FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: RemO on February 13, 2012, 08:18:38 PM

Title: சூடா குடிங்க! ஜலதோஷம் போயே போச்சு!!
Post by: RemO on February 13, 2012, 08:18:38 PM
மழைக்காலமோ, குளிர்காலமோ ஜலதோஷம் பிடித்து ஒரு வழியாக்கிவிடும். எதை சாப்பிட்டாலும் ருசியே இருக்காது. காரணம் ஜலதோஷத்தினால் மூக்கடைப்பு ஏற்படுவதோடு சுவை அறிய முடியாத அளவிற்கு வாய் கசந்துவிடும். எனவே ஜலதோஷத்தினால் சளித் தொந்தரவு இருக்கிறதா? சூடா குடிங்க சளி காணமல் போய்விடும் என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்

ஜலதோஷம் மற்றும் அது சார்ந்த தொந்தரவுகள் ஏற்பட்டால் சூடான பானத்தை அருந்துவது நோயின் தன்மையைக் குறைத்து விடுதலை அளிக்கும் என்று இங்கிலாந்தைச் சேர்ந்த கார்டிஃப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான மக்களை எரிச்சலுக்கும், சிக்கலுக்கும் உள்ளாக்கும் பொதுவான நோய் ஜலதோஷம். இதற்கு எளிய மருத்துவ வழி இருப்பதும், அது நிரூபிக்கப்பட்டிருப்பதும் மருத்துவ உலகின் மகத்துவம் என ஆச்சரியப்படுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

தொண்டை வலி போயே போச்சு

மூக்கு ஒழுகுதல், எரிச்சல், தும்மல், தலைக்கனம், சோர்வு, தொண்டை வலி என எதுவானாலும் சூடான தண்ணீரை அடிக்கடி குடியுங்கள் என அவர் அறிவுறுத்துகிறார் ஆராய்ச்சியாளர். குளிர் காலங்களில் சூடான பானங்களை அருந்தி வருவதனால் இத்தகை நோய்களின் தாக்கங்களும், அது தரும் விளைவுகளும் மிகவும் குறையும். சூடான பானங்களை இத்தகைய பருவ காலங்களில் அருந்துவதை மக்கள் வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும் என்கின்றனர் அவர்கள்.

நம்ம ஊர் கசாயம்,

வெளிநாட்டுக்காரர்கள் இப்பொழுதுதான் இதனை கண்டறிந்துள்ளனர். ஆனால் நம் ஊரிலோ ஜலதோஷம், தொண்டை வலி என ஏதேனும் வந்தால் கருப்பட்டி அல்லது பனை வெல்லத்தை தட்டிப்போட்டு சுடச் சுட ஒரு சுக்கு காப்பி போட்டுத் தருவது நம்முடைய பாட்டிகளின் கைப் பக்குவம். அதை குடித்தபின்னர் ஜலதோஷம், சளித் தொந்தரவு காணமல் போய்விடும். அதேபோல நாட்டுக்கோழியை சமைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடாக குடிக்க கொடுப்பதும் நம் ஊர் வழக்கம். சளியாவது ஒன்றாவது, அதெல்லாம் எட்டிக்கூட பார்க்காது.
Title: Re: சூடா குடிங்க! ஜலதோஷம் போயே போச்சு!!
Post by: Yousuf on February 13, 2012, 08:58:23 PM
ஜலோதோசத்திர்க்கு நல்ல ஒரு மருத்துவ குறிப்பு ரெமோ!

நான் இதை ஏற்கனவே செயல் படுத்தி பார்த்துள்ளேன் உண்மையில் சூடான பணத்தை அருந்துவதால் நல்ல நிவாரணம் கிடைத்துள்ளது.

நன்றி!
Title: Re: சூடா குடிங்க! ஜலதோஷம் போயே போச்சு!!
Post by: RemO on February 14, 2012, 12:00:10 AM
apa naanum ithai try panuren machi ini