FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on March 01, 2017, 06:15:30 PM

Title: அறையில் ஆமை
Post by: SarithaN on March 01, 2017, 06:15:30 PM
என் அறையில் ஆமை

என் அறையில் ஆமைகள் உண்டு
தினமும் தாம்வாழும் தொட்டியில்
இருந்து தப்பிக்க எப்போதும்.....   
முயல்வதுமுண்டு

அவைகளது முயற்சி வெற்றியோ
தோல்வியோ ஆனால் இயல்பானது
ஒன்றின் மேல் ஒன்று ஏறுவதும்
விழுவதும் எனக்குதான் தொல்லை

பகலும் இரவும்...
வாழ்கின்ற தொட்டி கண்ணாடியில்
முட்டுவதும் மோதுவதும்
பெருத்த ஒலியெழுப்பும்...
சினம் உண்டாகும்..... 

நீண்ட காலம் பொறுத்து விட்டேன்
பொங்கி எழுகின்றேன்
சிறையில் வைத்த சிறு பிராணியிடம்
மனிதன் மிருகமாகிறான்.....

என்னை காணையில்...
தலையை வெளியே நீட்டும்
ஆமைகளின் நம்பிக்கை பெரிது.....
இப்போதோ கண்டதும் துஸ்ரனென
தலையை உள்ளே எடுக்கின்றது....

அவைகளின் சத்தம் தூக்கத்தை
கெடுத்து சிரமம் கொடுத்து வர
ஒரு எல்லைக்கு மேல்
பொறுத்திட முடியாமல்
ஆமைகளை அடித்துவிட்டேன்

அவைகளின் மேலோடு கடினமானவை
அதிலே அடித்தால் அவைகளுக்கு
வலிக்காதென எண்ணிவிட்டேன்
வலிகிறது போலும்.....

கடினமோ மென்மையோ
அதன் அதன் உறுப்புக்கள்
அவை அவைக்கு வலிக்குமே.....
ஆமைகள் இப்போது
என்னுடன் பேசுவதில்லை..... 

கவலையாக இருக்கிறது.....
முன்னரிலும் அதிகமாய் நேசிக்கின்றேன்
உணவு அதே அளவுதான்..... சுவையானது...
நேரம் அதிகம் செலவிடுகின்றேன்.....
ஆனாலும் அவையென்னை
ஏற்றிட மறுக்கின்றன.....

இழந்து போன அன்பை எப்போது எப்படி
மீட்பேனென தெரியவில்லை கவலை.....
காலம் கூட மருந்தாவதாக தெரியவில்லை
என்னுடயவைதான்...
என்னையே வெறுக்கின்றன.....

ஒருபோதும் அடிக்கப் போவதில்லை.....
அவைகளுக்கு எப்படி புரியவைப்பேன்
முடிந்தவரை அன்பு காட்டிவிட்டேன்.....
அவைகளால் என்னை மன்னித்து
ஏற்றிட முடியவில்லை.....

காதலி முகத்தை திருப்புவது போல
வலிக்கிறது.....
ஆமைகள் தலையை உள்வாங்கும் போது.....
முன்னரிலும் மும்மடங்கு சத்தம் இப்போது.....
அன்போடு ரசிக்கின்றேன்.....
காலம் கடந்த ஞானம்.....



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: அறையில் ஆமை
Post by: ரித்திகா on March 03, 2017, 02:02:11 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fengineering.srbiau.ac.ir%2Fimages%2Fengineering%2Ffa%2Fpage%2Feditor%2F2016%2F1473575009-flower.gif&hash=89bd0532c3582d47b1c4d1de92fe95c466affe03)

~ !! வணக்கம் அண்ணா ...!! ~
 
~ !! அழகான ...அருமையான  கவிதை ... !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் ...!! ~

~ !! வாழ்த்துக்கள் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fengineering.srbiau.ac.ir%2Fimages%2Fengineering%2Ffa%2Fpage%2Feditor%2F2016%2F1473575009-flower.gif&hash=89bd0532c3582d47b1c4d1de92fe95c466affe03)

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.julli.is%2Fjol%2Fengillmbaug.gif&hash=b2ca7ccf2d2f311eed44ffb96aaac5b2f27c12f5)
~ !! தங்கை ...
            ... ரித்திகா ... !! ~
Title: Re: அறையில் ஆமை
Post by: Maran on March 04, 2017, 03:34:13 AM


எனக்கு சில நேரங்களில் சில கவிதைகள் நெஞ்சை தொடும். அவ்வாறாக இக்கவிதையும் என் நெஞ்சில் சில நொடி நிசப்தத்தை தந்து சென்றது. இயல்பான வார்த்தைகளைக் கொண்டே கவிதையை நகர்த்தியுள்ளீர்கள். காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக என் கண்முன்னே நகர்ந்து சென்றது. அழகான சிந்தனை தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!



முயற்சி*

முயற்ச்சி - சந்திப்பிழை


Title: Re: அறையில் ஆமை
Post by: SarithaN on March 04, 2017, 04:09:36 AM
வணக்கம்.

தங்கையர் இருவருக்கும் நன்றிகள்...

காலம் ஒதுக்கி கவிதையை படித்த
அனைவருக்கும் நன்றிகள்...
Title: Re: அறையில் ஆமை
Post by: SarithaN on March 04, 2017, 04:24:49 AM
வணக்கம்... 

தோழனா ஆசானா எப்படி அழைப்பது...

தோழா மாறா என விழித்ததுண்டு...
தவறென படுகிறது.....

அவதான குறைவினால் சிலசமயம்
தமிழ் எழில் கெடுவதுண்டு என்னால்.....

சிலசமயம் அறியாமையும் உண்டு.....
பிழைகள் கண்டிடில் சுட்டிவிட்டு செல்லுங்கள்

திருத்தி கொண்டேன்... சொல்லியமைக்கு நன்றிகள்...
கவிதை பற்றிய கருத்துரையில் மகிழ்ச்சி.....
மிக்க நன்றி.