FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: micro diary on February 13, 2012, 06:32:00 PM

Title: காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
Post by: micro diary on February 13, 2012, 06:32:00 PM
நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

காலி பிளவரின் குணங்கள்:

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.


சீதளத்தை போக்கும் சுரைக்காய்.....

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.

ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.
Title: Re: காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
Post by: Yousuf on February 13, 2012, 08:34:05 PM
நல்ல உணவு குறிப்பு அதோடு ஆரோக்கிய குறிப்பும் கூட. பதிவிற்கு நன்றி டைரி!
Title: Re: காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
Post by: RemO on February 14, 2012, 12:29:24 AM
machi 
Quote
காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது
intha patchai ilaiyai sapdalaama
Title: Re: காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!
Post by: Global Angel on February 16, 2012, 03:21:03 PM
ல்ல பதிவு ..... ரெமோ ஆமா சாப்டலாம் எங்க வீட்ல வறை (நவறுவல் ) செய்து சாப்டுவோம் . நல்லா இருக்கும்