜீத் ஜோஷி, ஹவேலி மைதானங்களில் சிவாஜி மத சடங்குகளை செய்து காட்டிய பின்னர், ஒரு பிராமணரைப் போன்று மாறுவேடமிட்டு, அங்கிருந்து புறப்பட்ட அந்தண பரிவாரங்களுடன் கலந்து தப்பித்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறார்.[மேற்கோள் தேவை] எவ்வாறிருப்பினும், ஸ்ரீமன் யோகி (இந்த புத்தகம் பின்னர் சிவாஜி தி கிரேட் என்று மொழிபெயர்க்கப்பட்டது) என்ற மராத்திய புத்தகத்தின் ஆசிரியரான திரு. ரஞ்சித் தேசாயின் கருத்துப்படி, பரிசுகளாக அனுப்பப்பட்ட இனிப்பு பெட்டிகளைக் கொண்டு சென்ற சேவகர்களில் ஒருவராக சிவாஜி மகாராஜ் மாறுவேடமிட்டு இருந்தார்.

Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 03:39:42 PM
போருக்கான தயாரிப்பும், சின்ஹாகட் யுத்தமும்
 
1667-69 ஆகிய ஆண்டுகளில், சிவாஜி ஒரு குறை பெயரையே பெற்றார், அக்காலங்களில் அவர் சுறுசுறுப்பாக அவர் இராணுவத்தை கட்டமைக்க தொடங்கினார். அவர் இராணுவத்தில் அப்பொழுது 40,000 குதிரைப்படைகளும், 60,000 காலாட்படைகளும் இருந்தன, அத்துடன் ஒரு வலிமையான கடற்படையும், ஆற்றல்மிக்க ஆயுதங்களும் உள்ளடங்கி இருந்தன. தற்போது ஒரு வீணான படை தான் அவரிடம் இருப்பதாகவும், மேற்கொண்டு அவர்கள் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்றும் மொகலாயர்கள் எண்ணினார்கள். ஆனால் சிவாஜி யுத்தத்திற்கு அடிவைத்து கொண்டிருந்தார், மேலும் மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் ஒருங்கிணைந்த சக்தியை நேரடியாக கைப்பற்றவும் அவர் திட்டமிட்டார். 1670 ஜனவரியில், மஹாராஷ்டிராவில் மொகலயா காவற்படைகளின் மீது ஒரு பன்முக தாக்குதலைத் தொடுத்தார். ஆறுமாதத்திற்குள் அவர் முன்னர் ஏற்கனவே கொண்டிருந்த மாகாணங்களை மீண்டும் கைப்பற்றியதுடன், அதற்கு மேலும் கைப்பற்றினார்.[6] 1670 முதல் 1674 வரை, மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகளையும், நவீன நாட்களின் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எனப்படும் நீண்ட தெற்கு பகுதிகளையும் உள்ளடக்க அவரின் பேரரசை சிவாஜி விரிவாக்கினார்.
 
பூனேயின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள கொண்டனா கோட்டை தொடர்ந்து மொகலாய கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்தது. கோட்டை காவலர் உதய் பான் ரதோட், தலைமையில் சுமார் 1500 ராஜபுத்திரர்கள் மற்றும் மொகலாயர்கள் அந்த கோட்டை காவலுக்கு இருந்தனர். 1670 பிப்ரவரி 4ல், கொண்டனாவைக் கைப்பற்றும் ஒரு திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த, சிவாஜி அவரின் மிக மூத்தவரும், நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவருமான தானாஜி மலூசரேவை நியமித்தார். அந்த நேரத்தில், தானாஜி மகனின் (ராய்பாவின்) திருமணம் நடைபெற இருந்தது. எவ்வாறிருப்பினும், தம் குடும்பத்தை விட மராட்டிய மண்ணின் கடமையை முதலில் கொண்டு, "அதி லாங் கொண்டன்யாச்சா, மங் மாஜ்யா ராய்பாச்சா" (முதலில் கொண்டனா வெற்றி கொள்ளப்படும், பின்னர் ராய்பாவிற்கு திருமணம் நடக்கும்) என்று அவர் தெரிவித்தார்.
 
தானாஜி மலுசரேவின் கீழ் அளிக்கப்பட்டிருந்த மராட்டிய இராணுவம், கோட்டையில் நிறுத்தப்பட்டிருந்த மொகலாய இராணுவத்தை விட மிக குறைவாகும். தானாஜி மலுசரே சில நாட்கள் கோட்டையையும், அதன் பாதுகாப்பையும் கணக்கிட்டார். அக்கோட்டை நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது. தானாஜியின் கண்களில் ஒரு மிக கூர்மையான பாறை தென்பட்டது. இந்த செங்குத்தான பக்கத்தில் இருந்து கோட்டைக்கு மேல் ஏற முடியும் என்று ஒருவரால் கற்பனையும் செய்ய முடியாது என்பதால் அந்த பக்கம் குறைவாகவே பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருந்தது. கோட்டைக்குள் நுழைய இந்த செங்குத்தான பகுதியை அளக்க தானாஜி முடிவெடுத்தார். ஓர் அமாவாசையன்று இந்த செங்குத்தான பகுதியில் ஏற, அவர் ஓர் ஒடும்பின் (யேஷ்வந்தி என்று பெயரிடப்பட்ட மராட்டியில் கோர்பண்ட் என்று அறியப்படும்) உடலில் கயறைக் கட்டி பயன்படுத்தினார் என்பது புராணம். அந்த ஒடும்பின் கோட்டையின் மேலே ஏற உதவியது. இந்த ஒடும்பின் முக்கிய பண்பு, இறுக்கி பிடிப்பதென்பதால் கோட்டையின் ஒரு முனையில் அது கவ்வி நின்றது. பின் மேலே ஏறிய ஒரு வீரர் பிறரும் ஏற இடமளிக்கும் வகையில் கயிறுகளை வீசினார்.
 
இதற்கிடையில் தானாஜியின் சகோதரர் சூர்யாஜி, மற்றொரு 300 மாவலாக்களுடன் கால்யாண் தார்வாஜா எனும் கோட்டை கதவுகளுக்கு அருகில் வந்தார். அந்த கதவுகள் விரைவில் திறக்கப்பட்டன, அவரின் அனைத்து வீரர்களும் திடீர் தாக்குதலில் தானாஜியுடன் சேர்ந்து கொண்டார்கள். தானாஜியும், உதய்பானும் நேருக்கு நேர் மோதினார்கள், மற்றும் ஒரு கடுமையான போர் உறுதியாயிற்று. உதய்பானு ஒரே வீச்சில் தானாஜியின் கவசத்தை உடைத்தெறிந்தார், இதில் சிறிதும் தயங்காத தானாஜி, அவரின் காயங்கள் மற்றும் இரத்தப்போக்கை நிறுத்த அவரின் தலைப்பாகையை பாதுகாப்பிற்காக அவர் இடது கையில் சுற்றி கொண்டு தொடர்ந்து போரிட்டார். படுமோசமாக காயப்பட்டிருந்த தானாஜி, தள்ளாடி கீழே விழுந்தார். தங்கள் தலைவர் கடுமையான காயத்துடன் தங்கள் கண்முன்னால் இறப்பதைக் கண்ட மராட்டிய வீரர்கள் பின்திரும்பவும், பின்னடையவும் தொடங்கினார்கள், சூர்யாஜி மற்றும் ஷீலர் மாமா முன்னோக்கி சென்று தலைமை ஏற்றார்கள். தனது எழுபதாவது வயதில் இருந்த ஒரு பழைய சர்தார்ஜியான ஷீலர் மாமா பொறுப்பேற்றார், உதய்பானுவை எதிர்நின்று போராடியதுடன் வெகு விரைவிலேயே அவனை கொன்று வீசினார். அச்சமயம் துருப்புகளை வழிநடத்தவும், ஒடுக்குமுறையில் அவர்களைத் திருப்பவும் சூர்யாஜி முற்பகுதிக்கும், மையத்திற்கும் அடியெடுத்து வைத்தார். தற்போது மராட்டியர்கள் மொகலாய தடுப்பாளர்கள் மீது அவர்களின் தாக்குதலை மீண்டும் தொடங்கினார்கள், இதன் மூலம் கோட்டையைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றார்கள்.
 
