FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 17, 2017, 11:24:39 PM
-
பறவைகளுக்கு சிறகு
முளைக்கும் வரை
மிருகங்களுக்கு எழுந்து
நடக்கும் வரை தான்
துணை தேவை
மனிதனுக்கு பிறந்து
வளர்ந்து பெரியவனாகிய பிறகும்
பெற்றோர் துணை எதற்கு!!!
நாம் எதிர்பார்க்கிறோம்
நம் பெற்றோர்களை
அவர்கள் வயதாகும் வரை......
முதுமை அடைந்து
நடை தளர்ந்ததும்
அவர்களே நமக்கு பாரமாகிப் போவதும் ஏன்?......
சின்ன உதவி செய்தவனுக்கு கூட
ஆயிரம் நன்றிகள் சொல்கிறோம்
நம்மை பெற்று வளர்த்து
உலகில் நல்ல மனிதனாக
வழி செய்த நம் பெற்றோருக்கு
நம் வாழ் முழுவதும்
நன்றி சொல்ல வேண்டாமா?......
இன்று நம் பெற்றோருக்கு
நல்ல பிள்ளைகளாக இல்லாத நாம்
நாளை நம் பிள்ளைகளுக்கு
எப்படி நல்ல பெற்றோர்களாக
இருக்கப் போகிறோம்?.......
உன்னால் இன்று
உன் பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம்
நாளை உன் பிள்ளைகளால்
உனக்கு முதியோர் இல்லம்
இதை மறந்தது விடாதே
உன் பிள்ளைகளும்
உன்னை போலத்தானே இருப்பார்கள்!!!!!!
-
கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள்
-
வணக்கம்
உலகில் மலிந்து போன கொடுமையிது
குழந்தை பிள்ளை யுவதி
அம்மா பாட்டி!
குழந்தை பிள்ளை இளைஞன்
தந்தை பாட்டன் என சுழலும்
ஒரு சக்கரம் இந்த வாழ்க்கை.
எவருமே தப்பிவிட முடியாது
அனைவருமே உணரல் நன்று!
-
Tamil na unmayaga ellarukum thelivupadutha pada vendiya nalla karuth :) indru unnal un petroruku enil naalai un pillaiyal unaku enpathai unaraathavargaluku iruthiyil minchuvathu vali matume :) super na :)
-
பெற்றோர்களை நினைக்கையில் கண்ணில் கண்ணீர்
வாழும் தெய்வங்கள் ...நாம் தினமும் பூஜை செய்யாவிடினும்
அலட்சியம் செய்யாது இருங்கள் ...அது போதும் அவர்கள் மனம் குளிர !
வாழ்த்துக்கள் சகோ உங்கள் சிந்தனைக்கு
-
indha kavidhai padithathum enakku appa nyabagam than varugindradhu. Appavin amma vayathagiya pin romba tolla pannanga muthumai yin karamaga irkalam. anaivarum paaatiyai muthiyor illathil sethuvida solliyum en appa paatiye vitile veithu partukitar <3
muthiyor ilathil irkum muthiyor nanace kavalayagathan irku. paati thata pasam kidaiktha childhood oru childhood eh illanu tha na nanakren.
tamilna arumayana kavidhai. naraya arthangal irku. vatukal anna..(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl7.glitter-graphics.net%2Fpub%2F780%2F780357m6550kp2fn.gif&hash=dea2394ac015377421b38f7435fcdf2387fbf457) (http://www.glitter-graphics.com)