FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on February 14, 2012, 09:31:43 PM
-
உன் நினைவுகளுக்குத்தான்
எத்துனை வலிமையடி
தனிமையில் இருந்தாலும்
கூட்டத்தில் இருந்தாலும்
குண்டுகட்டாய் தூக்கி சென்று
ஆட்கடத்தல் புரிகின்றது
தனக்கு துணையாக
என் நினைவை ...
-
kavithai nalaruku ajith
kaathala ithelam sagajam thaaney
-
kavignare ungal kavi thiranai sola varthaiye illai ponga rombaaa super
-
கவிதை நன்று ஆசை... நினைவுகளின் தாக்கம் அவளவு ஆழமானது
-
அருமையான கடத்தல்
கற்பனைக்கும் எட்டா கடத்தல்
தாங்கள் கடத்தியவரா
கடத்தப்பட்டவரா நண்பா
அன்பு நண்பன்
சுதர்சன்
-
தனியான தன் நினைவிற்கு
துணையாக என் நினைவு
வேண்டும் என்றே(றோ) என்னவோ ??
காற்றாற கிடத்தி இருந்த
என் நினைவு தனை கடத்தி
சென்றுவிட்டாள் எனை படுத்தி ...
கடத்தலுக்கான உண்மை
காரணம் தெரிந்ததனால்
ஆட்கடத்தல் என்பதை திருத்தி
தானம் என்று அறிவிக்கின்றேன் ...
தானம் என்று ஆன பின்னே
கடத்தியவர் , கடத்தபட்டவர்
எனும் சர்ச்சை எதற்கு ???