FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: RemO on February 13, 2012, 08:23:35 PM

Title: 'செல்லங்கள்' குண்டானால் ஆபத்து!
Post by: RemO on February 13, 2012, 08:23:35 PM
மனிதர்களின் மிக முக்கிய நண்பர்களாக திகழ்பவை நாய்கள். அவை நன்றியுள்ள பிராணியாக போற்றப்படுகின்றன. பெரும்பாலான நாய்கள் அதிக உடல் எடையினால் பாதிக்கப்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் 40 சதவிகித செல்லப்பிராணிகள் அதீத எடை அதிகரிப்பினால் இதயநோய்களுக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். செல்லப்பிராணிகளுக்கான உணவு விற்பனை மையங்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. எனவே நாய்களின் ஆரோக்கியம் குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றினால் அவற்றின் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் ஆரோக்கிய கேடு ஏற்படாது.

காலையில் நடை பயிற்சி

தினசரி வாக்கிங் செல்லவேண்டும் என்று தற்போது மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். நாம் நடக்கும் போது கூடவே நம் செல்லப்பிராணிகளையும் வாக்கிங் கூட்டிச் செல்வது அதன் ஆரோக்கியத்திற்கு ஏற்றது. வீட்டிலேயே அடைந்து கிடப்பதை விட வெளியில் சென்றுவருவதை பெரும்பாலான பிராணிகள் விரும்புகின்றன. நாமும் மெதுவாக ஓடி செல்லப்பிராணிகளையும் ஜாகிங் அழைத்துச் செல்லலாம். தினசரி 20 நிமிடங்கள் ஜாகிங் அழைத்துச் செல்வது மிகச்சிறந்த பயிற்சி, உடல் எடை அதிகரிக்காது.

இசையும், நடனமும்

அதிர அதிர இசை கேட்பது நமக்கு மட்டும் கொண்டாட்டமல்ல நாய்களும் இதுமாதிரி இசையை விரும்புகின்றன. எனவே இசையை அலறவிட்டு நாய்களை நடனமாட பயிற்சி அளிப்பது ஒரு வித உடற்பயிற்சி போல ஆகும். இதனால் அவற்றின் உடலில் உள்ள அதிக கொழுப்புகள் கரையும், அவற்றின் தசைகள் வலுவடையும்.

நீச்சல் பயிற்சி

நீச்சல் மனிதர்களுக்கு மட்டுமல்ல நாய்களுக்கும் சிறந்த பயிற்சி. அவற்றின் தசைகள் வலுவடையும், இதயம், நுரையீரல் நோய்கள் எதுவும் நாய்களை தாக்காது. நாய்களும் ஆர்வமுடன் நீச்சல் கற்றுக்கொள்ளும். சின்ன சின்ன விளையாட்டு பொம்மைகளை போட்டு அவற்றை ஓடவிட்டு எடுக்கச் சொல்லலாம். நாய்கள் எடை அதிகரிக்காது. நாய்களுடன் பந்துகளை தூக்கிப்போட்டு விளையாடலாம் அதுவும் ஒரு சிறந்த பயிற்சியே.

அளவோட இருக்கலாம்

நாய்களின் உடலை இளைக்க வைக்கிறேன் பேர்வழி என்று அவற்றிர்க்கு அதிக பயிற்சி அளிக்கக் கூடாது. சிறிது தூரம் ஓடவிட்டு அவற்றின் மூச்சு எப்படி இருக்கிறது என்று பரிசோதனை செய்த பின்பு அடுத்த பயிற்சியை தொடங்கவேண்டும். ஓவராக பயிற்சியில் ஈடுபடுத்துவது நாய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்றும் எச்சரிக்கின்றனர் கால்நடை மருத்துவர்கள்.