ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 137
இந்த களத்தின்இந்த நிழல் படம் Sweetie அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F137.jpg&hash=6c39a3778995d7eff3eb4fb88971b1b266784352)
மதுவுக்கு மயங்காத ஆண் இருக்கலாம்
பொன்னுக்கு மயங்காத பெண் இருக்கலாம்
ஆனால் மொழி வரம்பின்றி கான மழையை
உலகெங்கும் பொழிய செய்த இசையே
உனக்கு மயங்காத மனம்தான் உண்டோ ?
சிணுங்கும் குழந்தையாய்
சீரும் கடல் அலையாய்
உயிரெனும் இதய துடிப்பாய்
எங்கும் குடிகொண்ட இசையே ..
உனக்கு இல்லை ஈடு இணையே ..
தனித்து வாடுகையில் தாயானாய்
துவண்டு கிடக்கையில் தந்தையானாய்
வலி தீர்க்கும் மருந்தானாய்
தினம் செவிக்கு நீயே விருந்தனாய்
உதிரத்திலும் கலந்து உயிரானாய் ..
திசை எங்கும் ஒலிக்கும் இசையே
என்னை கொள்ளை கொண்ட இசையே
என்னையே உன்னில் மறந்தேன்
உன்னை எண்ணியே கரைந்தேன்
உன்னோடு ஒன்றாய் கலந்தேன்..
இசையால் வாழ்கிறேன் ..
இசையோடு வாழ்கிறேன் ..
தமிழ் பிரியை மைனா