FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 15, 2012, 07:52:45 AM
-
அடிபெண்ணே !
நீ என்ன விழாகால சிறப்புச்சலுகை பொருளா ?
உன் குரல் வரம் வாங்கினேன்
தனிமையின் இனிமை இலவசம்
உன் நினைவை வாங்கினேன்
கொஞ்சும் கனவுகள் இலவசம்
உன் கவின், கவிதை வாங்கினேன்
கட்டுகடங்கா கற்பனைகள் இலவசம்
என்னவிளையானாலும்
உன் இதயத்தை வாங்க தயார் ...
இலவசமாய் உன் காதல் கிடைக்குமா ?
-
கவிதை நன்று ஆசை... இலவசமாக கிடைக்கும் பொருளுக்கு மதிப்பு கம்மியாம் .. அங்கு எப்டி ?
-
இலவசம் என்றால் அத்துணை இளக்காரமா ?
இலவசம் என்றால் அத்துணை இழிவா?
இலவசத்தில் தான் எத்துனை பரவசம்
இலவசத்தில் தான் எத்துனை சந்தோஷம்
தத்துவ ஞானிகள் பலர் உதிர்த்து, வடித்து விட்டுசென்ற
முத்து முத்து தத்துவங்கள் இலவசம் இல்லையா ?
பூஉலகில் ஜீவனெல்லாம் ஜீவிதமாய் ஜீவிக்க
சுவாசிக்கும் சுவாசக்காற்று இலவசம் இல்லையா ?
இலவசம் அதன் உண்மை மகத்துவம் அறியவேண்டுமா ?
தவமிருக்க தேவையில்லை ,வரம் பெற தேவையில்லை
தமிழகத்தில் குடும்ப அட்டையும் ,ஓட்டுரிமையும்
பெற்ற வாக்காளராய் இருந்தாலே போதும் ...
மண்ணில் ஓர் உயிராய் பிறப்பதற்கு
நாம் செய்த முதலீடு என்ன ?
நாம் செய்த செலவு தான் என்ன ??
பதில் தேவையில்லாத கேள்வி இது
ஆம் , இதுவும் இலவசம் ..... :) :)
-
மண்ணில் ஓர் உயிராய் பிறப்பதற்கு
நாம் செய்த முதலீடு என்ன ?
நாம் செய்த செலவு தான் என்ன ??
nam thaai thanthain muthaleedu thane nama?
ipo ellam nama boomiku vara romba selavu aguthe kavignare ithu kalli kalam aalava
-
நான் கோரியது ,நம் முதலீடு என்ன??
நம் தாய், தந்தையாரின் அல்ல
தவிர அந்த முதலீடு கதை எல்லாம்
எனை போன்ற சாபகேடுகளுக்கு தான்
தவமின்றி கிடைத்த வாரங்களுக்கு அல்ல ....
-
haha kavignare niga yen saaba kedu ungaluku kadavul ena arumaiyana kavithai thiran koduthu irukar niga epdi saaba kedu aga mudium
-
நாம் செய்த முதலீடு பாவம்