FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on March 27, 2017, 11:55:24 AM
-
உண்ணும் ஒவ்வோர் அரிசியிலும் உண்ணுபவர் பெயர்
இருக்குமோ இல்லையோ நிச்சயம் உன் பெயர் இருக்குமே
எனது அருமை விவசாயியே !!
மேற்கத்திய கலாச்சாரா உணவை உண்டு பீற்றி கொள்ளும்
நாம்- ஏனோ நம் பாவம் விவாசியை மறைமுகமாய் கொல்றோம்?!!
விவசாயி கடனும் சரி அதன் தள்ளுபடியும் சரி பயன் பெறுவது
விவசாயி அல்ல பண முதலைகள் மட்டுமே !
தரமான உணவை ஏற்றுமதி செய்து விட்டு கழிவுகளை இறக்குமதி
செய்யும் நம் அரசியல் வாதியின் பிடியில் அழிகின்றான் அவன் !
அவன் போராடுவது தன் வம்சம் செழிக்க அல்ல
நம் வம்சம் ஆரோக்கியமாய் வாழவே
ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் போதும்
அவனை நினை !
அவனை நீ புறம் தள்ளினால் -நீ இறக்கும் போது
வாய்க்கரிசி போட கூட அரிசி இருக்காது
-----சும்மா --------
பி.கு:- சிறந்த படைப்புகள் இருக்கும் ஓவியம் உயிராகிறது
நிகழ்ச்சியில் என் கிறுக்கல் வேண்டாம் என்று எண்ணியே
இங்கு பதிவிடுகிறேன் ...நன்றி
-
சும்மா சகோ...
கவிதை அழகு
கவிதை நிதானம்
கவிதை தெளிவு
உங்கள் பின்குறிப்பில்
எனக்கு உடன்பாடு இல்லை
வருந்துகின்றேன்... நன்றி சகோ.
-
Chuma na azhagana kavithai! Nane thuninthu ennoda kavithayai podum pothu neengal OU vil ungal kavithaiyai podathathu kavalaiyaga ullathu :(
-
நன்றிகள் பல சரிதன் சகோ
உங்களை போல உள்ளவர்களின் எழுத்துக்களுக்கு முன் எனது
எழுத்து கிறுக்கல் தானே
நான் எழுதுவது கவிதை அல்ல என் எண்ணங்களின் வெளிப்பாடே
ஆகும்
சிறப்பாக எழுதுபவர்களுக்கு வழி விடலாமே என்று தான் என் முடிவு
வாழ்த்துக்கள் சகோ
-
விபு சகோ
ஆழமான சொற்கள், அழகான கவிதை
வாழ்த்துக்கள்
-
சகோ.....
இப்படியான வார்த்தைகள்
வேண்டாம்.....
நிறையவே தெளிந்திட தேவை
உண்டு.....
தாய் பிள்ளையை வாழ்த்தும்
பகட்டு பெருமையாக ஏற்கின்றேன்.....
உங்கள் கவிதையை நிகழ்ச்சி
திடலில் கண்டதில் மகிழ்ச்சி.....