FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 28, 2017, 11:16:43 PM

Title: அன்பில் குறையில்லை
Post by: SarithaN on February 28, 2017, 11:16:43 PM
அன்பில் குறையில்லை


சரியாக படிக்கவில்லை.....
படிக்க பிடிக்கவும் இல்லை.....
 
உன்னை பார்த்தபின்பு
உனக்கு அனுப்பிய கடிதங்களை
இப்போது படிக்கின்றேன்..... 

படித்ததையே திரும்ப திரும்ப
ஆயிரம் முறை படிக்கின்றேன்

பதிலுக்கான அஞ்சலை தேடுகையில்
ஏமாந்து போகின்றேன்..... 

உனக்கு அனுப்பியதையே 
ஆயிரம் முறை படிக்கின்றேன்

அஞ்சலில் வாரி இறைத்த அன்பில்
குறையோ..... 
தவறோவென..... 
ஆயிரம் முறை படிக்கின்றேன்

அன்பில் குறையுமில்லை
அன்பில் குறைவுமில்லை

ஏனோ மௌனம்.....
ஆயிரம் கேள்விகள்.....
அங்கலாய்ப்புக்கள்.....  உள்ளம்வாட.....

இறந்துபோன ஒருவரை
உடல் கொண்டு உறுதிப்படுத்தா விடில்
ஏழு ஆண்டுகள் காத்திருந்த  பின்னர்
இறந்தோர் பட்டியலில் இணைக்கும் அரசு

காதலின் காத்திருப்புக்கும் ஏக்கத்துக்கும்
வரையறைதான் இல்லையே.....
காதலர்களே காத்திருங்கள் கண்ணீரோடு.....



குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: அன்பில் குறையில்லை
Post by: ரித்திகா on March 03, 2017, 02:28:13 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi399.photobucket.com%2Falbums%2Fpp75%2FTaii_02%2FGlitter%2FGlitter%2520Flowers%2FRose0060.gif&hash=4e9c7babcd28ef73670bcf9d20c89d6de6ff1eda)

~ !! சரிதன் அண்ணா ... !! ~
   
        ~ !! வணக்கம் !! ~
 ~ !! அழகான படைப்பு !! ~

 ~ !! அண்ணனின் அன்பிலும் குறையில்லை !! ~
~ !! கவிதையிலும் குறையில்லை !! ~

~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi399.photobucket.com%2Falbums%2Fpp75%2FTaii_02%2FGlitter%2FGlitter%2520Flowers%2FRose0060.gif&hash=4e9c7babcd28ef73670bcf9d20c89d6de6ff1eda)

(https://s-media-cache-ak0.pinimg.com/originals/a6/f6/da/a6f6da5f42f131fc126791b8d2443b07.gif)
~ !! ரித்திகா !! ~
Title: Re: அன்பில் குறையில்லை
Post by: SarithaN on March 04, 2017, 04:12:40 AM
வணக்கம். 

தங்கை ரீத்திக்கா, சகோதரி மைனா
இருவருக்கும் நன்றிகள்...

காலம் ஒதுக்கி கவிதையை படித்த
அனைவருக்கும் நன்றிகள்...