வெற்றிக்குப் பின் சிவாஜி கோட்டைக்கு வந்த போது, தம் அருமை நண்பர் தானாஜியின் இழப்பிற்காக மிகவும் ஆழமாக வருத்தப்பட்டார். அவர் மிகவும் சோகத்துடன், "கத் ஆலா பன் சின்ஹா கேலா" (கோட்டை வெற்றி கொள்ளப்பட்டது, ஆனால் சிங்கம் இழக்கப்பட்டது) என்று குறிப்பிட்டார். இதற்கு பின்னர், தானாஜி மாலுசரேயின் வீரத்தை கௌரவிக்கும் வகையில் கொண்டனா கோட்டை சின்ஹாகட் என்று பெயர் மாற்றப்பட்டது
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:20:57 PM
பட்டமளிப்புகளும், தெற்கத்திய பிரயாணமும்
 
1674, ஜூன் 6ல், ராய்கட் கோட்டையில் சிவாஜி உத்தியோகப்பூர்வமாக சத்ரபதி யாக (சத்ரியர்களின் அரசர் அல்லது தலைவர்) முடிசூட்டி கொண்டார். அத்துடன் சத்ரிய குலவன்தாஸ் சின்ஹசனாதீஷ்வர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் என்ற பட்டமும் வழக்கப்பட்டது. வாரணாசியிலிருந்து வந்த ஒரு புகழ்பெற்ற பிராமணரான பண்டிட் காகாபட், அந்த விழாவிற்கு தலைமை தாங்கியதுடன், சிவாஜியின் வழிமரபு ஒரு உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சத்ரிய மரபு என்று அறிவித்தார்.[6] சிவாஜி உண்மையில் தன்ங்கார் சமயபோதர் வழிமரபில் இருந்து (அவர் அதிலிருந்து வந்தவர் தான் என்பதால்) வந்தவர் என்று கூறி உள்ளூர் சன்னியாசிகள் இதை நிராகரித்தார்கள்.[14][15][16] அவர் வேதங்களால் ஜான்வா (ஹிந்தியில் - ஜான்யூ, சத்திய பாதை) வழங்கப்பட்டவர், மேலும் அபிஷேகத்திலும் நீராட்டப்பட்டவர். 9ஆம் நூற்றாண்டில் இருந்து வழக்கில் இல்லாமல் இருந்து வந்த இந்திரபிஷேக் சடங்கிற்கு சிவாஜி முக்கியத்துவம் அளித்து கொண்டிருந்தார். அப்போது சிவாஜிக்கு "சக்கார்தா" என்ற பட்டம் வழங்கப்பட்டது. அவர் தனது சொந்த நாட்காட்டியைத் தொடங்கினார். சில நாட்களுக்கு பின்னர், இரண்டாம் விழா நடத்தப்பட்டது, இந்த முறை டான்ட்ரிசத்திற்கான வங்காள பள்ளியின் கருத்துப்படி, நிஸ்சல் பூரியின் தலைமையி்ல் நடத்தப்பட்டது.
 
இந்த பட்டமளிப்புக்கு பின்னர், 1676ன் இறுதியில், 50,000 (30,000 குதிரைப்படை & 20,000 காலாட்படை) துருப்புகளைக் கொண்ட ஒரு மாபெரும் படையுடன் சிவாஜி மகாராஜ் தெற்கத்திய இந்தியாவில் வெற்றி அலைகளை நிகழ்த்தினார்.[6] அவர் கர்நாடகாவின் பிஜாப்பூருக்கு அருகில் உள்ள (தற்போது தமிழ்நாட்டில் உள்ளன) வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளைக் கைப்பற்றினார். அவர் கொல்கொண்டாவின் குதுப்ஷாவுடன் ஒரு நேச உடன்படிக்கையும் செய்து கொண்டார். இந்த வெற்றிகள் அதற்கடுத்து ஏற்பட்ட யுத்தங்களில் மிக முக்கியத்துவமானவை என்பதை நிரூபித்தன. 27 ஆண்டுகள் யுத்தத்தின் போது செஞ்சி 9 ஆண்டுகள் மராட்டியர்களின் தலைநகராக விளங்கியது. எவ்வாறிருப்பினும், சஹாஜிக்கு பின்னர் தஞ்சாவூரை ஆண்ட வென்கோஜியுடன் (மொஹிட்டி குடும்பத்திலிருந்து வந்த சஹாஜியின் இரண்டாவது மனைவின் மகன்) சமரச செய்து கொள்வது தான் அவரின் முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்கள் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள், சிவாஜி மகாராஜூடன் சமரசப்படுவதற்கான அறிகுறிகளை வென்கோஜி (ஈகோஜி I) காட்டினார் என்றாலும், பின்னர் எவ்விதமான உறுதியான விளைவும் ஏற்படவில்லை.[6] எவ்வாறிருப்பினும், அவர்கள் இருவரும் எதிரிகளாக இல்லை, அவர்கள் வெவ்வேறு பேரரசுகளை ஆண்டு வந்தார்கள்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:22:34 PM
ஆட்சி
 
சிவாஜி மகாராஜ் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார், அவர் மந்திரிசபை (அஸ்தபிரதான் மண்டல் ), வெளி விவகாரத்துறை (தர்பார் ) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை போன்ற நவீன கருவுருக்களை உட்கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தை உருவாக்கினார். சிவாஜி மகாராஜ் ஒரு சிறப்பான பொது மற்றும் இராணுவ நிர்வாகத்தை ஏற்படுத்தினார். ஒரு சக்திவாய்ந்த கடற்படையையும் உருவாக்கிய அவர், சிந்துதுர்க் போன்ற துறைமுகங்களையும் கட்டியதுடன், மேற்கு கடற்கரையில் அமைந்திருந்த விஜய்துர்க் போன்ற பழையவைகளையும் வலிமைப்படுத்தினார். பிரிட்டிஷ், போர்ச்சுகீசிய மற்றும் டச்காரர்களுக்கு எதிராக தனது சொந்த கடற்படையை மராட்டியர்கள் கொண்டிருந்தார்கள் .
 
