FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: JeSiNa on March 20, 2017, 05:17:32 PM

Title: சிங்க தோல் போர்த்திய கழுத்தை
Post by: JeSiNa on March 20, 2017, 05:17:32 PM
சிங்கத் தோல் போர்த்திய கழுதை

(The Donkey in The Lion's Skin)

அது ஒரு அடர்ந்த காடு. பக்கத்துக் கிராமத்திலிருந்து கழுதை ஒன்று அந்தக் காட்டிற்கு வழி மாறி வந்தது. வரும் வழியில் பல மிருகங்கள் பயத்துடன் ஓடி வந்தன, அதில் ஒரு மானும் இருந்தது.

அந்த கழுதை மானிடம், “ஏன் அனைவரும் இப்படி வேகமாக பயத்துடன் ஓடி செல்கின்றன?” என்று கேட்டது. அதற்கு மானோ, “இந்த காட்டில் சிங்கம் ஒன்று உள்ளது. அதைக்கண்டு தான் நாங்கள் அனைவரும் இப்படி ஓடுகின்றோம்.” என்று கூறிவிட்டுச் சென்றது. கழுதையும் சிங்கத்தின் வீரத்தை நினைத்துகொண்டே காட்டிற்குள்ளே சென்றது. சிறிது துரம் கடந்து சென்றது களைபடைந்த கழுதை ஒரு ஓடையைப் பார்த்தது.

கழுத்தையும் தண்ணீர் குடிக்க அந்த ஓடைக்கு அருகில் சென்றதும் அங்கே சில வேட்டைக்காரர்கள் தாங்கள் வேட்டையாடிய மான், புலி, சிங்கம் போன்ற மிருகங்களின் தோலை அங்கிருந்தப் பாறைகள் மேல் உலர வைத்திருந்தனர்.

அதைப் பார்த்ததும் கழுதைக்கு ஒரு ஆசை வந்தது. உடனே ஒரு சிங்கத்தின் தோலை எடுத்துத் தன் உடம்பின் மேல் போர்த்திக்கொண்டது. அந்த கழுத்தையும் பார்பதற்க்கு சிங்கம் போலவே இருந்ததனால், மற்ற மிருகங்களும் கழுதைப் பார்த்துப் பயந்து ஒதுங்கிப் சென்றன.

மிருகங்கள் எல்லாம் தன்னைப் பார்த்துப் பயந்து மரியாதையாக வழிக் கொடுத்து ஒதுங்கிப் போனதைப் பார்த்து கழுதைக்கு, கர்வம் தலைக்கேறியது.

சிறிது தூரம் அந்த கழுதை அந்த காட்டில் உலாவி கொண்டிருந்தது. செல்லும் வழியில் நரி ஒன்றினை அந்த கழுதை பார்த்தது.

சரி இந்த நரியையும் பயமுறுத்தலாம் என்று நினைத்து, நரியின் அருகில் சென்றது. நரியும் பயத்தில் நடுங்கிக்கொண்டே “சிங்க ராஜ, நான் தெரியாமல் இந்த பக்கம் வந்துவிட்டேன் இனி நான் இந்த காட்டிற்கே வர மாட்டேன்”, என்று கழுதையிடம் கூறியது.

கழுதையும் சிங்கம் போல கர்ஜிக்கணும்னு நினைச்சு "ங்கெ ங்கெ"ன்னு கத்தியது. அதோட குரல் அது கழுதைன்னு நரிக்கு காட்டிக் கொடுத்தது. அதன் பிறகு அந்த கழுதைய நரி மதிக்கவேயில்லை.

“எனக்கு கோவம் வருவதற்குள் இங்கிருந்து சென்றுவிடு”, என்றது கழுதை.

அதற்கு நரியோ, கழுதையைப் பார்த்து “முடியாது” என்று பதில் கூறியது. மேலும் நரி கழுதையிடம், “நீ சிங்கம் போன்று வேஷம் போட்டாலும் உன்னுடைய உண்மையான குணத்தை உன்னால் மாற்ற முடியாது.” என்று கூறியது.

கழுத்தையும் வெட்கித் தலைகுனிந்தது.




நீதி:
நாம் நாமாக இருக்கும் போதுதான் மதிப்படைகிறோம். அடுத்தவர் போல வேடம் போட்டாலோ அல்லது அவரைப் போல நடந்து கொள்வதாலோ அவமானம்தான் மிஞ்சும்.


Title: Re: சிங்க தூள் போர்த்திய கழுத்தை
Post by: LoLiTa on March 21, 2017, 10:04:41 PM


Kaluthaiku tevethan! Super moral jesi baby! ♡♡ post e(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl8.glitter-graphics.net%2Fpub%2F669%2F669138jd5pwxzwpn.gif&hash=98b4e9083f4d2f148cb79b90ba2682711668f4d8) (http://www.glitter-graphics.com)s
Title: Re: சிங்க தூள் போர்த்திய கழுத்தை
Post by: JeSiNa on March 21, 2017, 10:17:51 PM
Thnx loli mchi :)
Title: சிங்க தோல் போர்த்திய கழுத்தை
Post by: JeSiNa on March 22, 2017, 04:49:22 PM
Sry frdz thalaipu sothapiruchi :P
Title: Re: சிங்க தூள் போர்த்திய கழுத்தை
Post by: LoLiTa on March 22, 2017, 06:00:10 PM
jesi machi na pathute! apove nanece enada singa tul nu irke nu :p (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl7.glitter-graphics.net%2Fpub%2F89%2F89807xqbge31kby.gif&hash=0c0741b4585f8361ac68733ed34837d582494316) (http://www.glitter-graphics.com)
Title: Re: சிங்க தூள் போர்த்திய கழுத்தை
Post by: thamilan on March 23, 2017, 10:43:22 PM
உங்க title wrong  ஜெஸினா, அது சிங்கத் தோல் தூள்
இல்ல. உள்ள சரியாய் எழுதிட்டு titleல பிழை விட்டுடீங்க
 
Title: Re: சிங்க தூள் போர்த்திய கழுத்தை
Post by: JeSiNa on March 24, 2017, 06:22:03 PM
Ama tamilan.. Sariya kavanikala.. Sry :'(
Title: Re: சிங்க தோல் போர்த்திய கழுத்தை
Post by: VipurThi on March 30, 2017, 01:26:12 PM
Chllm un arivu stock la ithellam enga vachiruntha? :) super chllm :-*
Title: Re: சிங்க தோல் போர்த்திய கழுத்தை
Post by: SarithaN on April 14, 2017, 05:24:17 PM
மனிதன் தான் யாரென
அறிந்திடல் வேண்டும்.....

தன்னிடம் உள்ளது என்னவென
உணர்ந்திடல் வேண்டும்.....

அறிந்து உணர்ந்து வாழ்வை வாழ்கையில்
மேன்மைகள் நிலைபெறும்.....

வேசங்கள் நிலைப்பதில்லை.....

நன்றி தங்கச்சி.....