FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 28, 2017, 10:47:55 PM

Title: ஒதுங்கியே சென்றேன்
Post by: SarithaN on February 28, 2017, 10:47:55 PM
ஒதுங்கியே சென்றேன்


கோவம் உண்டு 
முரன்பாடு உண்டு
கேள்விகள் உண்டு
அதிர்ப்திகள் உண்டு   

அனைத்தும் கொண்டு
எதிர்த்திடல் வேண்டும்
இல்லையேல்.....

அன்பு உண்டு
ஒதுங்கிடல் வேண்டும்.

நின்று நிதானித்தேன்
சிந்தை தெளிய.....
ஒதுங்கிடல் நன்றென கண்டேன்.....  

நன்றிகெடா.....உள்ளம் கொண்டு
ஒதுங்கியே சென்றேன்.

எங்கே இருந்திடினும் நலமே நீ வாழ்க.


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: MyNa on May 03, 2017, 10:48:15 AM
Nallathoru karuthai sollum kavithai sarithan..
ஒதுங்கியே சென்றேன்  :)

Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: SarithaN on May 05, 2017, 11:05:38 AM
வணக்கம் மைனா

இந்த கவிதையும் காரணக்
கவிதை

கொண்ட நட்பின் அன்பின்
அடையாளத்தை வெளிப்படுத்தி
காண்பித்த சிலவரிக் கவிதை

இது செவிப்புலன் இழந்தவர் முன்
ஊதப்பட்ட சங்கானது

நன்றி மைனா
Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: ரித்திகா on May 05, 2017, 02:46:01 PM
(https://s10.postimg.org/aykhyct4p/sari.jpg)

Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: VipurThi on May 05, 2017, 03:13:13 PM
Sari anna :) intha kavithaiyin kaaranam enna nu enaku oralavuku puriyuthu na :( sila nerangal la ellam namaku ethirpa irukum pothu othungi selrathu nalla vishayam than aana ella neramum apdi othukam katathinga na :) oru thangaiya unga kavithaiku epavum aatharavu irukum :) ungal kavithai ku en vazhthukkal anna :) eluthikite irunga epavum pola :)
Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: SarithaN on May 10, 2017, 08:06:04 PM
வணக்கம் தங்கச்சி

நானும் எழுதினேன்
நீயும் தெளிவாக உணர்ந்து
கருத்திட்டாய்

ஆனால்

சொன்னதுபோல் செய்திடவா
முடிகிறது முழுமையாய்

மனிதனுள்
கர்வம் அகம்பாவம் மமதைகள்
நிறைந்து வழிகிறதே

நானும் அடிமையாகிப் போனேன்
மீண்டு வரத்தான் முயல்கின்றேன்

உனது கருத்துக்கு நன்றி தங்கையே
Title: Re: ஒதுங்கியே சென்றேன்
Post by: SarithaN on May 10, 2017, 08:25:00 PM
வணக்கம் விபூமா

உனது கருத்தை படித்தேன் மகிழ்ச்சி நன்றி

அன்றே நான் பதில் உரைத்தால் நிதானம்
கெட பேசி இருந்திருக்கலாம் எனவே மௌனம்
காத்தேன்

சரியோ தவறோ யாரது கவிதையானாலும்
மனது நம்மை குற்றவாளியென தீர்க்காமல்
உண்மையாய் இருப்பது சிறப்பு

அண்ணனே ஆனாலும்
தவறை தவறென சொல்லுமா
தவறில்லை

அனைவரது எழுத்துக்களுக்கும் பதிவுகளுக்கும்
வரவேற்ப்பும் வாழ்த்துக்களும் இருக்கட்டும்

உனது புரியும் திறனில் பெருமகிழ்ச்சி எனக்கு
விமர்சனங்கள் என எழுந்தால் முறையாக
நாகரீகமாக பதிவுகளை மேற்கொள்ளல் மேன்மை

உனக்கு எனது மகிழ்வான நன்றி தங்கையே