சிவாஜி மகாராஜ் அவரின் விஷயங்களில் அவரின் பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தார் என்பது நன்கு அறியப்பட்டதாகும். அரசு மற்றும் குடிமக்களுக்கு இடையில் ஒரு நெருங்கிய உறவு உண்டு என்று அவர் நம்பினார். அவர் திறமையான மற்றும் சவாலான தனிநபர்கள் அனைவரையும் ஒவ்வொரு அரசியல்/இராணுவ போராட்டத்திலும் பங்குபெற ஊக்கப்படுத்தினார். அவர் ஒரு நல்ல மனம் படைத்த அரசராக நினைவு கூரப்படுகிறார். அவர் இராணுவ அமைப்புகள், துறைமுக கட்டுமானங்கள், சமூக மற்றும் அரசியலில் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டு வந்தார்.[6] சிவாஜி மகாராஜ் பல முக்கிய எதிரி தாக்குதல்களை முறியடிக்கவும், வெற்றி கொள்ளவும் அவர்தம் படைகளை வெற்றிகரமாக வழிநடத்தினார். அவர் பேரரசின் எல்லைகளை விரிவாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார். ஒரு சுதந்திரமான, விடுதலைப்பெற்ற தாய்நாட்டை உருவாக்குவதற்கான அவரின் தீர்மானத்தால் அவர் வெற்றி உந்தப்பட்டிருந்தது. அவரின் இலக்கில் அவர் அவரின் வீரர்கள், தொண்டர்கள் மற்றும் குடிமக்களின் உயர்மட்ட இராஜவிசுவாசம், மதிப்பு மற்றும் பொறுப்புணர்ச்சி ஆகியவற்றால் ஆதரவு பெற்றார்.
 
ஒரு கண்டுபிடிப்பாளரான அவர் ஒரு திறமையான தளபதியாகவும் இருந்தார், தாக்கி விட்டு ஓடுவது, மாகாணங்கள் மற்றும் கோட்டைகளின் மூலோபாய விரிவாக்கம், விரைவாக நகரக்கூடிய பிரகாசமான குதிரைப்படைகள் மற்றும் காலாட்படைகளை உருவாக்குதல், மூலோபாய யுத்த திட்டங்கள் மற்றும் தந்திரங்களைக் கையாளுதல் உட்பட பல திறமையான உத்திகளை அவர் வெற்றிகரமான கையாண்டார், இவற்றின் மூலமாக அவரை விட மிக பெரிய பெயர்பெற்ற எதிரிகளைக் கூட அவரால் காலத்துடனும், மீண்டும் மீண்டும் கூட வெற்றி கொள்ள முடிந்தது. அவர் ஆட்சி இறுதிகட்டத்தின் போது, அவர் ஓராயிரத்திற்கும் மேலான வலிமையுடன் மராட்டிய படைகளைத் தயார் செய்து வைத்திருந்தார்.
 
அவர் தம் பேரரசை தமிழ்நாட்டில் உள்ள செஞ்சியை நோக்கி விரிவாக்கும் போது, மொகலாய படைகளை அவரால் திறமையாக மடக்கி வைக்கவும், தாக்குதல் நடத்த முடியாநிலையிலும் வைக்க முடிந்தது.[6] இந்தியாவிற்குள் மொகலாய சக்திகளுக்கு எதிராக ஒரு ஹிந்து அரணாக சிவாஜி மகாராஜின் பேரரசு இருந்தது. யுத்தகளத்தில் அவரின் புத்திசாலித்தனமான உத்திகள் மற்றும் மூலோபாயங்களும், துல்லியமான நிர்வாகமும் மற்றும் நிர்வாக திறமையும் இந்தியாவில் எதிர்கால மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபிப்பதற்கான அடித்தளங்களை அமைக்க அவருக்கு உதவின
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:25:09 PM
பண்புகள்
 
அவரின் நீண்ட இராணுவ வாழ்க்கை மற்றும் பல்வேறு போராட்டங்களின் போதும், அவரின் ஆழ்ந்த மத மற்றும் வீர நெறிமுறைகள், பின்பற்றத்தக்க பாத்திரம் மற்றும் ஆழ்ந்திருந்த மற்றும் விட்டுக்கொடுக்காத ஆன்மீக தேற்றங்களானது, அவரை வழிபாட்டு தளங்கள், போர் நடக்காத இடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்க தூண்டியது. அவர் எப்போதும் அனைத்து மத மற்றும் வழிபாட்டு தளங்களுக்கு மதிப்பளித்தார், பாதுகாப்பளித்தார் மற்றும் காப்பாற்றி வைத்திருந்தார்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F450px-Shivajistatue.jpg&hash=fc83b63058b1c384592900ec841dc34c85e229e5)

டெல்லி பிர்லா மந்தீரில் உள்ள சிவாஜி மஹாராஜின் சிலை

ஒருமுறை சீருடை அணிந்த ஒரு மராட்டிய கேப்டனினால் ஓர் அழகிய இளம் நங்கை யுத்த செல்வமாக சிவாஜி மகாராஜாவிற்கு அளிக்கப்பட்டாள். அவள் மஹாராஷ்டிராவின் கல்யாணை ஆண்ட தோற்கடிக்கப்பட்ட முஸ்லீம் அமீரின் மருமகள் ஆவாள். அவள் அழகு மயக்கும் தன்மை கொண்டதாகவும், ஆனால் அவர் அன்னை அவளை விட அழகானவர், அதைபோலவே தாமும் அழகானவர் என்று சிவாஜி மகாராஜ் கூறியதாக கூறப்பட்டது. அவர் அமைதியாக, எவ்வித பாதிப்பும் இல்லாமல், அவரின் பாதுகாப்பின் கீழ் அவளை அவர் குடும்பத்திற்கு திரும்ப செல்லுமாறு கூறினார். அவர் நடவடிக்கை, எப்போதும் உயர்ந்த நீதிக்கு கட்டுப்பட்டதாகவே அவரை சுற்றி இருந்தவர்களால் பார்க்கப்பட்டது. ஓர் உண்மையான உயர்மனிதனின் நல்லொழுக்கம் மற்றும் அறநெறிகளை அவர் தன்னகத்தே கொண்டிருந்தார்.
 
அவரின் பெரியளவிலான எதிர்களிடம் இருந்து அவர் நாட்டிற்கு சுதந்திரம் மற்றும் விடுதலையைப் பெறவும், நாட்டை காப்பாற்றவும் அவர் வாழ்வையும், அவர் செல்வத்தையும், அவர் தனிப்பட்ட நலனையும் மற்றும் அவர் குடும்பத்தையும் அவர் மிக தைரியமாக ஆபத்தில் பணயம் வைத்தார். வலிமையான மொகலாய சாம்ராஜ்ஜியம் மற்றும் பிற சுல்தானியர்களால் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூழ்கடிக்கும் தாக்குதல்களை அவர் தயக்கமின்றி எதிர்த்து நின்றார். அவர் எதிரிகளால் நிலைநிறுத்தப்பட்ட ஒரு நிகரற்ற அளவிலான பிரச்சனைகள் மற்றும் சவால்களை முகங்கொடுப்பதில் அவர் வெற்றி பெற்றார்.[6] சுய-அதிகார பெருக்கம் அல்லது போலி கவுரவத்திற்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களிலும் அவர் எவ்வித ஆதாரங்களையும் செலவிடவில்லை, மாறாக அவர் தன் மக்கள் மற்றும் நாட்டின் மீது ஆழமாக கொண்ட தர்ம உணர்வால் (புனித கடமை) உந்தப்பட்டிருந்தார். திறமை, சுயநலமின்மை, சுதந்திரம், விடுதலை, சகோதரத்துவம் மற்றும்உ நிகரில்லா தைரியம் ஆகியவை அவரின் பரம்பரை சொத்தாக இருந்தது, ஆகவே அவ்வாறு அக்காலகட்டத்தில் அவர் ஒரு முன்மாதிரியாக விளங்கினார்.
 
