FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 26, 2017, 01:38:55 PM
-
வெளியேறுவதெல்லாம் தொலைந்து போகின்றன
பூவில் இருந்து
மனம்
புல்லாங்குழலில் இருந்து
இசை
உன்னில் இருந்து
நான்.......
காதல் ஒரு பரிதாபமான
சூதாட்டம்
உன்னை அடைய வேண்டுமானால்
என்னை இழக்க வேண்டும் .........
உன் கண்களை
மீன் என்கிறார்கள்
மீன் வலை வீசுகிறதே .......
மனமே!!
நீ ஒரு மாயவலை
அதில் விழும் சிலந்தி அல்ல
துடிக்கிறது - வலை தான்
சிலந்தியை எண்ணி துடிக்கிறது ......
-
தமிழன் சகோ.....
ஒருவருக்காகச் செய்யும் தியாகத்தை.....
அவர்மேல் காட்டும் அன்பை.....
உரியவர் புரிந்திடா விடில்.....
வலிகள்தான் எஞ்சும்.....
வாழ்த்துக்கள் சகோதரா.....