FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 11, 2017, 05:53:51 PM
-
அழகில் மயங்கி அறிவு மழுங்கி
ஒரு நிமிடத்து உணர்வு தான்
காதல்
அழகே இல்லாத குழந்தையை
அழகனாக நினைத்து
அரவணைப்பது தான் பாசம்
என்றும் அறியாத எதுவும் செய்திராத ஒருவனை
கண்டதும் வரும் காதல் பெரிதா
தன் உதிரத்தை உணவாக்கி
உடலை எருவாக்கி
தன்னை உருக்கி
உன்னை உருவாக்கிய பாசம் பெரிதா
காதல் இனிமையானது தான்
காதலிக்கும் வரை
பாசம் தெய்வீகமானது - நம்
உயிர் இருக்கும் வரை
காதல் சிந்திக்க விடுவதில்லை
சிந்திக்கத் தெரிந்தவன்
காதலைப் பற்றி சிந்திப்பதில்லை
-
Affection (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fkidtokid.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F11%2F2-Facebook-icon.png&hash=f951a4998d45189aedb2a896ccb10d896b2eedcc)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl6.glitter-graphics.net%2Fpub%2F641%2F641346frr7zb1zxw.gif&hash=a8e691f40ccbdfd13415cea88c81726fd38c98a2) (http://www.glitter-graphics.com)
-
அருமை தமிழன் சகோ. என்னை ஈர்த்தது
காதல் இனிமையானது தான்
காதலிக்கும் வரை
பாசம் தெய்வீகமானது - நம்
உயிர் இருக்கும் வரை
காதல் சிந்திக்க விடுவதில்லை
சிந்திக்கத் தெரிந்தவன்
காதலைப் பற்றி சிந்திப்பதில்லை
சூப்பர் சகோ .வாழ்த்துக்கள் . உங்களை போல் எழுத இன்னும் முயற்சி செய்யணும் . பாதியிலே தமிழ் படிக்கச் மறந்து என் குற்றம். வருந்துகிறேன். முயற்சிக்கிறேன் .நன்றி
-
காதலை உணரா
காதலரின்.....
ஆழ்மனத்தின் விம்பம்.....
உண்மை சொல்லிய கவிதை