சிவாஜி மகாராஜ் ஒரு அரச பதவிக்குரியவராக நடத்தப்படுவதில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, உண்மையில் ஒரு சிறந்த தலைவராகவும், அரசராவும் விளங்க அதற்காக அவர் தன் சகாக்களுடன் நேரத்தைச் செலவிட சுதந்திரமாக அவர்களுடன் கலந்திருந்தார். அவர் நசுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு வகையான இந்திய விவசாய உணவான 'பக்ரீஸ்' ஆகியவற்றுடன் அவரின் அடிமட்ட வீரர்களுடன் (மாவ்லாஸ்) சேர்ந்த சாதாரண உணவை உட்கொள்வதில் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்பட்டது. அவரின் குணநலன் சிறந்த உணர்வுப்பூர்வமான நடைமுறைக்கேற்றதாக கூறப்பட்டது, அதேசமயம் அவரின் திட்டத்தை அவர் கையில் எடுத்த போது மிகவும் தீவிரமாகவும், அவர் மக்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு தம் தேவைகளைக் கூட அவர் கவனித்து கொள்ள மாட்டார் என்பதாக இருந்தது.[6] இதன் விளைவாக சிவாஜி மகாராஜ் அவரை பின்பற்றுபவர்களுடனும், குடிமக்களுடனும் ஓர் ஆழ்ந்த நெருக்கத்தைக் கொண்டிருந்தார். அவரை பின்பற்றுபவர்கள் மற்றும் சகாக்களிடமிருந்து அவர் சம்பாதித்த உயர்மட்ட நிர்வாகம் மற்றும் மதிப்பானது, பதிவு செய்யப்பட்ட இந்திய வரலாற்றில் உள்ள பிற பெரும்பாலான இந்திய அரசர்கள் அல்லது தலைவர்களை விட அவரை மிக உயரத்தில் நிறுத்துகிறது. இன்றும் கூட அவர் இந்தியாவில், குறிப்பாக மஹாராஷ்டிராவில் பயபக்தியுடனும், ஆச்சரியத்துடனும் மதிக்கப்படுகிறார், மேலும் இதிகாசத்தின் கதாநாயகனாகவும் அவர் பார்க்கப்படுகிறார்
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:29:06 PM
இராணுவம், கப்பற்படை மற்றும் கோட்டைகள்
 
மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் அழிவு வரை அழிக்கப்பட முடியாததாக இருந்த சிவாஜியின் இராணுவ அமைப்பில் அவரின் மேதமை மிக வெளிப்படையாக இருந்தது. ஒரு யுத்தகளம் போன்றதற்கு பயன்படுத்தப்படும் வார்த்தையான "கனிமி காவா" (நவீன காலத்தில் "கமாண்டோ" என்ற வார்த்தை) என்ற கமாண்டோ நடவடிக்கைகளில் இருந்த முன்னோடிகளில் அவரும் ஒருவராக இருந்தார்.[19] 'ஹர் ஹர் மஹாதேவ்' (சிவனை போற்றுவோம்) என்பது அவரின் மாவலா இராணுவத்தின் யுத்த முழக்கமாக இருந்தது.[6] இராணுவ அமைப்பில் பல மாற்றங்களைச் செய்வித்ததில் சிவாஜி முக்கிய பங்காற்றினார்.இதில் உள்ளடங்குவன -

**பாகா என்று அழைக்கப்படும் அரசுக்கு சொந்தமான ஒரு நிலைநிறுத்தப்பட்ட இராணுவம்;

 **அனைத்து போர் குதிரைகளும் அரசுக்கு சொந்தமாகும்; அவற்றை பாதுகாப்பதற்கான பொறுப்பு அரசைச் சாரும்.
 
**விவசாயிகளில் இருந்து பகுதி நேர படைவீரர்களை உருவாக்கியது, இவர்கள் எட்டு மாதங்கள் வயல்களில் உழைத்தனர், மீத நான்கு மாதங்கள் யுத்தத்திற்கு உதவினார்கள்.
 
**இடம்பெயரக்கூடிய மற்றும் இலகுவான காலாட்படை மற்றும் குதிரைப்படை ஆகியவை அவரின் கண்டுபிடிப்புகள், அவை கமாண்டோ உத்திகளில் பயன்படுத்தப்பட்டன.
 
**மத்திய புலனாய்வு துறை, ஒற்று அறியும் முறை (சிவாஜியின் அனைத்து தாக்குதல்களிலும் அவரின் எதிரி தகவல்களை சிவாஜிக்கு அளித்த முக்கிய ஒற்றராக இருந்தவர் பாஹிர்ஜி நாயக் ஆவார், பிரதாப்கண்ட் போரில் விஷ்வாஸ் நானா டிகே முதன்மை ஒற்றராக இருந்தார், பன்ஹாலா முற்றுகையின் போது விஸ்வாஸ்ராவ் முசேகர் முதன்மை ஒற்றராக இருந்தார்), சிறப்பார்ந்த கப்பற்படை மற்றும் தொடர்ச்சியான கமாண்டோ-வரிசை ஆகியவற்றின் அறிமுகம்.

** யுத்தகள முறையின் அறிமுகம் கொரில்லா யுத்தமுறை, கமாண்டோ நடவடிக்கைகள், பக்கவாட்டிலிருந்து துரித தாக்குதல்கள் மூலம்
 
**ஆயுதங்கள் மற்றும் நெருப்புசக்தியின் கண்டுபிடிப்பு, புலி நகம் அல்லது 'பாக்நாக்' போன்ற பாரம்பரிய ஆயுதங்களின் கண்டுபிடிப்பு. 'விதா' என்கிற ஆயுதம் சிவாஜியால் அறிமுகப்படுத்தப்பட்டது;
 
**எல்லா வர்க்கங்களும் உட்பட, பெரும்பாலும் முழு சமுதாயமும் இராணுவமயமாக்கப்பட்டது. கோட்டைக்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் குடியேறியவர்களின் மொத்த விவசாய மக்களும் தங்களின் பாதுகாப்பிற்காக துடிப்புடன் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

 
ஒரு பாதுகாப்பான கடற்கரை பகுதி அமைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும், சிட்தியின் கப்பற்படை தாக்குதலில் இருந்து மேற்கத்திய கொங்கண் கடற்கரையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சிவாஜி உணர்ந்தார். ஒரு வலிமையான கப்பற்படையைக் கொண்டிருந்தால் இருக்க கூடிய இராஜதந்திர ஆதாயத்தை உணர்ந்த அவர், இந்த யோசனைக்கு செயல்வடிவம் அளிக்க முடிவெடுத்தார்.
 
இந்திய கடற்பகுதிகளில் பிரித்தானிய இந்தியக் கப்பற்படையின் அதிகரித்து வரும் செல்வாக்கு குறித்து கவலை கொண்டிருந்த சிவாஜி, இந்த பிரச்சனையைச் சமாளிக்க அவர்தம் கப்பற்படையை உருவாக்க தொடங்கினார். இந்த முக்கிய காரணத்திற்காக, அவர் "இந்திய கப்பற்படையின் தந்தை" என்றும் அழைக்கப்படுகிறார்..
 
