FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ChuMMa on March 10, 2017, 11:39:11 AM
-
நினைக்கும் நேரத்தில்
நினைவுகளை போல்
நெஞ்சோடு அள்ளிக்கொள்ள
நீயில்லை,..
கனக்கும் மனதின்
கண்ணீரை கண்டு
கைத்துடைக்க
நீயில்லை..
துடிக்கும் நெஞ்சத்தின்
துயரம் கண்டு என்னை
துயில வைக்க
நீயில்லை,..
ஆர்ப்பரிக்கும் அன்பை
அளவோடு பகிர்ந்துகொண்டு
அளவில்லா இன்பம் காண
நீயில்லை..
சிதறிடும் சிரிப்பொலியை
சிம்பனியாய் செய்திருக்க
நீயில்லை..
பதித்திடும் பாதங்களையெல்லாம்
பல்லவன் போல் சிற்பித்திருக்க
நீயில்லை..
வழிந்திடும் வியர்வைகளை
உருகிடும் பனித்துளியாய்
பார்த்திருக்க
நீயில்லை..
உதிர்ந்திடும் மலர்களில்
ஒன்றை எடுத்து
நாட்குறிப்பின் நடுவில்வைத்து
நாளெல்லாம் ரசித்திருக்க
நீயில்லை..
நழுவிடும் ஆடைகளையெல்லாம்
தழுவிடும் நிலவாய் எண்ணி
தாங்கி நின்றிட
நீயில்லை..
நீயில்லை நிழலாக..
நிஜம் மட்டும் நினைவாக..
காதல் உண்டு கண்ணோடு..
கண்ணீர் மட்டும் என்னோடு...
-
வணக்கம் சும்மா சும்மா , அழகிய வரிகள், தொடரட்டும்
உங்க கவி.. நன்றி
-
நன்றிகள் பல சகோ
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl5.glitter-graphics.net%2Fpub%2F505%2F505085u52zlwv47j.gif&hash=b1936dad9c9ea808f65b9045e863e381698481c3) (http://www.glitter-graphics.com)Nee illai nu kavidhai azhaga solirkinga cumma na!
-
படித்தேன்....சுவைத்தேன்.....மலைத்தேன்....
வாழ்த்துக்கள்.
-
நன்றிகள் பல சகோ
-
kalakunga bro :) kavithai super:) keep gng ;D
-
நன்றிகள் பல சகோ
-
சகோ...
காதலிடம் முதலில்
கற்றிட வேண்டிய
பாடமே கண்ணீர்தானே
காதலும் கண்ணீரும்
ஒட்டி பிறந்த இரட்டை
பிறவிகளாம்..... தெரியாதா...
ஒன்றை ஒன்று பிரியாதாம்.....
அழகிய ஏக்கங்கள்
நீதியான ஆசைகள்
அன்பான உணர்வுகள்
இன்பமான ஓர் கவிதை
காதலித்தால் அழுகை
இலவசம் சகோ :) :) :)
கண்களில் உண்டெனும்
காதல்.....
நெஞ்சத்தில் நிறைந்து
இன்பமான வாழ்வுகாண
வாழ்த்துகின்றேன் கவிதையை....