FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SarithaN on February 28, 2017, 10:19:40 PM
-
பிள்ளைகளை அடிக்காதீர்கள்
பிள்ளைகளை அடிக்காதீர்கள்
அடித்தேதான் ஆகவேண்டுமெனும்
இறுக்கம் ஏற்பட்டால்.....
ஏற்பட்ட இறுக்கம் தீர
பிள்ளைகளை அடித்து
இன்புறுங்கள்..... ஆனால்
பிரம்பினால் அடியுங்கள்....
கைகளால் கால்களால்
அடிப்பதை நிறுத்துங்கள்.....
கைகளின் கால்களின்
பரப்பளவு பெரிது.....
வலிகள் பக்கவிளைவுகள்
பெரிதாகும்.....
வெறி கொண்டு தாக்கையில்
உடல் நோயாகும்.....
கண்டிப்பதன் நோக்கத்தை
உணர்த்தியே கண்டியுங்கள்.....
பிள்ளைகள் கூட.....
பெரியவர் அடித்ததை
மன்னிக்காலாம்.....
மறக்கலாம்.....
நன்மைக்காகவே
கண்டிக்கப் பட்டதாயும்
உணரலாம்.....
ஆனால் உடலோ.....
உலலின் உள்ளுறுப்புக்களே.....
தண்டிக்க பட்டதை.....
நன்மைக்கென உணராது.....
பாதிப்பு பாதிப்பே
வலிகளும் நோய்களும்
ஆயுளை குறைக்கும்.....
பிள்ளைகளை இழக்க நேரும்.....
கவலையும் வலிகளும்
நிரந்தரமாகும்..... கண்ணீரோடு.....
உணராது போனால் துயரமே மீதமாகும்!.
குறைகள் என்னுடையவை நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
-
வணக்கம் சரிதான். அருமையான கவிதைகள். உண்மைதான் இப்படியும் நடக்கிறது சில பள்ளிகளில் ,வருந்துகிறேன். உங்கள் ஒவ்வொரு கவியும் வித்தியாசைகளை கொண்டது. தொடர்தும் உங்கள் கவி பயணம். வாழ்த்துக்கள்