கரடுமுரடான மேற்கத்திய தொடர்களுக்கு குறுக்காக ஓராயிரம் கிலோமீட்டருக்கும் மேலான தூரத்தில் 300 அல்லது அதற்கும் மேற்பட்ட கோட்டைகளைத் தொடர்ச்சியாக சிவாஜி கட்டி அமைத்தார். அவ்வாறான கோட்டைகள் ஒரு துரோகியால் எதிரிகளுக்கு அளிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஒவ்வொன்றும் சமமான பதவியில் இருந்த மூன்று அதிகாரிகளின் கீழ் அளிக்கப்பட்டது. அந்த அதிகாரிகள் (சப்னிஸ், ஹவல்தார், சார்-ஐ-நௌபாத்) கூட்டாக செயல்பட்டார்கள் மற்றும் பரஸ்பர தடுப்புகளையும் சமமாக அளித்தார்கள். சிவாஜி இறக்கும் போது 360 கோட்டைகள் அவர் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:31:56 PM
சமஸ்கிருதத்தின் வளர்ச்சி
 
சிவாஜி மகாராஜாவின் வீடு, சமஸ்கிருதத்துடன் நன்கு பரிச்சயமான மற்றும் அதை வளர்த்தெடுத்த சிறந்த இந்திய குடும்பங்களில் ஒன்றாகும். இதன் மூலவேர் சஹாஜியிலிருந்து கொண்டு வரப்பட்டது, அவர் ஜெய்ராம் பிண்டியே மற்றும் அவரைப் போன்ற பலரை ஆதரித்தார். சிவாஜி மகாராஜாவின் முத்திரையும் அவரால் தான் உருவாக்கப்பட்டது. அதே பாரம்பரியத்தைத் தொடர்ந்த சிவாஜி மகாராஜ், அதை மேலும் வளர்த்தெடுத்தார். சிந்து துர்க், பிராசாண்ட்கர், சுவர்ண்துர்க் மற்றும் இதுபோன்ற பெயர்களில் அவர் கோட்டைகளுக்கு பெயரிட்டார். நியாயதிஷ், சேனாபதி மற்றும் இதுபோன்ற இதர பிறவற்றின் வழியில் சமஸ்கிருத இடுபெயராக ஆஸ்தா பிரதான் (மந்திரிசபை) என்று அவர் பெயரிட்டார். ராஜ்ஜிய விவகார் கோஷையும் (அரசியல் ஆலோசனை குழு) அவர் தயாராக வைத்திருந்தார். அவரின் அரசபுரோகிதர் கேஷவ் பண்டிட் தாமே ஒரு சமஸ்கிருத புலவரும், மேதையாகவும் இருந்தார். அவர் மரணத்திற்கு பின், தாமே ஒரு சமஸ்கிருத மேதையாக (அவர் வார்த்தைகளில் - புத்பூஷணம்) இருந்த சாம்பாஜி அதை தொடர்ந்தார். அவரின் பேரன் ஷாஹூ அவர் குழந்தைப்பருவம் முழுவதையும் மொகலாய ஆளுகையில் செலவிட்டிருந்ததால், அவரின் ஆர்வம் அதில் குறைந்திருந்தது. ஆனால் படித்த பிராமணர்களுக்கு அவர் பரிசுகளை வாரி வழங்கினார். போஸ்லேவின் தஞ்சாவூர் பிரிவிலிருந்த இரண்டாம் ஷெர்போஜி, மராட்டி தேவநாகரியில் முதல் புத்தகத்தை அச்சிட்டு இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்தார்.
 
சம்பாஜி ஒரு தனபத்ரா வை (நன்கொடை பத்திரம்) அளித்தார், அவராலேயே சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்த அதில் அவர் தன் தந்தை பற்றி பின்வருமாறு எழுதுகிறார்:


 1.யவனரம்பா க்ரிதத் ம்ளிசக்ஷாதிக்ஷா : அதாவது, சிவாஜி ஒரு சத்தியபிராமானம் எடுத்து கொண்டார், தாக்குதல் நடத்துபவர்களை தோற்கடிக்கும் செயல்திட்டத்தில் அவர் இருந்தார்.
 2.தில்லின்டிராமன் பிரத்வன்ஸ்பது : டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்தைத் தோற்கடித்த ஒருவர்
 3.விஜயபுரதீஷ்வர் ப்ரத்தர்மன்யா பூஜ்சச்யாய : விஜய்பூரில் அடில்ஷாஹி அரசரால் இவரிடம் உதவி கோரப்பட்டது.
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 05:39:47 PM
மதம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2FBhavani__Shivaji.jpg&hash=480c896ca97e535af30fa624936cef71aa28fe5d)

புராணங்களின்படி, போஷ்லேவின் தெய்வீக குடும்பத்தின் பெண் தெய்வமான பவானி சிவாஜி மஹாராஜாவிற்கு ஒரு தெய்வீக வாளை அளித்தது.

ஒரு வயதான மற்றும் நோய்வாய்பட்டிருந்த ஒரு நபரான ராம்தாஸால் முறையிடப்பட்ட பின்னர், பராலி கோட்டையில் தங்க அவர் அனுமதிக்கப்பட்டார். விரைவிலேயே, அவரின் சொந்த விருப்பத்தின் பேரில், ஆனால் சிவாஜி மரணத்திற்கு பின்னர், ராம்தாஸ் அவரின் நிரந்தர மடத்தை அங்கு உருவாக்கினார். அதை தொடர்ந்து அந்த கோட்டை "சஜ்ஜன்கட்" (புனிதர்களுக்கான கோட்டை) என்று பெயர் மாற்றப்பட்டது.
 
1674ல் சிவாஜி மகாராஜாவும், ராம்தாஸூம் முதன்முதலில் சந்தித்து கொண்டார்கள் என்று கூறப்பட்டது. சாது துக்காராம் தான் சிவாஜி ராஜேவின் ஆன்மீக குருவாக இருந்தார் என்பதற்கான பல நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
 
கடவுள் நம்பிக்கையுள்ள ஒரு ஹிந்துவான சத்ரபதி சிவாஜி மகாராஜா, அந்த பிராந்தியத்திற்குள் இருந்த அனைத்து மதங்களுக்கும் மரியாதை அளித்தார். துகாராம் போன்ற வார்காரி சாதுக்களுக்கும், கொண்கனில் இருந்த சுஃபி முஸ்லீம் பிர் ஷேக் யாகூப் பாபா அவாலியா ஆகியோருக்கு சிவாஜி மகாராஜ் மிகுந்த மரியாதை அளித்தார்.[23] அவர் கோல்ஹாபூர் மாவட்டத்தின் பட்காவ்விலுள்ள (கார்கோட்டிக்கு அருகில் உள்ள புதர்கட் தாலுகா) சமாதி மற்றும் மௌனி மகாராஜ் கோயிலையும் சென்று பார்த்தார். அஹ்மதாபாத்தில் உள்ள சாஹா-ஷரீப் தர்காவிற்கு சஹாஜி ஒரு பரந்த நிலத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார். (சிவாஜி மகாராஜின் தந்தை "சஹாஜி" மற்றும் சிவாஜி மகாராஜின் மாமா "சர்போஜி" ஆகியோரின் பெயர்கள் இந்த ஷாஹ் ஷரீப்ஜி என்பதை பிரித்து அதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்)
 
சிவாஜி மகாராஜ் அவர் சகாக்களின் மத சுதந்திரத்தை அனுமதித்தார், அத்துடன் கட்டாய மத மாற்றத்தையும் எதிர்த்தார்.[6][24] ஒரு வெற்றிக்கு பின் சிவாஜி மகாராஜ் செய்த முதல் வேலை, மசூதிகள் மற்றும் முஸ்லீம் கோபுரங்களின் பாதுகாப்பதேயாகும்.
 
