FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 13, 2012, 08:27:56 PM
-
மனிதர்களின் சுவை நரம்புகளை தூண்டி பசி உணர்வை அதிகரிக்கச் செய்வதில் போட்டோக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
பசியே எடுக்க மாட்டேங்குது என்று புலம்புவது பலரது வாடிக்கை. அவர்கள் உடனடியாக வகை வகையாக சமைத்து வைத்த போட்டோக்களை பார்த்தால் அவர்களின் சுவை நரம்புகளில் நீர் ஊறுமாம். இது பசி உணர்வை அதிகரிக்கச் செய்யுமாம். ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர்.
பசியை உணர்த்தும் புகைப்படங்கள்
ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களுக்கு உணவுகளின் போட்டோக்களை காண்பித்தனர். அவர்கள் வயிறு பசியை உணர்த்தியது. மூளையானது உணவு உட்கொள்ளுமாறு தூண்டியது கண்டறியப்பட்டது. அதனால் உணவு மற்றும் பெரும்பாலான ஹோட்டல்களின் விளம்பரங்களில் உணவு வகைகள் குறித்த போட்டோக்கள் வெளியிடப்படுகின்றன.
சுவை நரம்புகள் தூண்டுதல்
மனிதர்களின் பசி உணர்வோடு தொடர்புடைய ஹார்மோன்களை தூண்டுவதில் இந்த போட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனவாம். போட்டோக்களை பார்த்த உடன் பசி எடுத்து உணவை நன்றாக சாப்பிடுகின்றனராம். இந்த சைக்காலஜி தெரிந்துதான் நம் ஊர் ஹோட்டல்களில் வித விதமாக சமைத்த அயிட்டங்களை போட்டோ எடுத்து மாட்டி வைத்துள்ளனர்.
-
நானும் இனிமேல் பசி இல்லாத நேரங்களில் புகைப்படங்களை பார்த்து உணவு அருந்த முயற்சி செய்கிறேன் ரெமோ!
நன்றி!
-
try panu mams
nanum ethavathu party na ithai try pana poren