சிவாஜியின் இராணுவத்தில் குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லீம்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவரின் அனைத்து படையெடுப்புகளிலும் இருந்த மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஜெனரல்களில் ஒருவர் ஹைதர் அலி கோஹரி ஆவார்; நூர் கான் பெக் ஒருமுறை காலாட்படையின் தலைவராக இருந்தார்; இப்ராஹிம் கானும், தௌலத் கானும் கப்பற்படையில் முக்கியமானவர்களாக இருந்தார்கள்; பீரங்கிப்படைக்கு சிட்டி இப்ராஹிம் ஒருமுறை தலைவராக இருந்தார்.
 
இஸ்லாமின் சுஃபி பாரம்பரியத்தின் மீது சிவாஜி மகாராஜ் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.[25] சுஃபி முஸ்லீம் சாதுவான பாபா சரீப்புதீனின் கல்லறையில் சென்று சிவாஜி மகாராஜ் வணங்குவதுண்டு. அவர் மற்றொரு சுஃபி சாதுவான கொண்கனின் ஷேக் யாகூப்பின் ஆசிகளை வேண்டுவதற்காக அவரின் இருப்பிடத்திற்கும் அவர் சென்றுள்ளார். ரத்னகிரியில் உள்ள ஹஜ்ரத் பாபாவை அவர், பாஹூத் தோர்வாலே பாவ் , அதாவது "மூத்த சகோதரர்" என்று அழைத்தார். அவர் தமது நண்பர்களிடமும், எதிரிகளிடமும் அவரின் சிறந்த அணுகுமுறையால் அவர் கட்டளைக்கு கீழிருந்த முஸ்லீம்களையும் மரியாதையுடனும், நிறைமையுடனும் நடத்தினார்.[6] மொகலாய வரலாற்றாளர் காஃபி கான் மற்றும் ஒரு பிரெஞ்சு பயணரான பெர்னர் ஆகியோரால் அவரின் மத கொள்கைகள் பற்றி உயர்வாக பேசப்பட்டுள்ளார். நேதாஜி பால்கர் மற்றும் பஜாஜி போன்ற மதம் மாறியவர்களையும் மீண்டும் ஹிந்துத்துவத்திற்கு கொண்டு வந்தார். அவர் தம் பேரரசில் அடிமைத்தனத்திற்கு தடை விதித்தார்.[6] சிவாஜி மகாராஜ் அவர் ஆட்சியில் இருந்த பெண்களுக்கு மனிதாபிமான மற்றும் தாராளவாத கொள்கைகளை அளித்தார்.[25] மதம், நாடு அல்லது சமய கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிவாஜி மகாராஜ் பெண்களை மதித்தது குறித்து நாட்டுப்புறவியலில் பல சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
 
பிற மதங்களை உள்ளடக்கியது மற்றும் ஏற்றுக்கொண்டது மீதான சிவாஜியின் உணர்வுகள், அவுரங்காசீப்பிற்கு எழுதப்பட்ட கடிதத்தில் காணக்கிடைக்கின்றன, அவர் எழுதியதாவது:[/b][/color]
 

"Verily, Islam and Hinduism are terms of contrast. They are used by the true Divine Painter for blending the colours and filling in the outlines. If it is a mosque, the call to prayer is chanted in remembrance of him. If it is a temple, the bells are rung in yearning for him alone."
 
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 06:10:52 PM
மரணமும், வெற்றிகளும்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1027.photobucket.com%2Falbums%2Fy338%2Fjimikki%2F500px-South_Asia_1758_AD.jpg&hash=b02918acaaf448f9579fdb3fdc0cd74b7a2bd6ce)

சுமார் 1758 ஏடி காலத்திய தெற்காசியாவின் அரசியல் வரைபடம்

அவர் ஓர் இரத்தபெருக்கு நோயான,[மேற்கோள் தேவை] இன்டெஸ்டினல் ஆன்த்ரக்ஸினால் இறந்ததாக கூறப்படுகிறது.[மேற்கோள் தேவை] அவரின் இறுதிச்சடங்கு அவர் மகன் ராஜாராம் மற்றும் மனைவி சோயராபாய் முன்னிலையில் ராய்கட்டில் நடைபெற்றது. சிவாஜி மகாராஜின் இறப்பிற்கு பின்னர், அவர் மூத்த மகன் சாம்பாஜியும், சோயராபாயும் பேரரசின் கட்டுப்பாட்டைக் காப்பாற்ற போராடினார்கள். ஒரு சிறிய போராட்டத்திற்கு பின்னர் சாம்பாஜி சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார்.[23]
 
சிவாஜி மகாராஜின் மரணத்திற்கு ஒரு சில மாதங்களுக்கு பின்னர், அவுரங்காசீப்பின் மகனான இளவரசர் அக்பர் தம் தந்தைக்கு எதிராக போராடினார், அவருக்கு சாம்பாஜி பாதுகாப்பளித்தார்.[23][28] அதன்பின்னர், 1681ல், மராட்டிய சக்தியை முற்றிலுமாக அழிப்பதற்கான ஓர் ஒட்டுமொத்த யுத்தத்திற்காக அவுரங்காசீப்பும், அவர் இராணுவமும் டெக்கானை சுற்றி வளைத்தது, ராயல் கோர்ட் மொத்தமாக உள்நுழைந்தது. இது தான் 27 ஆண்டுகள் யுத்தத்தின் தொடக்கமாக இருந்தது, இதில் அவுரங்காசீப்பால் அதிகமாக சாதிக்க முடியவில்லை, ஆனால் பின்னர், சாம்பாஜி வஞ்சகமாக பிடிக்கப்பட்டார்.[23] இது மராட்டிய பேரரசை ஒரு குழப்பத்திற்குள் தள்ளியது, மொகலாய தாக்குதலின் தீவிரத்தால் ஆபத்துக்குள்ளான மராட்டிய தலைநகரம் ராய்கட்டில் இருந்து தெற்கில் இருந்த செஞ்சிக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானது, ஒரே முறையிலும், ஒட்டுமொத்தமாகவும், மராட்டிய அச்சுறுத்தலை அவுரங்காசீப்பின் புறநிலை வெளியேற்றி விட்டதாக சிறிது காலத்திற்கு தோன்றியது. எவ்வாறிருப்பினும், அதை தொடர்ந்து வந்த மாதங்களிலும், ஆண்டுகளிலும் யுத்தத்தின் போக்கு திரும்ப தொடங்கியது.[29]
 
பெரிய ஆனால் மிக பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்த மொகலாய அச்சுறுத்தலை சிறப்பாக சமாளித்த மராட்டியர்கள், அவுரங்காசீப்பை ஓர் இக்கட்டான நிலைக்கு கொண்டு வர போராடினார்கள். இரண்டாம் தசாப்தத்தின் இறுதியில், பரந்த வலிமையை ஈட்டிய மராட்டியர்கள், யுத்தத்தின் போக்கை மாற்ற தொடங்கினார்கள். சந்தாஜி கோர்பேட் மற்றும் தானாஜி ஜாதவ் போன்ற திறமையான மராட்டிய தளபதிகளால் நடத்தப்பட்ட பல தீவிர வீச்சுக்களால் மொகலாய படைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. அவர்கள் ஆரம்பகாலத்தில் சிவாஜி மகாராஜினால் துல்லியமாக பயன்படுத்தப்பட்ட மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட உத்திகளான மின்னல் வேக தாக்குதல்களையும், வேகமாக நகரும் தாக்குதல்களையும் துல்லியமாக நடத்தினார்கள்.[29] 1705ல் வெளிப்படையாக உடைந்து போன, தோல்வியுற்ற அவுரங்காசீப், டெக்கானில் இருந்து நோய்வாய்பட்டு விரட்டியடிக்கப்பட்டார். இறுதியான மொகலாயர்களின் வெளியேற்றம் அதற்கடுத்த இரண்டாண்டுகளுக்கு பின்னர் நடந்தது. அவர் மராட்டியர்களைத் தோற்கடிக்க மீதமிருந்த தம் பெரும்பாலான ஆதாரங்களையும், மனிதசக்தியையும் செலவிட்டு கொண்டிருந்தார், இறுதியில் ஒருகாலத்தில் வலிமைமிக்க மொகலாய சாம்ராஜ்ஜியமாக இருந்ததைக் கணிசமாக பலவீனமாக்கி முடிவுக்கு கொண்டு வந்தார். அவுரங்காசீப்பின் மரபில் வந்தவர்கள் அதற்கு பின்னர் ஒருபோதும் மராட்டியர்களுடன் போட்டியிடவில்லை, மேலும் சிவாஜி மகாராஜ் மறைந்து எழுபது ஆண்டுகளுக்கு பின்னர், இறுதியாக அவர்கள் மராட்டியர்களால் வென்றெடுக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டார்கள். 1751-52ல், மராட்டியர்களுக்கும், மொகலாயர்களுக்கும் இடையில் அஹம்தியா உடன்படிக்கை கையெழுத்தானது, அப்போது விரிந்து பரந்திருந்த மராட்டிய சாம்ராஜ்ஜியத்தின் பேஷ்வாவாகவும், ஆட்சிலாளராகவும் இருந்தவர் பாலாஜி பாஜிராவ்.[30] இந்த உடன்படிக்கையின்படி, தோற்றநிலையில் இந்திய முழுவதும் மராட்டியர்களின் மேலாதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது, மொகலாயர்கள் டெல்லி வரையில் மட்டும் நிறுத்தப்பட்டார்கள் (மொகலாயர்கள் டெல்லியின் நியமன தலைவர்களாக இருந்தார்கள்). பாலாஜி பாஜிராவிற்கு பின்னர், மராட்டிய சாம்ராஜ்ஜியம் மாதவ்ராவ் பேஷ்வாவினாலும், இரண்டு மராட்டிய சர்தார்களான சிந்தியா மற்றும் ஹோல்கர் ஆகியோரால் மேலும் பலப்படுத்தப்பட்டது.
 
இந்திய துணைகண்டத்தின் ஆக்கிரமிப்பிற்கான இந்த தசாப்தங்களில் நடந்த நீண்ட சகாப்த போராட்டங்களின் போது சுமார் 500,000 மொகலாயர்களும், 200,000 மராட்டியர்களும் இறந்திருக்க கூடும் என்று ஒரு குறிப்பிடத்தக்க இந்திய வரலாற்றாளரும், மேதையுமான சர் ஜாதுநாத் சர்கார் கணக்கிட்டார். சிவாஜி மகாராஜின் வீரதீரத்தின் சிறப்பு குறித்து எழுதிய மற்றொரு வரலாற்றாளரான பாம்பர் காஸ்கோய்னியின் கருத்துக்களை குறிப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். அவர் குறிப்பிட்டதாவது:

 

"He (Shivaji) taught the modern Hindus to rise to the full stature of their growth. So, when viewed with hindsight through twentieth century prizm, Aurangzeb on the one side and Shivaji on the other come to be seen as key figures in the development of India. What Shivaji began Gandhi could complete …… and what Aurangzeb stood for would lead to the establishment of the separate state of Pakistan." (The Great Moghuls, London: Constable

 
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 06:12:14 PM
மரபுரிமை
 
ஓர் ஏகாதிபத்திய சக்திக்கு எதிரான அவரின் போராட்டத்தினால், இரண்டு நூற்றாண்டுகளுக்கு பின்னரும் தொடர்ந்த இந்திய சுதந்திர போராட்டத்தில் சிவாஜி மகாராஜ் சுதந்திர போராட்டவீரர்களின் ஒரு முன்னுதாரணமாக இருந்தார். அவர் ஒரு சிறந்த அரசராக நினைவுகூறப்படுகிறார், மேலும் இந்திய வரலாற்றில் உள்ள ஆறு பொற்காலங்களில் ஒன்றாக அவர் ஆட்சி புரிந்த காலம் போற்றப்படுகிறது. சிவாஜி மகாராஜாவின் ஆட்சி ஒரு வீரம் மிகுந்த, முன்மாதிரியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக மஹாராஷ்டிராவின் பள்ளிக்கூட பாடப்புத்தகங்கள் விளக்குகின்றன, மேலும் அவர் நவீன மராட்டிய தேசத்தின் நிறுவுனர் என்றும் கருதப்படுகிறார்; ஒரு நீண்டகால மஹாராஷ்டியவாத அடையாளத்தை உருவாக்குவதிலும், அதை பலமான இராணுவ மற்றும் நியாய பாரம்பரியங்களுடன் ஒன்றி கலப்பதற்கும் அவர் கொள்கைகள் கருவியாக இருந்துள்ளன.
 
ஒரு பிராந்திய அரசியல் உட்கட்சியான சிவசேனா, சிவாஜி மகாராஜிடம் இருந்து முன்னுதாரங்களைப் பெற வேண்டும் என்று கோருகிறது. சிவாஜி மகாராஜை கௌரவிக்கும் வகையில், சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பொதுத்துறை கட்டிடங்களும் மற்றும் பிறயிடங்களும் பெயரிடப்பட்டது போன்றே, மும்பையில் உள்ள உலக பாரம்பரிய இடமான விக்டோரியா டெர்மினஸ் மற்றும் சஹார் சர்வதேச விமான நிலையம் இரண்டும் முறையே சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டன. புது டெல்லியில் உள்ள மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையத்திற்கும் சிவாஜி மகாராஜின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய கப்பற்படையின் தி ஸ்கூல் ஆப் நேவல் இன்ஜினியரிங் என்பது ஐஎன்எஸ் சிவாஜி என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
 
மும்பையில் உள்ள தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம் என்பது சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கரஹாலியா என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 06:19:06 PM
பிரபல கலாச்சாரத்தில் கருத்தோவியம்
 
பல கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், ஷாஹிர்கள் (கதைப்பாட்டு இயற்றுபவர்கள்), கவிஞர்கள் மற்றும் பேச்சாளர்கள் ஆகியோருக்கும் சிவாஜி மகாராஜ் அகத்தூண்டுதலின் ஓர் ஆதாரமாக இருக்கிறார்.
 திரைப்படம் 'ராஜா சிவாஜி' (மராட்டி): பால்ஜி பெண்டர்கரால் இயற்றப்பட்டது, மராட்டிய நடிகரான சந்த்ரகாந்த் மாண்டரேவினால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்பட்டது.
 'மராட்டா தித்துக்கா மேளவாவா' (மராட்டி)

 'கட் ஆலா பண் சிம்ஹ கேலா' (மராட்டி)
 'மீ சிவாஜி ராஜே போஸ்லே போல்தோ-ஆஹே' (மராட்டி): ஏப்ரல் 2009ல் வெளியானது. தற்போதைய காலத்தில் மும்பை நகரத்தில் சராசரி மராட்டிய மனிதன் ஒருவர் முகங்கொடுக்கும் பிரச்சனைகளை சிவாஜி மகாராஜ் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை இந்த படம் விளக்க முயற்சிக்கிறது. இந்த படத்தில் சிவாஜி மகாராஜின் கதாபாத்திரத்தில் மகேஷ் மன்ஜ்ரேக்கர் நடித்திருந்தார்.
 இலக்கியம் 'ஸ்ரீமான் யோகி': ரஞ்சித் தேசாயினால் எழுதப்பட்ட சிவாஜி மகாராஜ் பற்றிய நாவல்

 ராஜா சிவசத்ரபதி: அவர் மனைவி பற்றி பாபாசாகேப் புரந்தரேவால் எழுதப்பட்ட வரலாறு, இது பின்னர் ஜாணத்தா ராஜா (जाणता राजा) என்று வெளியில் கொண்டு வரப்பட்டது, சிவாஜி மகாராஜாவின் வாழ்க்கை பற்றிய ஓர் இசை நாடகம்

 கவிதை மற்றும் இசை  
கவி பூஷனினால் எழுதப்பட்ட 'சிவாஜி பூஷன்' (ஹிந்தி)
 'வேடாத் மராட்டே வீர தௌடலே ஸாத்': சிவாஜி மகாராஜின் தளபதி பிரதாப்ராவ் குஜர் மீது குசுமக்ராஜால் எழுதப்பட்ட கவிதைகள், இது லதா மங்கேஷ்கர் மற்றும் ஹிருதயநாத் மங்கேஷ்கரால் பாடப்பட்டது.
 துளசிதாஸ் மற்றும் அகன்தாஸின் காவியங்கள்

 திரையரங்கு '

ராய்கடலா ஜேம்வ்ஹா ஜாக் யேத்தே' (ராய்கட் விழிப்புரும் போது): சிவாஜி மகாராஜிற்கும், சாம்பாஜிக்கு இடையிலான நெருங்கிய உறவின் அடிப்படையில் மராட்டிய நாடக ஆசிரியர் வசந்த் கனேட்கரால் எழுதப்பட்டது.
 தொலைக்காட்சி ராஜா சிவ்சத்ரபதி: ஸ்டார் இந்தியா நெட்வொர்க்கின் ஒரு மராட்டிய சேனலான ஸ்டார் பிராவாஹில் தொலைக்காட்சி நிகழ்ச்சி. நவம்பர் 2008ல் தொடங்கிய இந்த தொடர், ஒரு மணி நேர தொடராக 100 பகுதிகளுக்கும் மேல் ஒளிப்பரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் ராஜா சிவாஜியின் கதாபாத்திரம் டாக்டர். அமோல் கோல்ஹேவினால் நடிக்கப்பட்டது
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 06:23:08 PM
சகாக்கள்
 
சிவாஜி மகாராஜின் நெருங்கிய சகாக்களில் சிலர் அவரின் முதன்மை இராணுவ தலைவர்களாவர், அவருடன் சேர்ந்து நாட்டுப்புறவியலில் இறங்கி இருந்தார். இவர்களில் சிலர்: அஜீத்சிங் பாய்குடே தேஷ்முக், அண்தாஜி கொண்டே-தேஷ்முக், பாஜி ஜீதே, பாஜி பாசால்கார், பாஜி பிரபு தேஷ்பாண்டே, பாலாஜி ஆவ்ஜீ சிட்னிஸ், பாபுஜி முட்கல் தேஷ்பாண்டே, சின்மனாஜி தேஷ்பாண்டே, தானாஜி ஜாதவ், பிரன்கோஜி நர்சாலா, புல்லாஜி பிரபு தேஷ்பாண்டே, கங்காதர் பாண்ட், கோடாஜி, ஜக்தாப்-படேல், கோமாஜி நாயக், ஹைதர் அலி கோஹரி, ஹம்பிர்ராவ் மோஹித், ஹிரோஜி பார்ஜாண்ட், ஜிவா மஹாலா, கன்ஹோஜி ஜீதே தேஷ்முக், காவாஜி கொண்டல்கர், கேசோ நாராயண் தேஷ்பாண்டே, கொண்டாஜி பார்ஜாண்ட், லஷ்மண்ராவ் பாய்குடே தேஷ்முக், லே படேல் கோலி, முரார்பாஜி தேஷ்பாண்டே, நீல்கண்த்ராவ் சூர்நாயக், நேதாஜி பால்கர், பிரதாப்ராவ் குஜார், ராமோஜி திஷ்மாலே தேஷ்முக், ரங்கோ நாராயண் ஆர்பே சர்போட்கார், சம்பாஜி காவ்ஜி கொண்டல்கார், சண்தாஜி கோர்பாடே, சூர்யாஜி காகடே, தானாஜி மலூசரே, யேசாஜி தேபாடே, யேசாஜி கான்க்
 
சிவாஜி மகாராஜின் கீழிருந்த திறமையான மற்றும் துணிவான மனிதர்களில் பலர் ஆட்சியில் மேல் நிலைக்கு வந்தார்கள். அவர்கள் சிவாஜியின் நோக்கத்தை முன்னெடுத்து சென்றார்கள் என்பதுடன் 27 ஆண்டுகள் யுத்தத்தில் மொகலாயர்களின் தோல்வியை உறுதியளித்தார்கள். ராமச்சந்திரபாண்ட் அமத்தியா, சண்தாஜி கோர்பாண்டே, தானாஜி ஜாதாவ், கண்டேராவ் தாபாதே, பார்சோஜி போஸ்லே, ஹார்ஜி ராஜே மஹாதிக் மற்றும் கன்ஹோஜி ஆங்க்ரே ஆகியோர் இதில் உள்ளடங்குவர்.
Title: Re: சிவாஜி (பேரரசர்)
Post by: Global Angel on February 15, 2012, 06:24:58 PM
சமகால வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள்
 
சிவாஜி மகாராஜின் காலத்தில் இந்தியாவிற்கு வந்த பல வெளிநாட்டு பயணிகள் அவரைப் பற்றி எழுதினர்.
 1670வாக்கில் ஒரு பிரெஞ்ச் பயணியான அப்பே கர்ரே இந்தியாவிற்கு வருகை தந்தார்; அவரின் குறிப்புகள் வோயேஜ் திஸ் இன்டிஸ் ஓரியண்டிலிஆஸ் மிலே டி புளூசியர்ஸ் ஹிஸ்ட்ரீஸ் கூரியூசியஸ் என்று 1699ல் பாரீசில் வெளியிடப்பட்டது.சில குறிப்புகள்:

 



 

"Hardly had he won a battle or taken to town in one end of the kingdom than he was at the other extremity causing havoc everywhere and surprising important places. To this quickness of movement he added, like Julius Caesar, a clemency and bounty that won him the hearts of those his arms had worsted." "In his courage and rapidity he does not ill resemble the king of Sweden, Gustavus Adolphus."

 

 
மொகலாய இந்தியாவிற்கு மேற்கொண்ட தம் பயணங்கள் குறித்து எழுதிய பிரெஞ்ச் பயணியான பிரான்கோஸ் பெர்னர் குறிப்பிட்டதாவது:
 



 

"I forgot to mention that during pillage of Sourate, Seva-ji, the Holy Seva-ji! Respected the habitation of the reverend father Ambrose, the Capuchin missionary. 'The Frankish Padres are good men', he said 'and shall not be attacked.' He spared also the house of a deceased Delale or Gentile broker, of the Dutch, because assured that he had been very charitable while alive